குடிநீர், பாதாள சாக்கடைபிரச்னைக்கு நிரந்தர தீர்வு:அ.தி.மு.க., உறுதி
மதுரை:மதுரை வடக்கு தொகுதி புதுார், கற்பகம்நகர், அழகர்நகர், தெப்பக்குளம், அந்தனேரி உட்பட பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க., வேட்பாளர் ராஜன்செல்லப்பா பிரசாரம் செய்தார்.அவர் பேசுகையில், ''அ.தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இத்தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு தேவையான திட்டங்கள் அதிகம். தொகுதியில் நிலவும் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்படும்,' என்றார். வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.