தமிழகத்தில் ஏப்ரல் 23ல் ஒரே கட்டத் தேர்தல்!
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
நமது நிருபர்தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
ஜனநாயக திருவிழா
டில்லியில் நிருபர்களிடம் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் கூறியதாவது: தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களில் ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் ஆய்வு செய்தது. தகுதியான ஒரு வாக்காளர் கூட விடுபடக்கூடாது என்ற நோக்கில் எஸ்.ஐ.ஆர்., பணிகள் நடந்தன. இது எஸ்ஐஆர் பணிகளுக்குப் பிறகு நடக்கும் தேர்தல். தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 5.67 வாக்காளர்கள் உள்ளனர். 5 மாநிலங்களில் 2.18 லட்சம் வாக்குச்சாவடிகள் உள்ளன. சராசரியாக 700 பேருக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்படும். தமிழகத்தில் 75,032 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். பாதுகாப்பு பணியில் 8.5 லட்சம் பேர் ஈடுபடுவார்கள். அசாம், கேரளா, மேற்குவங்கம், தமிழகம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடத்துவது தொடர்பாக உரிய அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளோம். பூத் அலுவலகர்கள் முதல் அனைத்து தேர்தல் அலுவலர்களும் சுமுகமான தேர்தலுக்கு பொறுப்பாவார்கள். அவர்களுக்கு வாழ்த்துக்கள் . நேர்மையான, அமைதியான தேர்தல் நடத்த கமிஷன் முடிவு செய்துள்ளது. 5 மாநிலங்களில் மொத்தம் 17.04 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இது ஜனநாயக திருவிழா ஆகும். இவ்வாறு ஞானேஷ்குமார் கூறினார். தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!டில்லியில் தேர்தல் கமிஷனர்கள் 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் தேதியை அறிவித்தனர். இவர்களது நிருபர்கள் சந்திப்பு, தினமலர் யுடியூப் உள்ளிட்ட இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.https://www.youtube.com/live/-SxlxipdTGU?si=IHqQk_eUVDIOuVHIதினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 19 )
திமுக கூட்டணிக்கு தோல்வி உறுதி இந்தியா டிவி இன்று கருத்து கணிப்பு opinion polls முடிவுகள் இன்று வெளியிட்டு வருகிறது பாருங்கள் கேரளாவில் காங்கிரஸ் தோல்வி
தேர்வு செய்ய தேதி அறிவிப்பு கொடுத்து வைத்தவர்கள்
இந்தியா டிவி இன்று opinion polls கருத்து கணிப்பு முடிவுகள் வெளிநாட்டு வருகிறது பாருங்கள். தமிழ் நாட்டில் NDA கூட்டணி ஆட்சி பிடிக்கும் என்று கருத்து கணிப்பு வெளியிட்டு வருகிறது பாருங்கள்
தமிழ்நாட்டில் தேர்தல் ஓட்டுக்கு ரூபாய் கொடுக்காமல் நியாயமான முறையில் நடக்குமா என்று தெரியவில்லை...
//அறிவாளியான எனக்கு தேர்தல் கமிஷனில் பதவி இருக்கிறது // !
தேர்தல் நாள் எப்போதும் புதன் கிழமை ஆகவே இருக்க வேண்டும்....வியாழன் தேர்தல் நாள் என்றால் வெள்ளிக்கிழமை லீவு போட்டால் சனி மற்றும் ஞாயிறு தொடர் விடுமுறை..எல்லாபயலும்.. குறிப்பாக சென்னை டிக்கெட்டுகள் ஜாலியாக டூர் போய் குடித்து மட்டையாகி கிடப்பான்... தேர்தலுக்கு ஒருவாரம் முன்பிருந்தே மதுக்கடைகள் மூடப் பட வேண்டும்.. தேர்தலுக்கு பின் இரண்டு அல்லது மூன்று நாட்கள் அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களுடம் மூடப்பட வேண்டும்... ஓட்டு போட்டதற்கு ஆதாரம் காண்பிக்காதவன் யாராக இருந்தாலும் இரண்டு நாட்கள் சம்பளம் பிடித்தம் செய்தால் ஒழுங்காக ஓட்டுப் போடுவார்கள்....அரசு & தேர்தல் கமிஷன் கண்டிப்பு போதாது....
இவுரு பதவி நீக்கம் மனு என்னாச்சி? ஏப்ரல் 23 அன்று பதவியில் இருப்பாரா? 118 பேர் சுருட்டி வச்சிருந்த போர்க்கொடியை தூக்கி இருக்காங்களே.
118 என்பது 20 சதவீதம் மட்டுமே. ஒன்றும் செய்ய முடியாது
தோற்கும் என்று தெரிந்தே கொண்டு வரப்பட்ட தீர்மானம்
பகுதி "ஜனநாயக திருவிழா" : தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
ஏப்ரல் 23 ம் தேதி ஒரு கட்சிக்கு முடிவுரை எழுதப்படும். Result May 4ம் தேதி.
மக்களின் வரிப்பணத்தில் தண்டச் சம்பளம் வாங்கும் தேர்தல் ஆணையம், பாஜக வின் புரிந்துணர்வுக் கூட்டணிக் கட்சியான திமுக நிறைவேற்றவே முடியாத, தொடரவே முடியாத திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றும் வரை காத்திருந்து விட்டு, ஒரு மாத இடைவெளியில் தேர்தலை அறிவிப்பது மொள்ளமாரித்தனம். மூன்று மாதம் முன்பே அறிவித்து இருக்க வேண்டியதுதானே?
மேலும் செய்திகள்
வரும் தேர்தலில் பெட்ரோல், டீசல் இன்றி சைக்கிளில் சென்றுதான் ஓட்டு கேட்கணும்: சீமான்
மார் 15, 2026 06:15 am
திமுகவின் கூட்டணியில் சலசலப்பு; தமிழக அரசியலில் டுவிஸ்ட்; அடித்து சொல்கிறார் அண்ணாமலை
மார் 14, 2026 01:05 pm