/ கருத்துக்கணிப்பு / தினமலர் - சாணக்யா கருத்துக்கணிப்பு: பரபரப்பு தகவல்

தினமலர் - சாணக்யா கருத்துக்கணிப்பு: பரபரப்பு தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தினமலர் - சாணக்யா இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவுகள் வெளியாகி உள்ளன.இந்த கருத்துக்கணிப்பானது சேப்பாக்கம், கோவை வடக்கு, திருப்போரூர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட சட்டசபை தொகுதிகளில் ஜனவரி மாதம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. 3821 வாக்காளர்களிடம் இது நடத்தப்பட்டது.அதில் வெளியான தகவல்1. கடந்த லோக்சபா தேர்தலில் யாருக்கு ஓட்டு போட்டீர்கள்? திமுக கூட்டணி- 43 %அதிமுக கூட்டணி- 30 %பாஜ கூட்டணி -14 %நாதக- 13 %2.மத்திய அரசின் செயல்பாடு எப்படி? சூப்பர் -29 %மோசம் -31%பரவாயில்லை-40%3.பிரதமர் மோடி செயல்பாடு எப்படி சூப்பர் -32%மோசம் -30 %பரவாயில்லை-38%4.மோடி அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறதா ஆம் -32 %இல்லை-32%ஓரளவு தெரியவில்லை -36%5.திமுக அரசின் செயல்பாடு எப்படி? சூப்பர் -22 %பரவாயில்லை -30மோசம்- 48%6.முதல்வர் ஸ்டாலினின் செயல்பாடு எப்படி? சூப்பர் -26%பரவாயில்லை -30மோசம்-44%7.துணை முதல்வர் உதயநிதி செயல்பாடு எப்படி? சூப்பர் -20 %பரவாயில்லை-29%மோசம் -51%8.தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு எப்படி? சூப்பர் -17 %பரவாயில்லை -28%மோசம் -55%https://x.com/dinamalarweb/status/2016349835377705106?s=20விஜய் செயல்பாடு, மக்கள் எப்படி அவரை பார்க்கிறார், உங்களுக்கு பிடித்த முதல்வர் வேட்பாளர் , இன்று தேர்தல் நடந்தால் யாருக்கு ஓட்டுப்போடுவீர்கள் என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கான விடை நாளை(ஜனவரி 28). சிறப்பு அலசல் காண லிங்க் கிளிக் செய்யுங்கள்:https://www.youtube.com/watch?v=ddtkhONL3Zc


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 50 )

pkgk
ஜன 29, 2026 13:56

அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களுக்கு நேர்மறையானதும் எதிர்மறையானதும் பல்வேறு வகைகளில் பங்களிக்கின்றன. DMK முழுவதும் எதிர்மறையான செயல்களை மட்டுமே செய்தது என்று கூறுவது நியாயமல்ல. உண்மையில், அவர்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக சிறப்பான பங்களிப்புகளை செய்துள்ளனர். சில குறைகள் இருப்பது இயல்பானதே, ஆனால் அவற்றை எதிர்க்கட்சிகள் அரசியல் பலனுக்காக அதிகமாக வெளிப்படுத்துகின்றன. என் பார்வையில் எந்தக் கட்சியும் அல்லது தலைவரும் 100% பூரணமாக இருப்பதில்லை. நாடு முழுவதும் ஆட்சி செய்த அனைத்து அரசுகளுக்கும் பலவீனங்களும் பலங்களும் உள்ளன. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் திரு. ஸ்டாலின் தமிழ்நாட்டிற்காக குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை செய்துள்ளார். அவர் மீண்டும் அடுத்த காலத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டால், அந்த குறைகளை குறைத்து, நல்ல முயற்சிகளை மேலும் வலுப்படுத்துவார் என்று நான் நம்புகிறேன். மிகச் சிறந்த பணியைச் செய்துள்ளீர்கள், திரு. ஸ்டாலின்.


என்றும் இந்தியன்
ஜன 28, 2026 17:29

திமுக ஆட்சியால் எனக்குத்தெரிந்தது. இதனால் எனக்கு மிகுந்த உற்சாகம் வந்தது. 1 எதுக்குமே லாயக்கில்லாத ஒரு அறிவிலி கூட டாஸ்மாக்கினாட்டின் முதலமைச்சர் ஆக முடியும் 2 மன்னார்குடி-சென்னை ரயிலில் டிக்கட் வாங்கி செல்லக்கூட காசில்லாத ஒரு ரூ 3.25 லட்சம் கோடி சொத்து சேர்க்கமுடியும் 3 நீங்கள் கிறித்துவராக இருந்தாலும் இந்து கோவில்கள் உரிமையாளர் ஆகை அதில் வரும் வருமானம் அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும், அதை நீங்கள் உங்கள் தனக்கும் முதல்வருக்கும் மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ள முடியும் 4 அறிவிலிகள் இந்து எதிர்ப்பாளர்கள் இந்து நாட்டில் இருந்து கொண்டு இந்துவை தன் கீழ் போட்டு மிதிக்க முடியும்


ஆரூர் நாதன்
ஜன 28, 2026 15:56

மோடி அவர்கள் தமிழகத்தில் ஆங்கிலத்தில் பேசினால் ஓட்டு எண்ணிக்கை அதிகரிக்கும்


SULLAN
ஜன 28, 2026 15:24

தமிழக சட்ட சபை எல்லாம் தொங்காது?? கருத்து திணிப்பு தொங்கும்...


Sridhar
ஜன 28, 2026 13:39

மோடியோ அல்லது மற்ற வடஇந்திய பிஜேபி தலைவர்களோ தமிழ்நாட்டுக்கு வந்து பிரச்சாரம் செய்யும்போது குறைந்தபட்சம் ஆங்கிலத்தில் பேச முயற்சித்தால், ஓரளவு வோட்டு கிடைக்குமென்று எதிர்பார்க்கலாம். இவர்கள் ஏன் கேலிக்குள்ளாகும் வகையில் ஹிந்தியில் பேசுகிறார்கள்? அவர்கள் பேசுவது சுத்தமாக கூட்டத்திலிருக்கும் ஒருவருக்கும் புரிவதில்லை. புரிந்த ஒருசில வார்த்தைகள் கேலிக்குரிய சொற்களாக இருக்கின்றன. மொழிபெயர்ப்பாளர் உரையை முடிக்கும்போது அதன் சாராம்சமே நீர்த்துபோய்விடுகிறது. மோடி முன்பொருமுறை துக்ளக் விழாவில் ஆங்கிலத்தில் பேசியிருக்கிறார். முயன்றால் அதை தொடரமுடியும். ஏன் அந்நியப்பட்டு தொடர்பில்லாமல் நிற்பதற்கு இவ்வளவு தூரம் வந்து பிரச்சாரம் எய்யவேண்டும்? அதற்க்கு பேசாமல் உள்ளூர் தலைவர்களையே பிரச்சாரத்திற்கு அனுப்பலாம்


K V Ramadoss
ஜன 28, 2026 16:16

அந்நியர் யார் ? ஆங்கிலமா அல்லது ஹிந்தியா ?


Barakat Ali
ஜன 28, 2026 12:57

நாளை டிவிகே பற்றிய கணிப்புகள் எப்படி வரும் என இன்றே ஊகிக்க முடிகிறது .... உங்களது இந்த கணிப்புகள் அடிப்படையில் பார்த்தால் தொங்கு சட்டசபை உருவாக அதிக வாய்ப்பு .....


Barakat Ali
ஜன 28, 2026 12:55

உண்மையில் மக்கள் திமுக மீது மிகவும் கோபமாக, அதிருப்தியுடன் இருக்கிறார்கள் ... திமுக வருத்தப்பட்டு சோர்ந்துவிடக்கூடாது என்பதால் கொஞ்சம் அவர்களுக்கு ஆறுதலாக சில அம்சங்கள் வெளியிடப்பட்டுள்ளன ...


ஆகுயர்த்தோன்
ஜன 28, 2026 12:27

நடக்கப்போவது அசெம்பிளி எலேச்டின் இங்கு மோடி நிற்க போகிறாரா என்ன, மோடியை நீங்கள் நியாபக படுத்தினால் வோட்டு இன்னும் குறையும், மோடி இங்கு வந்தாலே DMK வுக்கு வோட்டு சேகரிக்க வந்தது போல தான் இருக்கு பாவம் நீங்கள் ஒன்று நினைக்க நீங்கள் இரண்டு மாதம் முன்னர் ஒரு மேடையில் பேசினீர்கள் DMK கூட்டணியை இன்றய தேதியில் வெற்றி கொள்ளுவது கடினம் அது தான் உண்மை


Modisha
ஜன 28, 2026 13:59

தேச விரோதிகளின் வெறுப்பை, கோபத்தை சம்பாதித்தவர்


baala
ஜன 28, 2026 12:02

பொய்யானவர்கள் சர்வே எடுக்கக்கூடாது.


Modisha
ஜன 28, 2026 12:49

உங்களுக்கு லயோலா சர்வே மற்றும் நக்கீரன் சர்வே இருக்கே, இதை ஏன் படித்து நேரத்தை வீணாக்குகிறீர்கள்.


visu
ஜன 28, 2026 13:03

உண்மையான சர்வே உ பி க்களுக்கு உறுத்தத்தான் செய்யும்


sathya / ilangai
ஜன 28, 2026 11:57

For every election Loyola college use to do this type of survey which is always biased. Pandeyji made good effort in bringing the truth through dinamalar. Truth alone prevails. Long live dinamalar