/ செய்திகள் / பா.ஜ.,வில் செயல்படாத சக்திகேந்திர பொறுப்பாளர்கள் மாவட்ட, மண்டல நிர்வாகிகள் மீது அதிருப்தி

பா.ஜ.,வில் செயல்படாத சக்திகேந்திர பொறுப்பாளர்கள் மாவட்ட, மண்டல நிர்வாகிகள் மீது அதிருப்தி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: தமிழக பா.ஜ.,வில் மாவட்ட, மண்டல நிர்வாகிகளின் கண்காணிப்பின்மையால் சக்தி கேந்திரா அமைப்பினர் சரியாக இயங்காதது குறித்து நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர். தமிழக பா.ஜ.,வில் மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகளுக்கு கீழ் ஓட்டுச் சாவடிகளில் கிளை அமைப்பு நிர்வாகிகள் உள்ளனர். இவற்றில் 3 ஓட்டுச்சாவடிகளுக்கு ஒரு சக்திகேந்திர பொறுப்பாளர் செயல்படுகிறார். இவ்வகையில் ஒரு தொகுதி யில் 300 ஓட்டுச்சாவடிகள் இருந்தால் அங்கு 100 சக்திகேந்திர பொறுப் பாளர்கள் உள்ளனர். ஓட்டுச்சாவடிகளில் கிளை அமைப்பினரை துாண்டி செயல்பட வைப்பது, கண்காணிப்பது என செயல்படுவர். அவ்வகை யில் பொது மக்களை ஓட்டுச்சாவடிக்கு கொண்டு சேர்க்கும் இடத்தில் இவர்கள் உள்ளனர். எனவே இவர்களுக்கு கட்சி யின் இயக்கத்தில் முக்கிய பங்கு உள்ளது. இவர்களை எல்லா பகுதிகளிலும் மண்டல, மாவட்ட நிர்வாகிகளே நியமித்துள்ளனர். அத்துடன் சரி. மாநில அளவில் தலைமையகத்தில் இருந்து சக்திகேந்திர பொறுப்பாளர்களை அலைபேசியில் தொடர்பு கொண்டால், அவர்கள் பெரும்பாலோர் போனை எடுப்பதில்லை. எடுத்தாலும் தாங்கள் என்ன பொறுப்பில் இருக்கிறோம், எப்போது, யார் நியமித்தார்கள் என்று கூட தெரிவதில்லை. அந்தளவு மண்டல, மாவட்ட நிர்வாகிகள் தங்களுக்கு வேண்டியவர்கள், உறவினர்கள், செயல்படாமல் உள்ளவர்களை நியமித்துள்ளனர். சரிவர செயல்படாததால், சக்திகேந்திர பொறுப்பாளர் பட்டியல் மாநில அளவில் 5 முறைக்கு மேல் மாற்றப்பட்டுள்ளது. மேலும் இவர்களை வைத்து ( மாநில அளவில் தொகுதிக்கு 100 பேர் என்றாலும் 234 தொகுதியிலும் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருவர்) உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் சேலத்தில் மாநாடு நடத்த முயன்றனர். இதற்கான ஏற்பாடுகளில் இறங்கியபோது சக்திகேந்திர பொறுப்பாளர்களில் பலரின் செயல்பாடுகள் சரியில்லை என்று அறிந்து மாநாட்டையே ரத்து செய்துள்ளனர். சமீபத்தில் சக்திகேந்திர பொறுப்பாளர்கள் குறித்து ஆய்வு செய்வதற்காகவே மாவட்ட தலைவர்கள் மட்டும் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் மதுரையில் நடந்துள்ளது. சக்திகேந்திர பொறுப்பாளரை செயல்பட வைப்பதன் மூலமே பா.ஜ., இந்த தேர்தலில் சிறப்பாக செயல்பட முடியும் என கட்சியினரே புலம்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Kasimani Baskaran
பிப் 07, 2026 11:48

அண்ணாமலைக்கு முன், அண்ணாமலைக்கு பின் பாஜக தேர்தலில் கூட்டணி மூலம் வாக்கு பெறுவதை மய்யமாக வைத்து திராவிட ஸ்டயில் அரசியல் செய்கிறார்கள். இது பாஜக என்ற தேசத்தை நேசிக்கும் கட்சிக்கு அழகல்ல. அண்ணாமலையின் தலைமையில், உழைப்பில் கட்சியை வளர்த்து திராவிடம் என்கிற மாயையை நிரந்தரமாக உடைக்க வேண்டும்.


Thravisham
பிப் 07, 2026 13:59

உண்மையே. ஆனால் பாஜக அண்ணாமலையின் தலைமையில் ஆட்சி அமைக்க 2036ல் ஆகும். அதற்குரிய கட்டமைப்பை பாஜக உருவாக்க 5 வருடங்கள் வேண்டும். தற்போதைய தேவை திருட்டு த்ரவிஷ ஊழல்மிகு முதல் குடும்பத்தை ஒழித்தே தீர வேண்டும். தற்போதைய தேர்தலுக்கு பின் அமித்ஷா முக்கியமான துறைகளை அண்ணாமலையிடம் ஒப்படைப்பார் என்று நம்புகிறோம்.


RAVINDRAN.G
பிப் 07, 2026 11:35

சக்தி கேந்திரா அமைப்பு? அப்படி ஒன்னு இருக்கு என்பதே இப்போதான் தெரிகின்றது. நல்ல தலைவர் அண்ணாமலையை விட்டுட்டு நைனார் நாகேந்திரனை போட்டால் எப்படி சரிவரும்? தேர்தலுக்காக போடப்பட்ட கூட்டணி என்பது சரி இல்லை. கட்சி வளரனும். அதுக்கு அண்ணாமலைதான் இப்போதைக்கு சிறந்த தேர்வு. அண்ணாமலை இருந்தவரை கட்சி உயிர்ப்புடன் இருந்தது?


Field Marshal
பிப் 07, 2026 12:40

பிஜேபி ஒரு இயக்கம்.. தனி நபர் வழிபாட்டுக்கு இடமில்லை .


தியாகு
பிப் 07, 2026 13:42

தமிழ்நாட்டு அரசியலுக்கு இயக்கமெல்லாம் ஒத்துவராது. தனி மனித தலைமைதான் ஒத்துவரும். அண்ணாமலை இல்லாவிட்டால் இன்னும் இருபது வருடங்கள் ஆனாலும் தமிழக பாஜக நோட்டாவுடன்தான் போட்டிபோடணும்.


Thravisham
பிப் 07, 2026 15:31

மிகவும் சரி. உயிர்ப்புடுன் உள்ள அண்ணாமலையின் தலைமையைத்தான் மக்கள் விரும்புகின்றனர் இப்போதும்.


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
பிப் 07, 2026 10:44

இதெல்லாம் ஓவர், அவங்க கட்சில தலீவர் மட்டுமே


sundarsvpr
பிப் 07, 2026 10:41

சரியான தலைமை கட்சியில் இல்லையெனில் மக்களிடம் எடுபடாது பாரதிய ஜனதா கட்சியில் தலைமையில் மாற்றம் தேவையா என்பதனை கட்சி மேலிடம் கவனம் செலுத்தவேண்டும். கட்சியில் பிரச்சாரத்தை குறைத்து நல்ல தலைமையை அமைக்கவேண்டும். எல்லா அரசியல் கட்சிகளில் யார் முதல்வர் என்பதனை கூறமுடியும். ஆனால் பி ஜெ பி யில் கூற இயலாது. இது அரசியலில் அவசியம்.


Svs Yaadum oore
பிப் 07, 2026 10:37

இந்த கட்சி அரசியல் என்றாலே ஜாதி பணம் காசு ஊழல் பதவி ரவுடித்தனம் அராஜகம் டாஸ்மாக் என்று பல சிக்கல்கள் உள்ளது .....இதில் தமிழ் நாட்டில் இப்போதுள்ள ப ஜா க வில் உள்ள பல தலைவர்கள் திராவிட கட்சியில் இருந்து வந்தவர்கள் அல்லது திராவிட கட்சியுடன் தொடர்பில் உள்ளவர்கள் ...இவர்களால் கட்சியை வளர்க்க முடியாது ....வளர்க்க முயன்ற அண்ணாமலையையும் ஒதுக்கி விட்டார்கள் ....கட்சி அரசியல் இல்லாமல் இங்குள்ள ஹிந்து முன்னணி மற்றும் மற்ற ஹிந்து இயக்கங்களுக்கு ஆதரவு கொடுங்கள் .....தமிழ் கலாச்சாரம் சைவ சமயம் தமிழ் மொழி பாரம்பரியம் காப்பாற்ற இது ஒன்றுதான் வழி ....இல்லை ஒன்றால் இது மொத்தமும் திராவிடனுங்க அழிச்சுடுவானுங்க .....


Venugopal S
பிப் 07, 2026 10:29

சக்தி கேந்திரா அமைப்பு என்றால் என்ன என்று கேட்பவர்கள் தான் தமிழக பாஜகவில் அதிகம்!


Thravisham
பிப் 07, 2026 14:02

ஆனால் 200 ரூவா + ஊசுபோன பிரியாணி என்றால் ஆஹ் என வாயை பிளந்து நிற்பது உளுத்து போன பருப்புகள்


Svs Yaadum oore
பிப் 07, 2026 10:27

மண்டல மாவட்ட நிர்வாகிகள் அவர்களுக்கு வேண்டியவர்கள் உறவினர்கள் மாமன் மச்சான் என்று அவர்கள் சொந்தங்களை சக்தி கேந்திராவுக்கு நியமனம் செய்துள்ளார்களாம் .....


VENKATASUBRAMANIAN
பிப் 07, 2026 08:15

ஆதாயம் இல்லாமல் உழைக்க மாட்டார்கள்.


தியாகு
பிப் 07, 2026 07:26

இருந்த ஒரே ஒரு மக்கள் செல்வாக்கு கொண்ட அண்ணாமலையை ஜாதி அரசியலாலும், பொறாமை அரசியலால் திட்டமிட்டு ஓரம் கட்டவேண்டியது, இப்போது கள பணிகள் செய்ய ஆளை தேடுவது. அப்போது தெரியும் அண்ணாமலையின் மகத்துவம்.


sankaranarayanan
பிப் 07, 2026 07:10

சக்தி இல்லையேல் சிவன் இல்லை என்பதுபோன்ற இந்த சக்திகேந்திரங்கள் ஒழுங்காக கட்சிக்கு உழைக்கவில்லையென்றால் கட்சி எடுபடாது ஆகையால் சக்தியை கொடுங்கள் கட்சியை வலுப்படுத்துங்கள்