Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


சுயமரியாதையை சீண்டி பார்ப்பவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

சுயமரியாதையை சீண்டி பார்ப்பவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: கொட்டமும், ஆணவமும் கூடிக்கொண்டே போகிறது. தமிழர்களின் சுயமரியாதையைச் சீண்டிப் பார்க்கும் இவர்களுக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும் என திருச்சி மண்டல ரயில்வே அலுவலக நுழைவு வாயிலில் ஹிந்தியில் பெயர் வைத்ததற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.

அவரது அறிக்கை: பாஜ அரசின் ஹிந்தித் திணிப்பு: நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர். ஹிந்தித் திணிப்பு வெறியில் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது பாஜ. 'மொழி ஒன்று - வரிவடிவம் மூன்று' எனும் வகையில் ஹிந்திப் பெயரையே தமிழ், ஆங்கிலத்திலும் எழுதி வைக்கும் இழிவான HindiImposition செயலில் இறங்கியுள்ளது பாஜ அரசு. திருச்சி மண்டல இரயில்வே அலுவலக நுழைவு வாயிலில் 'கர்தவ்ய த்வார்' என எழுதி வைத்துள்ளனர்.
வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களில் ஏற்கெனவே 'பவிஷ்ய நிதி பவன்' என்ற பெயரைத் திணித்து விட்டனர். குற்றவியல் சட்டங்களுக்கும் சமஸ்கிருதப் பெயரைத்தான் ஆங்கில வரிவடிவத்தில் எழுதுகின்றனர். மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் பெயர் 'ஜல் சக்தி' ஆகிவிட்டது. மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டப் பெயர் மாற்றத்திலும் இதே வேலையைத்தான் காட்டினார்கள். கொட்டமும், ஆணவமும் கூடிக்கொண்டே போகிறது.

தமிழர்களின் சுயமரியாதையைச் சீண்டிப் பார்க்கும் இவர்களுக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும். தமிழ், ஆங்கிலப் பெயர்களிலும் ஹிந்தியைத் திணிக்கும் முயற்சியைக் கைவிட்டு, உடனடியாக அங்கு சரியான தமிழ்ப் பெயர்கள் இடம்பெற வேண்டும். இல்லையென்றால் தமிழர்களின் சூட்டை மத்திய பாஜ அரசு உணர வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement

மார் 04, 2026 10:16 pm

இந்தியை திணிப்பதே திமுக தான். உங்கள் குடும்ப உறுப்பினர்களும் திமுக மந்திரிகளும் நடத்தும் கல்விக்கூடங்களில் ஹிந்தியை ஏன் தினிக்கிறீர்கள்? . இந்தி பாடம் இல்லாவிட்டால் போனியாகது. எனவே உங்கள் வியாபாரத்திற்கு மட்டும் இந்தி தேவை. கர்த்தவ்யம் என்றால் duty. த்வார் என்றால் வாயில் என்று அர்த்தம். அதாவது பணிக்குச் செல்லும் நுழைவாயில் GATEWAY OF DUTY என்று அர்த்தம். அந்த ஹிந்தி வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் அதை விட்டுவிட்டு இந்தியை திணிப்பதாக எப்போதும் போல் ஒப்பாரி வைக்க வேண்டாம்.
:நீங்கள் காங்கிரஸ் கட்சியுடன் மத்தியில் கூட்டாட்சி நடத்திய காலத்தில் காங்கிரஸ் இந்திய திணிக்கவில்லையா.

Reply Rate this
மார் 04, 2026 08:24 pm

சுயமரியாதை என்பது உங்களுக்கு இருக்கிறதா? அது இருந்தால்தானே சீண்டமுடியும்.

Reply Rate this
மார் 04, 2026 06:49 pm

ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட் ஒழிப்பு, அனைவருக்கும் 2 ஏக்கர் நிலம், சமஸ்கிருத ஒழிப்பு, ஹிந்தி எதிர்ப்பு, சனாதன ஒழிப்பு அப்டின்னு 70 வருடமா உருட்டி கொண்டு உள்ளனர். தான் மட்டும் சிபிஎஸ்இ பள்ளிகளில் ஹிந்தி முதல் மொழி...இதையும் இன்னமும் கேட்டுக் கொண்டு வாக்களிப்பதை வழக்கமாக கொண்டு உள்ளவர்கள் இருநூறுக்கு மாரடிக்கும் கூட்டத்தை விட கொடியவர்கள்

Reply Rate this
மார் 04, 2026 06:00 pm

முதலில் திமுகாவுக்கும் சுயமரியாதைக்கும் என்ன சம்பந்தம் விளக்குகள் அப்பா. பொறவு சீந்திரங்களானு பார்க்கலாம். ஹிந்தி திணிப்பு, சுயமரியாதை, தமிழமொழி, மாநில உரிமை என இந்த நாலு சொற்களை மாற்றி மாற்றி உருட்டியே 75 வருடங்கள் ஓட்டிவிட்டிர்கள் உருப்படியா ஒரு முறையாவது பேச முயற்சியுங்சள் . புளிச்சி போச்சு

Reply Rate this
மார் 04, 2026 05:44 pm

பேச எதுவும் கிடைக்கலன்னா பழைய துருப்பிடித்த ஹிந்தி எதிர்ப்பு ஆயுதம் இந்த இரும்புக் கரத்தில் சிக்கும். பள்ளிப் பருவத்திலேயே தயாவின் மீது தந்தை மு.மாறன் ஹிந்தியைத் திணித்ததால்தானே அதை வைத்து பிற்காலத்தில் மத்திய அமைச்சரானார்?. உங்களுக்கு ஒரு நியாயம் சாதாரண மக்களுக்கு வேறு நியாயமா?

Reply Rate this
மார் 04, 2026 04:50 pm

வரும் தேர்தலில் தீய முக கட்சிக்கு ஆப்பு. காலனி முதல் கக்கூஸ் கதவு வரை மக்களின் வரிபணத்தில் அப்பன் பெயர் வைப்பதை தமிழக மக்கள் எதிர்கிறோம்.

Reply Rate this
மார் 04, 2026 04:33 pm

ஊழல் தலைக்கு மேல் போய்விட்டது என்றால் சுயமரியாதை சீண்டலா. இல்லை சுயமரியாதை ஊழலின் மரு உருவமோ.

Reply Rate this