மகளிருக்கு ரூ.5 ஆயிரம்: எதிர்க்கட்சியினர் சொல்வது என்ன?
சென்னை: சட்டசபை தேர்தலை முன்னிட்டு கோடை சிறப்பு தொகுப்பு ரூ.2 ஆயிரம் உட்பட ரூ.5 ஆயிரம் இன்று (பிப்ரவரி 13) மகளிர் உரிமைத்தொகை பயனாளிகளுக்கு வங்கியில் வரவு வைக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக தலைவர்கள் கருத்துகள் தெரிவித்துள்ளனர். அதன் விபரம் பின்வருமாறு;
பயத்தில்
அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தேர்தல் தோல்வி பயம்,முதல்வரை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது. 28 மாதங்களாக "1000 ரூபாய்" கொடுக்காமல் இழுத்து அடித்த ஸ்டாலின் அரசு, தற்போது மூன்று மாதத் தொகையோடு சேர்த்து "கோடைக்கால சிறப்புத் தொகை" கொடுக்கிறாராம்.
2024, 2025 ஆண்டுகளில் நமக்கு கோடைக்காலமே வரவில்லையா? சிறுமி முதல் மூதாட்டி வரை எந்தவொரு பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகத்தை சீர்குலைத்துவிட்டு, இப்போது "தேர்தல் நேரத்து பணம்" வரவு வைக்கும் இந்த பேட்ச்ஒர்க் வேலையை தமிழக பெண்கள் நம்பி விடுவார்களா என்ன?
செப் 2023 முதல் இதுவரை உங்கள் அரசு கொடுத்த தொகை ரூ. 34,000! ஆனால், உங்கள் ஆட்சியால் ஒவ்வொரு குடும்பமும் இழந்த குறைந்தபட்சத் தொகையே "ரூ.3,50,000"! இதை வீடு வீடாக சென்று அதிமுக அம்பலப் படுத்தி வருவதைக் கண்ட பயத்தில் வருவது தானே இந்த அறிவிப்பு?
இப்போது "மாதம் 2000 ரூபாய்" என்று நான் அளித்த அதிமுக தேர்தல் வாக்குறுதியைக் கண்டதும், வரும் 2026 சட்டசபை தேர்தல் பயத்தில், இந்த அறிவிப்பு வெளியில் வருகிறது.யாரும், எந்தவொரு திட்டத்தையும் தடுக்காத போதிலும், நீங்களாக வந்து "ஐயையோ முடக்கப் பார்க்கிறார்கள்" என்று சொல்வதைப் பார்த்ததால் வேடிக்கையாக இருக்கிறது. "அனைத்து குடும்ப அட்டைக்கும்" என்று வாய்கிழிய அளித்த வாக்குறுதியை 5 ஆண்டுகளாக நிறைவேற்றாமல், தகுதியானவர்களுக்கு மட்டும் என சொல்லி ,1 கோடி தமிழ்ப் பெண்களை நிராகரித்துள்ளீர்கள்.
இன்னும் மூன்று மாதங்களுக்குள் அமையவுள்ள அதிமுக ஆட்சியில், தமிழகப் பெண்களுக்கு "குல விளக்குத் திட்டம்" முலம் அனைத்து குடும்பத் தலைவிக்கும் "மாதம் ரூ.2000" என்று நான் அளித்த வாக்குறுதியானது, அதிமுக ஆட்சி அமைந்தவுடன் அமல்படுத்தப்படும்.
தவெக தான் போட்டி
தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: புதிதாகக் கோடைக் காலச் சிறப்புத் தொகை ரூ.2000 எனத் திடீரென அறிவித்தது எப்படி? இந்த ஆண்டு மட்டும்தான் கோடைக் காலம் வருகிறதா என்ன? வழக்கமாக மாதந்தோறும் 15ஆம் தேதி வரவு வைக்கப்படும் மகளிர் உரிமைத் தொகை, குறிப்பாக இன்று 13ஆம் தேதி வரவு வைக்கப்பட்டு அறிவிக்கப்படுவது ஏன்?
இத்தனைக்கும் காரணம் வீதிக்கு வீதி மட்டுமில்லாமல், வீட்டுக்கு வீடு ஒலிக்கும் விசில் சத்தம்தான். குறிப்பாக, ஒட்டுமொத்த மகளிரின் விசில் சின்னத்திற்கான பேராதரவு அலையைக் கண்டு உண்டான அச்சம் மட்டுமே இதற்குக் காரணம். ஒன்று மட்டும் உறுதியாகத் தெளிவாகிறது. நாம் மட்டுமே இவர்களுக்கு அச்சமூட்டச் செய்யும் வெற்றிக்கான மக்கள் சக்தி. அது மட்டுமா?
இவர்களை வலிய நல்லது செய்ய வைக்கும் வலிமையான அரசியல் பெருவிசையும் நாம்தான். அதுமட்டுமா? தி.மு.க. தனக்குப் போட்டியாகக் கருதுவதும் தன்னை வெல்லப் போகும் ஒரே மக்கள் சக்தி எனக் கருதுவதும் த.வெ.க.வைத் தான் என்பதை இந்த அறிவிப்பின் மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் உறுதி செய்துள்ளார்.
எனவே, தாய்மார்களே, அக்கா, தங்கைகளே, உங்கள் மகன், உங்கள் அண்ணன், உங்கள் தம்பி விஜயின் அரசியல் வருகையின் தாக்கத்தால் கிடைத்த இந்தத் உரிமைத் தொகையைச் சந்தோசமாக வாங்கிக்கொள்ளுங்கள்.
நம் ஆட்சி மலர்ந்ததும், அரசியல் ஆதாயத்திற்காகச் சுயநலமாகச் செயல்படும் இவர்களைப் போலன்றி, உண்மையான அக்கறையுடன் நம் மக்களுக்கு அனைத்து வகைகளிலும் அனைத்து வழிகளிலும் நல்லது மட்டுமே செய்வோம். அது உறுதி.
திமுக அரசுக்குத் தேர்தல் தோல்விக்கான திகில் ஊட்டும் அளவிற்கு விசில் ஊதும் தமிழ்நாட்டு மகளிருக்கு என் மனமார்ந்த நன்றி. இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய் கூறியுள்ளார்.
Advertisement
உண்மையில் எடப்பாடி அறிக்கையைப் படிக்கும் போது சிரிப்பு தான் வருகிறது... கண்டிப்பாக அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக தலைமையில் ஆட்சி அமைந்து, தான் தான் முதல்வர் என்று நம்பிக் கொண்டுள்ளார்... பாவம்... களநிலவரம் தெரியாமல்...
சும்மா தூக்கி விடு வரப்போறவன் மாறடிக்கட்டும். ஆப்பூ விடியலுக்கு நிச்சய மாயிடிச்சுட்டு ஊ ஊ தான் என்று.
மக்கள் வரி பணத்திலிருந்து மாதந்தோறும் பெண்களுக்கு உரிமை தொகை என்ற பெயரில் வழங்கி கஜானாவை காலி செய்து வரும் தி.மு.க. வை போல், அதி.மு.க.வும் பெண் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் அறிவிப்பை தேர்தல் வாக்குறுதியாக அளித்து ஆசை காட்டி வருகிறது. இந்த இரண்டு கட்சிகளுக்கும் உண்மையிலேயே உதவ வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் சொந்த கட்சி பணத்திலிருந்து தகுதி நிர்ணயம் செய்யாமல் ஓட்டுரிமை உள்ள பெண் வாக்காளர்கள் அனைவருக்கும் ஐந்து ஆண்டுகள் ஓவ்வொரு மாதமும் ஐநூறு ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்குமா?
மது குடித்து வாகனம் ஓட்டுவோர் வழக்கு மிகவும் அதிகமாக வேண்டுமென்றே பதிவு செய்யப்படுகிறது.. இது குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் பேசினால் நன்றாக இருக்கும்.. அரசே மதுபானம் விற்று அதை அங்கேயே குடிக்க வைத்து காவலர்கள் மூலமாக வழக்குப் பதிவு செய்வது இந்த ஆட்சியில் மிகவும் அதிகம்.. எதிர்க்கட்சி தலைவர்கள் இதையும் கவனித்தால் நன்றாக இருக்கும்..
அரசு பணத்தை வாரியிறைத்து ஓட்டுக்களை பெற்று ஆட்சியை பிடிப்பதை விட இரவு தொழில் நடத்தி சாம்பாதிக்கலாம்.
கல்லு நம்மளுது இல்ல. மாங்காயும் நம்மளுது இல்ல. கல்ல எடுத்து மாங்காயை அடிப்போம். மாங்காய் விழுந்தா டபுள் சந்தோஷம். கல்லு மட்டும் விழுந்தா நஷ்டமில்லே. அதுனால கஜானா நம்ம கையில இருக்கு. அள்ளி வுடு. எவன் அப்பன் வூட்டு பணம். எவன் கேக்க போறான்.
திருட்டு தீயமுக காரனுங்களுக்கு கீழ் தட்டு மக்கள் பணம்ன்னா பல்லை இளிப்பாங்கன்னு. அதுவும் இப்போ குடுக்குற பணம் சுட சுட கிடைக்கும் சாப்பாடு மாதிரி.நாம யாருமே இதுக்கு பணம் எங்கேயிருந்து எடுத்தார்கள் ன்னு கேக்கலை. கவர்மெண்ட் பணத்தை தான் அள்ளி உடுறாய்ங்க ன்னு ஒவ்வொரு அரசியல் வியாதிக்கும் தெரியும். எந்த வியாதியாவது இதை எதிர்த்து கேட்டாக்க கேக்குற வியாதிக்கு ஓட்டு போயிடும்ன்னு பயம் இருக்கு. அம்புட்டுதேன்.

பிஹாரில் நிதிஷ் செய்ததை அப்படியே ஸ்டாலின் இங்கு காப்பி அடிப்பார் என்று முன்பே சொல்லப்பட்டது. ஆனால் தேர்தல் கமிஷனை அங்கு கோட்டைவிட்டதை இங்கு பிடிக்கும். ஸ்டாலினின் இந்த நாடகத்தை தடுத்து நிறுத்தும். ஐந்தாயிரம் கொடுக்க அனுமதிக்கப்படாது. மக்களின் வரிப்பணத்தை ஸ்டாலின் வீணடிப்பதை தேர்தல் கமிஷன் உடனடியாக நிறுத்தும்.