பிரதமர் மோடி 11ம் தேதி திருச்சி வருகிறார்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, வரும் 11ம் தேதி, திருச்சிக்கு வருகிறார் என்பதை, தமிழக பா.ஜ., உறுதி செய்துள்ளது.தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் மாநிலங்களில், சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. தமிழகத்தில் தே.ஜ., கூட்டணியில் அ.தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க., - அ.ம.மு.க., - உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இக்கூட்டணி சார்பில், வரும் 11ம் தேதி திருச்சியில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதை தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், தனது அறிக்கை வாயிலாக, உறுதி செய்துள்ளார். பிரதமர் மோடி, இம்மாதம் 1ம் தேதி புதுச்சேரி மற்றும் மதுரையில், மத்திய அரசின் சார்பில், பல்வேறு நலத்திட்ட உதவிகளை துவக்கி வைத்ததுடன், பிரசார பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்றார். முன்னதாக, கடந்த மாதம் 23ல் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடந்த பொதுக்கூட்டத்திலும் மோடி பங்கேற்றார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 7 )
நல்வரவு மாண்புமிகு பாரதப் பிரதமரே! இப்பவாவது பொதுக் கூட்டத்துடன் சேர்த்து சென்னை முதல் ராமேஸ்வரம் வழி - திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி , சிவகங்கை, ராமநாதபுரம்,வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை துவக்கி வைக்க ஆவண செய்யுங்கள் மாண்புமிகு பிரதமரே. துரை. வைகோ எம்.பி கார்த்தி எம்.பி, நவாஸ் கனி எம்.பி இவர்கள் எல்லாம் எந்த முயற்சியும் எடுக்க மாட்டார்கள் தாங்கள்தான் இதனை செயல் படுத்தித் தர வேண்டும்.
வழக்கமான வெளிநாட்டுப் பயணம் இல்லையா? ஆமாம். தமிழ் நாட்டில் தேர்தல்! சோழியன் குடுமி சும்மா ஆடாதே!
வரிசையில் நின்று மூவாயிரம் வாங்கும்போது இந்த எண்ணம் தோன்றவில்லையா
தேர்தல் என்னும் திருவிழா வந்தால் வந்து தானே ஆக வேண்டும் ஏதோ வாங்கதா உத்தமன் மாதிரி முதல் ஆளாக வாங்கி இருப்பாய்
புரிந்துணர்வு கூட்டணிக் கட்சியான திமுக வுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்யவா பாஸ்?
இவளோ அறிவோட சிங்கப்பூரில் எப்படி
Trichy & Thanjavur welcomes our Honble PM Modiji.
மேலும் செய்திகள்
தி.மு.க., கூட்டணியை உடைக்கும் முயற்சி முறியடிப்பு: ஸ்டாலின்
மார் 06, 2026 07:38 am