/ செய்திகள் / ஓ.பி.எஸ்.,க்கு கிடைக்கப்போவது என்ன; அதிமுகவினர் ஆர்வம்

ஓ.பி.எஸ்.,க்கு கிடைக்கப்போவது என்ன; அதிமுகவினர் ஆர்வம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நமது நிருபர்

சில நாட்களுக்கு முன், பன்னீர்செல்வம் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, 'தி.மு.க., கூட்டணியில் அ.தி.மு., தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்துக்கு சீட் வேண்டும்' என கேட்டார். 'அதெல்லாம் வேண்டாம்; நீங்கள் தி.மு.க.,வில் இணைந்து கொள்ளுங்கள். உங்களை கட்சி மரியாதையாக நடத்தும். உங்களோடு சேர்த்து இருவருக்கு சீட் வழங்கப்படும். அடுத்து தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்பட்சத்தில், நீங்கள் தான் சபாநாயகராக இருக்க வேண்டும்' என கூறியுள்ளார். இந்த விஷயம் அரசல் புரசலாக, அ.தி.மு.க., தலைமையையும் எட்டியுள்ளது. இது உண்மையா, ஸ்டாலின் அப்படி சொன்னாரா என்பதை அறிந்து கொள்ளுமு் முயற்சியில் அதிமுக நிர்வாகிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

R.MURALIKRISHNAN
பிப் 28, 2026 16:56

வைகோவிற்கு போட்டியா இன்னொரு ஜால்ரா திமுகவில் வந்துட்டாம்பா, பேரு OPS ஆம்.


Balaa
பிப் 28, 2026 15:37

இருட்டு கடை அல்வா


Ramesh Sargam
பிப் 28, 2026 13:04

திமுகவுக்கு ஜால்றா அடிக்கறவரைக்கும் தினமும் மூன்று வேலை சாப்பாடு. ஜால்றா அடிப்பதை நிறுத்தியவுடன் கல்தா...


Anand
பிப் 28, 2026 11:55

ஓ.பி.எஸ்க்கு உடனடியாக பாக்கெட்டில் வைக்கும் சைசில் உதயநிதியின் போட்டோ தரப்படும்.


சந்திரன்
பிப் 28, 2026 11:00

இன்னும் மக்களை மபைத்தியமாகவே நினைக்கிறானுவ போல


Anbuselvan
பிப் 28, 2026 10:30

அதெப்படி இப்போதே சொல்ல முடியும்? அதிமுகவிற்கு சம பலம் உள்ளதே. அவர்கள் ஆட்சிக்கு வந்து விட்டால் இவர் எப்படி சபாநாயகர் ஆக முடியும்


Anand
பிப் 28, 2026 10:27

டாக் ஆவதற்கு முன்பாகவே ......


Mariadoss E
பிப் 28, 2026 10:19

செம்ம...


Sun
பிப் 28, 2026 10:05

சட்டசபையில் யார் கும்பிடு போட்டாலும் அது சபாநாயகர் என்ற பதவிக்குத்தான். தனிப்பட்ட நபர்களுக்கு அல்ல. ஒரு வேளை தி.மு.க வெற்றி பெற்று,ஒரு வேளை பன்னீர் சபாநாயகராக இருந்தால் அனைவராலும் போடப்படும் கும்பிடு சபாநாயகர் பன்னீருக்குத்தான்!


ரவி
பிப் 28, 2026 10:26

மரியாதை பதவிக்குக்தான்.இதே அப்பாவு நாளை சபாநாயகர் பதவியை விட்டு வெளியே வந்தால் ஒருவர் கூட கும்பிடு போட மாட்டார்.


sankaranarayanan
பிப் 28, 2026 10:00

அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்று சொல்லலாம் அது வெறும் கதை அதை நம்பி இவர் மூழ்கிவிட்டாரே என்றுதான் கவலையாக இறுக்கிறது