/ செய்திகள் /  அரசுக்கு எதிராக பழனிசாமி போராடாதது ஏன்?

 அரசுக்கு எதிராக பழனிசாமி போராடாதது ஏன்?

தி.மு.க., கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்டுகள் மக்கள் பிரச்னைகளுக்காக போராடவில்லை என அ.தி.மு.க., பழனிசாமி கேட்கிறார். முதல்வரை சந்திக்கும்போதெல்லாம், பிரச்னைகளை தீர்க்க சொல்லித்தான் கோரிக்கை விடுக்கிறோம். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பிரச்னை குறித்து பேசியிருக்கிறோம். எங்களை போராடத் துாண்டும் பழனிசாமி, நான்கரை ஆண்டுகளாக மக்கள் பிரச்னைகளை கண்டு கொள்ளவில்லையே ஏன்? கம்யூனிஸ்டுகளை லோக்சபா, சட்டசபை உறுப்பினர், எண்ணிக்கையை மட்டும் வைத்து முடிவெடுக்க முடியாது. கம்யூனிஸ்டுகள் இல்லை என்றால், பல கட்சிகள் உயிரற்று போய்விடும். நுாற்றாண்டு கண்ட இயக்கம் என்பதால், நாங்களும் தி.மு.க.,விடம் அதிக சீட்கள் கேட்போம். இந்தியா, சீனா, ரஷ்யா, தென்ஆப்ரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகள் இணைந்து, 'பிரிக்ஸ்' என்ற புதிய நாணயத்தை உருவாக்குகின்றன. இது உருவானால் உலக அளவில் சம நீதி உருவாகும். -- வீரபாண்டியன், மாநில செயலர், இந்திய கம்யூ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

S.L.Narasimman
பிப் 03, 2026 12:29

நீ 25 சுவீட்டு பாக்சுகள் வாங்கிட்டு வாயையும் காதையும் பொத்திட்டு இருக்கு றமாதிரியா


மேலும் செய்திகள்