/ செய்திகள் / கொடுத்த ஒரு தொகுதியை திருப்பி தந்த சண்முகம்

கொடுத்த ஒரு தொகுதியை திருப்பி தந்த சண்முகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

- நமது நிருபர் -தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தங்கள் கட்சிக்கு 3 தொகுதிகளை கேட்டிருந்தார். 'ஒரு தொகுதியில் தாமரை சின்னத்திலும், மதுரை மத்தி தொகுதியில் இரட்டை இலை சின்னத்திலும் என் கட்சி போட்டியிடும்' என தெரிவித்தார். அதன்படி, மதுரை மத்தி தொகுதியில் குஷ்பு கணவர் சுந்தர் போட்டியிடுகிறார். ஆனால், பா.ஜ., தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் திருமாறனுக்கு மட்டும் திருப்பத்துாரில் சீட் வழங்கிவிட்டு, மற்ற தொகுதிகளுக்கு தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. புதிய நீதி கட்சிக்கு, உறுதி அளித்தவாறு தொகுதி தரவில்லை. எனினும், ஏ.சி.சண்முகம் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.''கடினமான தொகுதியை கொடுத்தனர். அதனால், திருப்பி கொடுத்து விட்டோம். அங்கு பா.ஜ. நல்ல வேட்பாளரை நிறுத்தி உள்ளது. அவர் பெயரை நான் தான் பரிந்துரைத்தேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Vaithi
ஏப் 05, 2026 00:58

குப்புற விழுந்தும் சண்முகம் மீசையில் மண் ஒட்டவில்லை. அவருக்குத்தான் மீசையே இல்லையே?


Palanivelan Rajarathinam
ஏப் 04, 2026 13:53

நல்ல வேட்பாளரை இவர் பரிந்துரைத்தாராம்.ஏன் இவர் கட்சியில் யாரும் நல்ல வேட்பாளரே இல்லையா.அதுசரி அது எந்த தொகுதி அந்த நல்ல வேட்பாளர் யார்?.


Shankar Sarangan
ஏப் 04, 2026 12:44

பெருந்தண்மை.


Sangi Mangi
ஏப் 04, 2026 11:28

ஜெயிக்க முடியாதுனு திருப்பி கொடுத்து விட்டு பேசுறத பாருங்க... லொள்ளு பாரு, ஏகதளத்தை பாருங்க .......


முருகன்
ஏப் 04, 2026 07:13

ரொம்பபபபப நல்லவர்