ஜாதி அடையாளம்; காங்., வேட்பாளர் அதிருப்தி
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட் பாளர்கள் பட்டியலை, அக்கட்சியின் அகில இந்திய தலைமை, நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில், சிங்காநல்லுார் தொகுதி வேட்பாளர் பெயர், ஸ்ரீநிதி நாயுடு என குறிப்பிடப்பட்டிருந்தது.
காங்., வேட்பாளர் பட்டியலில், ஜாதி அடையாளம் என விமர்சனங்கள் எழுந்தன. இது தொடர்பாக, வேட்பாளர் ஸ்ரீநிதி வெங்கடேச மோகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
நான் தமிழகத்தில் பிறந்து , வளர்ந்து, மண்ணின் விழுமியங்களை உள் வாங்கியவள். தற்போது சிங்காநல்லுார் சட்டசபை தொகுதி வேட்பாளராக உள்ளேன். பட்டியலில் என் பெயருடன், ஜாதி அடைமொழி இணைக்கப்பட்டதை பார்த்ததும், எனக்கே பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
என்னை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்திய தந்தை பெயரையும், எனக்கு வலிமை சேர்த்த கல்வித் தகுதியை மட்டுமே, என்னுடைய அடையாளமாக கொண்டவள் நான். ஜாதி-மத பேதமற்ற சமத்துவமே, என் கொள்கை. எனவே, தட்டச்சு பிழையை வைத்து, அவதுாறு பரப்ப வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்