/ / தி.மு.க., கூட்டணிக்கு காங்கிரசால் வலிமை

தி.மு.க., கூட்டணிக்கு காங்கிரசால் வலிமை

சென்னை:'காங்கிரஸ், 18 தொகுதிகளில் வெற்றி பெற்று, தி.மு.க., கூட்டணிக்கு வலிமை சேர்த்திருக்கிறது' என, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:கடந்த, 10 ஆண்டு கால, அ.தி.மு.க.,வின் அராஜக ஊழல் ஆட்சியை அகற்றி, மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சி, ஸ்டாலின் தலைமையில் அமைந்திட, தமிழக மக்கள் அமோக ஆதரவளித்து, வெற்றி பெறச் செய்துள்ளனர். கடந்த லோக்சபா தேர்தலில், நாட்டின் பிரதமராக ராகுலை முன்மொழிந்து, தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றியை ஈட்டிய பெருமை, ஸ்டாலினுக்கு உண்டு.சட்டசபை தேர்தலில், முதல்வராக ஸ்டாலின் வரவேண்டும் என, ராகுல் வலியுறுத்தி கூறியது, இன்றைக்கு தமிழக மக்களின் பேராதரவோடு நிறைவேறியிருக்கிறது. தி.மு.க., - காங்., கூட்டணி என்பது, கொள்கை கூட்டணியாக அமைந்தாலும், நீண்ட காலமாக, நல்லிணக்கமும், சரியான புரிதலோடும் செயல்பட்டது. இதனால், இன்றைக்கு, 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், 18 தொகுதிகளில் வெற்றி பெற்று, தி.மு.க., கூட்டணிக்கு வலிமை சேர்த்துள்ளது. இவ்வாறு, அழகிரி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !