/ செய்திகள் /  தனிக்கட்சி துவக்கும் சசிகலா? வரும் 24ல் பசும்பொன்னில் அறிவிக்கிறார்!

 தனிக்கட்சி துவக்கும் சசிகலா? வரும் 24ல் பசும்பொன்னில் அறிவிக்கிறார்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

- நமது நிருபர் - தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக, தனிக்கட்சி துவக்க, சசிகலா முடிவெடுத்து உள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான வரும் பிப்., 24ல், ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ள சசிகலா, முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என, தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து, சசிகலா ஆதரவாளர்கள் கூறியதாவது: சொத்து குவிப்பு வழக் கில் சிறைக்கு சென்ற சசிகலா, வெளியே வந்த பின், 'அ.தி.மு.க.,வில் தன்னை சேர்த்துக் கொள்வர்' என, நம்பினார். முன்னாள் அமைச்சர் வேலுமணி வழியே, பலமுறை முயற்சி செய்தார். ஆனால், அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி, மறுத்து விட்டார். இனி பொறுமையாக இருந்தால், எதுவும் நடக்காது என்பதை புரிந்து கொண்டுள்ளார் சசிகலா. அவரது தம்பி திவாகரனின் 'அண்ணா திராவிடர் கழகம்' கட்சி, நடிகர் விஜயின் த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க, பேச்சு நடத்தி வருகிறது. கூட்டணி அமையாவிட்டால், பிளான் 'பி' யாக, முக்குலத்தோர் அதிகம் வசிக்கும் 25 தொகுதிகளில், வேட்பாளர்களை நிறுத்த சசிகலா தயாராகி விட்டார். அதற்கான செலவை ஏற்கவும் முடிவெடுத்துள்ளார். மேலும், பிப்., 24 ஜெயலலிதா பிறந்தநாள் அன்று, ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார். தனிக்கட்சி துவக்கினால், சமூக செல்வாக்கை தாண்டி, அ.தி.மு.க., ஆதரவு ஓட்டுகளையும் வாங்க முடியும் என, சில நிர்வாகிகள் அவரிடம் கூறியுள்ளனர். ஆனால், அ.தி.மு.க., பொதுச்செயலராக சசிகலா நியமிக்கப்பட்டது தொடர்பான வழக்கு, நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது. தனிக்கட்சி துவங்கினால், அந்த வழக்கு தள்ளுபடி ஆகும். அ.தி.மு.க.,வில் எந்த உரிமையும் கோர முடியாது. எனவே, தனிக்கட்சி துவங்க சசிகலா தயங்கினார். எனினும், வழக்கில் தற்போதைக்கு தீர்ப்பு வராது என்பதால், தனிக்கட்சி துவங்க முடிவு எடுத்து விட்டார். புதிய கட்சி, தேர்தலில் போட்டி உட்பட, பல்வேறு முக்கிய அறிவிப்புகளை, பிப்., 24ல் பசும்பொன்னில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் சசிகலா வெளியிட உள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர். சசிகலா பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கான முகூர்த்தக்கால் நடும் விழா, பசும்பொன்னில் நேற்று நடந்தது. அதில், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

subramanian
பிப் 16, 2026 21:46

எவனும் சீண்டமாட்டான்


mdg mdg
பிப் 16, 2026 10:11

சம்பல் கொள்ளைக்காரி பூலான் தேவி மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றார் என்பது நினைவு இருக்கட்டும். வாக்காளர்கள் இடத்தில் நேர்மை இல்லை.


PVSR
பிப் 16, 2026 09:03

இது ஸ்டாலினை ஏற்பாடு ஸ்டாலின் பணம் கொடுத்து இப்படி செய்யச் சொல்கிறார் எல்லா திமுக கூட்டணி ஜெயித்து விடக்கூடாது என்பதற்காக எல்லா உத்திகளையும் அவர் கையாண்டு வருகிறார்


பாலாஜி
பிப் 16, 2026 08:26

ஜெயலலிதாவிடம் கொள்ளை அடித்த பணம் விளையாடுகிறது.


Kogulan
பிப் 16, 2026 08:14

தும்பை விட்டாய் அது விதி, வாலையும் விட்டுவிட்டு ஓடிபிடிக்க நினைப்பாயோ தாயே, இரும்புப்பெண்மணி இறக்கும் தருவாயில் உன் திறமையை கண்டு (நல்லதோ/கெட்டதோ) வியந்தாரே ஆனால் மனிதனும் காலமும் மாறிவிட்டனர், தாங்கள் என்ன செய்ய இயலும் என்று தெரியவில்லை


இந்து.
பிப் 16, 2026 08:05

நல்லாட்சி செய்தவரை ஒழித்துக்கட்டியாச்சு. அடுத்த பலி யாரோ?


Govi
பிப் 16, 2026 04:02

234 ம் வெற்றி இவர் தான் முதல்வர்