அ.தி.மு.க.,விலிருந்து முன்னாள், எம்.எல்.ஏ நீக்கம்

சென்னை : முன்னாள், எம்.எல்.ஏ., அய்யப்பன் உட்பட இருவர், அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.அ.தி.மு.க.,வில், கடலுார் கிழக்கு மாவட்ட அவைத் தலைவராக இருந்தவர், அய்யப்பன்; முன்னாள், எம்.எல்.ஏ.,வான இவர், 2011 சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வில், 'சீட்' கிடைக்காததால், அ.தி.மு.க.,வுக்கு தாவினார்.சமீபத்தில், அவருக்கும், அமைச்சர் சம்பத்திற்கும் இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அவரை அமைச்சரின் ஆதரவாளர்கள் புறக்கணித்தனர். இதனால், விரக்தியில் இருந்த அய்யப்பன், மீண்டும், தி.மு.க.,விற்கு செல்ல உள்ளதாக, தகவல் பரவியது.
நேற்று, அவரையும், மாவட்ட மகளிர் அணிச் செயலரான, நாகரத்தினத்தையும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி, கட்சி ஒருங்கிணைப்பாளர், பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர், இ.பி.எஸ்., ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)