மற்றவர்களுக்கும் ஏன் சம்மன் வரவில்லை?
கரூரில் த.வெ.க., கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ., எனக்கு சம்மன் அனுப்பி உள்ளது. இதற்காக வரும் 17ம் தேதி டில்லி செல்கிறேன். அந்த கூட்டத்தை நடத்தியது த.வெ.க., அனுமதி கொடுத்தது போலீஸ். இதில் எனக்கு சம்மன் வந்திருப்பது ஆச்சரியமாக உள்ளது. கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகளின்போது, எல்லா அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளும் மருத்துவமனைக்கு சென்றனர். எனவே, அவர்கள் அனைவருக்கும் சம்மன் அனுப்புவதே முறையான நடவடிக்கையாக இருக்கும். இது பற்றி, 17ம் தேதிக்கு பின் பேசுகிறேன். மணல் திருட்டை தடுக்கப் போவதாகக் கூறி, போராட்டம் நடத்திய சிலர், தங்கள் வீட்டில் மணலை பதுக்கி வைத்துள்ளனர். - செந்தில் பாலாஜி, எம்.எல்.ஏ., - தி.மு.க.,
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 4 )
செந்தில் பாலாஜி சொல்வதில் நியயாம் உள்ளது. ஸ்கெட்ச் போட்டு கொடுத்தவர்களை விட்டுட்டு ரூட் மேப் மட்டும் போட்ட எனக்கு மட்டும் எதுக்கு சம்மன் என்று கேக்றாப்ல ? உண்மைதானே
உன் முழி சரி இல்லை அதனால் தான் உன்னை கூப்பிட்டார்கள். ஆமாம் மேடை பேச்சின் போது நீ ஏன் குறுக்கும் மடுக்குமா ஆம்புலன்ஸை ஓட விட்ட.
உங்களுக்கு சம்மன் வந்தால் போக வேண்டியதுதானே. அவன் ஹெல்மட் போடவில்லை என்னை மட்டும் ஏன் கேட்கிறீர்கள் என்று கேட்பாயா.
எல்லாம் சரி தான் ஆனால் கருர் யார் கட்டுபாட்டில் உள்ளது. கருரில் அசம்பாவிதம் என்று கேள்வி பட்டதும் மக்கள் மனதில் உங்கள் பெயர் தான் வந்தது. c.b.I உங்களை விசாரிப்பதில் தப்பில்லை
மேலும் செய்திகள்
வரும் தேர்தலில் பெட்ரோல், டீசல் இன்றி சைக்கிளில் சென்றுதான் ஓட்டு கேட்கணும்: சீமான்
மார் 15, 2026 06:15 am
திமுகவின் கூட்டணியில் சலசலப்பு; தமிழக அரசியலில் டுவிஸ்ட்; அடித்து சொல்கிறார் அண்ணாமலை
மார் 14, 2026 01:05 pm