Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


ஸ்கிரிப்டை மனப்பாடம் செய்து படிக்கும் விஜய்; அதிமுக மாஜி அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

ஸ்கிரிப்டை மனப்பாடம் செய்து படிக்கும் விஜய்; அதிமுக மாஜி அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

சென்னை: எழுதிக் கொடுத்த ஸ்கிரிப்டை தவெக தலைவர் விஜய் பேசுகிறார், ஒரு முறையாவது பத்திரிகையாளர்களை சந்திக்க அவருக்கு தில்லும், திராணியும் இருக்கிறதா என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேட்டுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் இபிஎஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் பங்கேற்க, அவருடன் இபிஎஸ் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
கூட்டம் முடிந்த பின்னர் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது;
திமுக காங்., கூட்டணியில் குழப்பம் நிலவுகிறது. தேர்தலில் எங்களுக்கு மாபெரும் வெற்றி கிடைக்கும். அதிமுக ஆட்சியே மீண்டும் அமையும். ஸ்கிரிப்டை மனப்பாடம் செய்து பேசுவது மிக எளிது. அதை யார் வேண்டுமானாலும் பேசலாம். ஏற்கனேவே விஜய் ஒரு கைதேர்ந்த நடிகர். அவருக்கு சொல்லித் தரவேண்டியது இல்லை.
எப்படி உடல்மொழி இருக்க வேண்டும் என அவரால் வெளிப்படுத்த முடியும். நடிகர் விஜய் ஒரு முறையாவது பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டும். அதற்கு தில், திராணி வேண்டும். அவர் தயாரா?
தில்லும், திராணியும் இவருக்கு மட்டுமே உள்ளதாக எழுதிக் கொடுத்த ஸ்கிரிப்டை... ஆதவ் அர்ஜூனா, அருண் தான் டைரக்டர் தந்த ஸ்கிரிப்டை தான் விஜய் பேசுகிறார். இவர் ஆட்சியில் பங்கு தருகிறோம், அதிகாரத்தில் பங்கு தருகிறோம் என்று சொன்னார். ஒருத்தராவது தவெக பக்கம் போனார்களா? ஒருவரும் போகவில்லை. ஒரு கட்சி கூட கூட்டணிக்கு போகவில்லை.
இப்படி போகாததன் விளைவு ஆட்டை கடித்து, மாட்டை கடித்து இப்போது மனிதரை கடிக்கும் கதையாக எங்கள் பக்கம் திரும்பி திட்டி வருகிறார். எங்கள் பக்கம் திரும்பினால் வாங்கி கட்டிக் கொள்ள வேண்டிய நிலை தான் தவெகவுக்கும், விஜய்க்கும் ஏற்படும்.
உரிய நேரத்தில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு என்று எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் இபிஎஸ் சொல்லி இருக்கிறார். அதெல்லாம் உரிய நேரத்தில் நடக்கும்.
ஒன்று மட்டும் சொல்கிறேன். திமுக மிக, மிக படுதோல்வியை இந்த தேர்தலில் சந்திக்கும். அரசு பணத்தை வாரி, வாரி இறைக்கிறார் (முதல்வர் ஸ்டாலினை குறிப்பிடுகிறார்). என்ன தான் இறைச்சாலும் திமுக படுதோல்வியை சந்திக்கும்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் இரட்டைக் கொலை, அதே போல பல இடங்களில் சட்டம் ஒழுங்கு சீரழிவு. கஞ்சா, போதை வஸ்துகளால் ஒட்டுமொத்த தமிழகமே இன்றைக்கு சீரழிந்து விட்டது. பாதுகாப்பற்ற நிலை இங்கு இருக்கிறது.
நாங்கள் ஆட்சிக்கு வந்து 1 லட்சம் ரூபாய் வரை மிச்சம் என்று பெருமையாக பேசுகிறார். பொய் சொல்வதற்கு ஒரு அளவு இல்லையா? 1 லட்சம் ரூபாய் மிச்சமாகிறதா உங்களுக்கு? சொத்துவரி, வீட்டு வரி, மின்கட்டணம் 3 முறை உயர்வு, பாலி விலை உயர்வு என நடுத்தர வர்க்க மக்களுக்கு ஒரு மாதத்திற்கு 25,000 ரூபாய் கூடுதல் செலவு ஏற்படுகிறது.
5 ஆண்டுகளுக்கு கணக்கிட்டால் 5 அல்லது 6 லட்சம் ரூபாய் வரை நடுத்தர வர்க்கத்தினர் கூடுதலாக செலவு செய்து இருக்கின்றனர். ஆனால் பெருமையாக வருடத்திற்கு 1 லட்சம் ரூபாயை மிச்சப்படுத்தி தந்திருக்கிறேன் என்று பூசுவது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் இல்லையா?
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்பார்கள், அதுபோல ஸ்டாலின் புளுகு தேர்தல் வரை மட்டும் தான். அதன் பின்னர் காணாமல் போய்விடும். இந்த 5 ஆண்டுகளில் சிறுபான்மையினரின் என்ன வாழ்க்கைத்தரம் உயர்ந்திருக்கிறது என்று முதல்வரால் சொல்ல முடியுமா? சொல்லச் சொல்லுங்கள்.
இவ்வாறு ஜெயக்குமார் பேட்டியளித்தார்.

Advertisement

மார் 04, 2026 11:39 pm

ஏனுங்க உங்க முதல்வரும் சரி உங்க எடப்பாடியும் சரி யாரோ எழுதிக்கொடுத்த பிட் பேப்பர் பார்த்து படிக்கும் அறிவிலிகள் தானே.

Reply Rate this
மார் 04, 2026 09:18 pm

இந்த உண்மை இவருக்கு தெரிய இவ்வளவு நாள் ஆகிறதா?

Reply Rate this
மார் 04, 2026 09:11 pm

ஒருவேளை விஜய் ஆட்சியில் அமர்ந்தாலும், முழுமையான ஆட்சியை அவரால் கொடுக்கமுடியாது. ஒரு ஆறு மாதம் கூட அவர் ஆட்சி நிலைக்காது. எழுதிவைத்துக்கொள்ளுங்கள்.

Reply Rate this