/ செய்திகள் / தமிழக சட்டசபை தேர்தல் சுறுசுறு: பேச்சுவார்த்தை குழு அமைத்த பாஜ

தமிழக சட்டசபை தேர்தல் சுறுசுறு: பேச்சுவார்த்தை குழு அமைத்த பாஜ

சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் பல அமைப்புகளை இணைக்க பாஜ பேச்சு வார்த்தை குழு ஒன்றை அமைத்துள்ளது.தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக பாஜ கூட்டணி அமைத்துள்ளன. கூட்டணியில் அன்புமணியின் பாமக, தமாகா, அமமுக உள்ளிட்ட பல கட்சிகள் இடம்பெற்று உள்ளன. இந்த கூட்டணியில் மேலும் சில கட்சிகள், அமைப்புகள் சேரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதுகுறித்து தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கை; வருகின்ற வருகின்ற சட்டமன்ற தேர்தல்-2026 சிறப்பாக எதிர்கொண்டு, மகத்தான வெற்றியினை பெற்றிடும் வகையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் பல அமைப்புகள் இணைய விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், அமைப்பு தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வலுசேர்த்திட பாஜ சார்பில் மாநில குழு அமைக்கப்படுகிறது.குழு விவரம்: தலைவர் - வி.பி..துரைசாமி, முன்னாள் எம்.பி., மாநில துணைத் தலைவர்துணைத் தலைவர்- பாலச்சந்திரன், முன்னாள் டி.ஜி.பி, மாநில செயற்குழு உறுப்பினர்இவ்வாறு அந்த அறிக்கையில் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !