/ செய்திகள் /  முதல்வரை தளபதி... தளபதி என புகழ்ந்த பன்னீர்செல்வம்

 முதல்வரை தளபதி... தளபதி என புகழ்ந்த பன்னீர்செல்வம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: முதல்வர் ஸ்டாலினை, 'தளபதி, தளபதி...' என வார்த்தைக்கு வார்த்தை புகழ்ந்தார் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம். தி.மு.க., வில் இணைந்த பின் சொந்த ஊருக்கு செல்வதற்காக சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் வந்த பன்னீர்செல்வம் கூறியதாவது: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் உடன்பிறப்புகள், என்னை உடன் பிறந்த சகோதரர் போல மதித்து வரவேற்பு அளித்து வருகின்றனர். ஸ்டாலின் என்ன கட்டளையிடுகிறாரோ அதன்படிதான் நடப்பேன். நான் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., வில் இணைந்துள்ளேன். அவர் போட்டோவை வைப்பது தவறு இல்லை. எத்தனை கூட்டம் நடத்தினாலும் தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி படுதோல்வி அடையும். மதுரை அ.தி.மு.க., கூட்ட மேடையில் ஈ.வெ.ரா., படத்தை அகற்றியுள்ளனர். ஏழை மக்கள் சம நோக்குடன் வாழ வேண்டும் என்று வாழ்ந்தவர் படத்தை எடுத்தது கண்டனத்துக்குரியது என்றார். முதல்வர் ஸ்டாலினின் பெயரை குறிப்பிடாமல் வார்த்தைக்கு வார்த்தை 'தளபதி, தளபதி...' என்றே குறிப்பிட்டார்.

இரட்டை இலை அகற்றம்

பெரியகுளம்: தேனி மாவட்டம் பெரியகுளம் தெற்கு அக்ரஹாரத்தில் பன்னீர்செல்வம் வசிக்கிறார். வீட்டின் கதவில் இரட்டை இலை சின்னம் இருபுறமும், சுவரில் அ.தி.மு.க., கொடியின் வண்ணமும் தீட்டியிருந்தார். பிப்.,27ல் தி.மு.க.,வில் இணைந்ததை அடுத்து அவர் வீட்டுக் கதவில் இருந்த இரட்டை இலை சின்னம் வெல்டிங் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது. சுவரில் தி.மு.க., கொடியின் வண்ணம் பூசப்பட்டது. கதவில் உதய சூரியன் சின்னம் பொருத்தப்பட உள்ளது. வீட்டில் நிறுத்தப் பட்டிருந்த கார்களில் அ.தி.மு.க., கொடி அகற்றப்பட்டு தி.மு.க., கொடி பொருத்தப்பட்டது.

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

K V Ramadoss
மார் 03, 2026 21:55

புது தளபதிதாசன்..


sankaranarayanan
மார் 03, 2026 07:43

இந்த தள்ளாத வயதில் இவருக்கு தளபதி தளபதி என்று ஜபம் செய்து கொண்டே செல்ல வேண்டுமா என்னடா இவருக்கு வந்த தலை விதி யாருக்குமே வாராத வரக்கூடாத தலைவலி ஜெபம் இவருக்கு திடிரென்று எப்படி இந்த வயதில் வந்தது அய்யகோ பாபம் பரிதாபம்


venugopal s
மார் 02, 2026 17:06

அதிமுகவில் இருந்த போது பாஜகவை எதிர்த்துப் பேசிய நயினார் நாகேந்திரன் பாஜகவுக்கு கட்சி மாறி இப்போது பிரதமர் மோடியை புகழ்ந்து பேசினால் மட்டும் கேட்க இனிக்கிறதோ?


இளஞ்செழியன்
மார் 02, 2026 15:36

செத்த பாம்பை அடிப்பது பாவம்.


Iyyappan
மார் 02, 2026 11:07

பன்னீர்செல்வம் ஜெயலலிதாவிற்கு மிகவும் விசுவாசமாக இருந்தார். அவருக்குப் பிறகு, பல ஆண்டுகளாக அதிமுகவை ஒன்றிணைக்க அவர் முயற்சி செய்தார். ஆனால் அதிமுக கட்சியிலேயே அவருக்கு யாரும் மரியாதை அளிக்கவில்லை, அவரைப் பற்றி யாரும் கவலைப்படவும் இல்லை மாறாக, அனைவரும் அவரை அவமானப்படுத்தினார்கள். எனவே, அவர் திமுகவில் இணைந்ததில் எந்தத் தவறும் இல்லை.


sankar
மார் 02, 2026 11:30

சசிகலாவின் கையாள் என்பதால்தான் யாரும் மதிக்கவில்லை


C.SRIRAM
மார் 02, 2026 11:04

அடித்த பணத்தை காப்பாற்ற போடும் நாடகம் போல தெரிகிறது


Chinnamanibalan
மார் 02, 2026 11:03

காசேதான் கடவுளடா என்ற கோட்பாட்டை உடையவர் எவரும் எந்த ஒரு கட்சிக்கும் நிச்சயம் விசுவாசமாக இருக்க வாய்ப்பு இல்லை.


சூர்யா
மார் 02, 2026 10:10

கயிறு என நினைத்து வேறு எதையோ பிடித்து விட்டார் ஸ்டாலின். தி.மு.க, பா.ஜ.கவின் ஸ்லீப்பர் செல்லாக அ.தி.மு.கவில் இவர் இருந்தது போல் பா.ஜ.கவின் ஸ்லீப்பர் செல்லாக இருந்து கொண்டு தி.மு.கவில் இவர் ஏன் உள்ளடி வேலை செய்யமாட்டார் ?


Rammohan Ramachandran
மார் 02, 2026 10:07

எனி போலிக் கொள்கை இருக்க சேர இந்த தி.மு.க இந்த செய்தியிலிருந்து நாங்கள் அறிந்தது என்னவென்றால். பெரும்பாலான மக்கள் அ.தி.மு.க யில் இருந்து வந்தனர், டி.மு.க விதிகள் எதுவும் இல்லை. டி.மு.க ஒரு ஊழல் நிறுவனம், சங்கம் அல்ல. பணம் சம்பாதிப்பது நோக்கத்துடன் அ.தி.மு.க மக்கள் டி.மு.க யில் சேர வந்தனர்.


sureshpramanathan
மார் 02, 2026 10:05

Thirudan joined Thiruttu DMK group and will protect his past loot and may be start new loot All Dravidian guys are sick goons