விஜய்யின் சைக்கிள், அஜித்தின் மாஸ்க் நிறங்கள்; குறியீட்டு அரசியலால் யாருக்கு லாபம்?
சென்னை: காலாகாலமாக குறியீடுகள் மூலம் தங்கள் கருத்துக்களை உணர்த்த உலக அளவில் அரசியல் தலைவர்கள் பலர் முயற்சி மேற்கொள்வர். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முதல், முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன்வரை பலர் தங்கள் உடைகள், வாகனங்கள், அணியும் ஆபரணங்கள் உள்ளிட்டவற்றில் குறியீட்டு அரசியல் செய்வது வழக்கம்.குறியீட்டு அரசியலுக்கு மிகவும் பிரபலமானவர் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. இவர் தான் அணியும் வித்தியாசமான சாக்ஸ் மூலமாக அவ்வப்போது அரசியலை வெளிப்படுத்துவார். சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா வந்து பிரதமர் மோடியை சந்தித்திருந்தார். அப்போது கனடாவில் நிலவிவரும் காலிஸ்தான் விவகாரத்தை விளக்கும் ஓவியம் கொண்ட சாக்ஸ் அணிந்திருந்தார் ஜஸ்டின் ட்ரூடோ. இதேபோல தனது வித்தியாசமான சாக்ஸ் மூலமாக உலக அரசியல் குறியீடுகளை அவர் வெளிப்படுத்துவது வாடிக்கை.