செலவு செய்வோரை வேட்பாளர் ஆக்குங்கள்: கிரீஷ் ஷோடங்கரிடம் வலியுறுத்திய ஸ்டாலின்
- நமது நிருபர் - தி.மு.க., - காங்., கூட்டணி உறுதியாகி விட்டாலும், கூட்டணியை இறுதி செய்வதற்கு முன், இரு கட்சிகளின் குழுவினர் பேசும்போது தேர்தல் நிதி தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது. இது, காங்கிரசின் தொகுதி பங்கீட்டு குழுவினரை அதிர்ச்சி அடைய வைத்ததாக அக்கட்சி வட்டாரங்களில் பரபரப்பாக பேசுகின்றனர்.
நம்பிக்கை
இதுகுறித்து, காங்., வட்டாரங்கள் கூறியதாவது: காங்கிரஸ், ஒவ்வொரு தேர்தலுக்கும் தொகுதி பங்கீடு வாயிலாக குறிப்பிட்ட எண்ணிக்கையில் தொகுதிகளை பெற்றாலும், அக்கட்சியின் தரப்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்களுக்கு தேவையான தேர்தல் செலவுகளை தி.மு.க., செய்வது வாடிக்கை. ஒரு காலத்தில் லட்சங்களில் செலவு செய்து வந்தவர்கள், கடந்த சில தேர்தல்களாக கோடிகளிலும் செலவு செய்கின்றனர். அந்த வகையில், 'வரும் சட்டசபைத் தேர்தலுக்கும் தங்கள் வேட்பாளர்களுக்காக, தி.மு.க.,வே செலவு செய்யும்' என காங்கிரசார் நம்பிக்கையுடன் உள்ளனர். ஆனால், கடைசி நேரத்தில் தொகுதி எண்ணிக்கையில் காங்கிரஸ் காட்டிய கறார், தி.மு.க.,வி னருக்கு பிடிக்கவில்லை. அதனால், கடந்த தேர்தல்களைப் போல, இம்முறை தி.மு.க., தாராளமாக பணத்தை செலவு செய்யுமா என தெரியவில்லை. காங்., தரப்பிலான தேர்தல் குழுவினரிடம் பேசும்போது, 'தி.மு.க., தரப்பில், கடந்த தேர்தலை போல நிறைய செலவு செய்ய முடியாது.தொகுதி பங்கீடு
'ஓரளவுக்குத்தான் செய்ய முடியும். அதனால், காங்., தரப்பில் 'பசை' உள்ளோரை தேர்வு செய்து வேட்பாளர்களாக நிறுத்துங்கள்' எ ன, முதல்வர் ஸ்டாலி ன் சொல்லி உள்ளார். அதிர்ச்சியடைந்த காங்., தேர்தல் பொறுப்பாளர் கிரீஷ் ஷோடங்கர், 'தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சு நடக்கும்போது ஏற்பட்ட கசப்புக்கும், இரு கட்சிகளுக்குமான உறவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதற்காக, இம்முறை காங்., வேட்பாளருக்கு நிதியை குறைப்போம் என சொல்லக் கூடாது. 'தற்போது, காங்., தரப்பில் தமிழகத்தில் எம்.எல்.ஏ.,க்களாக இருப்போரில் பெரும்பாலானோருக்கு 'சீட்' வழங்கப்படும். 'செலவாகும் தொகையில், 20 சதவீதம் அளவுக்கே அவர்களால் ஈடுசெய்ய முடியும். மற்றதை வழக்கம்போல தி.மு.க.,வே செய்ய வேண்டும்' என சொல்லி இருக்கிறார். இதைக் கேட்டதும் முதல்வர் ஸ்டாலின், 'செலவுத் தொகையைக்கூட பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஆனால், தொகுதியில் செல்வாக்கு உள்ள, வெற்றி பெறக்கூடிய கட்சிக்காரர்களை மட்டும் வேட்பாளராக்குங்கள். தமிழகத்தில், தி.மு.க., கூட்டணியில் போட்டியிடக் கூடியவர்கள் ஒவ்வொருவரும் வெற்றி பெற்றா க வேண்டும்.பலவீனம்
'அது ரொம்ப ரொம்ப முக்கியம். வெற்றியைத் தொடக் கூடியவர்களை வேட்பாளர்கள் ஆக்காமல், பலவீனமானவர்களை நிறுத்தினால் ஏற்படும் ஒவ்வொரு தோல்வியும், எதிர்க்கட்சியினருக்கு பலத்தை கூட்டிவிடும். 'அதனால், தகுதியானவர்களை வேட்பாளர்களாக அறிவியுங்கள்' என கூறியுள்ளார். இதை கட்சி மேலிடத்தில் தெரிவிப்பதாக கிரீஷ் ஷோடங்கர் சொல்லி இருக்கிறார். இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 17 )
செலவு செஞ்சாதான கறுக்கு வழில சம்பாதிக்கலாம்
எப்படியானாலும் கழுத்தைப்பிடித்து காறித்துப்பினாலும் நீங்கள் திமுக என்ற கழுதைமேல் சவாரி செய்யவேண்டும் என்று இருக்கும்போது யார்தான் என்ன செய்யமுடியும். நாட்டுமக்களுக்கு நல்லதுமட்டுமே செய்து தேர்தலை சந்தித்த காமராஜரை தோற்கடித்து தேசவிரோத தீயசக்தி ஊழல் திமுகவை துட்டுவாங்கிக்கொண்டு ஆட்சிக்கட்டிலில் அமரவைத்த அதிபுத்திசாலி தமிழகமக்கள் கூட்டம் இன்னும்மாறவில்லை. நீங்கள் 100 சதவீதம் நம்பலாம். கடந்த ஆட்சியில் அடித்த கொள்ளையில் 0.5 சதவீதம் வாரி இறைத்தால் போதும். மீண்டும் ஆட்சி உங்கள்கையில்.
அப்போ நீங்கள் செய்ததாக சொன்ன சாதனைகள் எல்லாம் வெற்றியை கொடுக்காது. பணம் வேட்பாளர் செல்வாக்கு இவைகள் தான் வெற்றியை கொடுக்கும் என்று நம்புகிறார் முதல்வர். அப்புறம் எதற்கு ஆறு லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கினீர்கள். எதற்கும் வெள்ளை அறிக்கை கிடையாது.
செலவுக்கு அப்பறம் வரவுக்கு வழி சொல்லுங்க பின்ன பாக்கலாம்
குறுநிலமன்னர்கள் - செலவுசெய்து ஜெயித்து - போட்டதை , பல ஆயிரம் மடங்காக - பலவழிகளில் - திருப்பி எடுத்தது, பெரும்பகுதியை கப்பம் கட்டவேண்டும்.
கஜானால இருக்க பணம் போதாம கடன் வாங்கி இலசவசங்கள கொடுத்தும்... ரோட்ல போறவன் வரவனெல்லாம் கூட்டியாந்து சீட்டு குடுத்து கூட்டணி ... ஊர் முழுக்க ஸ்டிக்கர் ஒட்டியாச்சு .......இத்தனை இருந்தும் ஜெயிக்குமா ஜெயிக்காதா என்று விடியல் தள்ளாட்டம் ....இது அப்பா மாடலுக்கு வந்த சோதனை.....இதில் படித்து முன்னேறிய ராமசாமி மாநிலமாம் .....
செலவு செய்த MLA பிறகு என்ன லாபம் கிடைக்கும் ? ஆட்சியில் பங்கு கிடையாது
Savings bank give 2% interest on principal amount. Fixed Deposits give upto 7.5% interest. Mutual funds upto 12% Return on Investment. Political investment gives 5000% return on investment.
வடக்கன் பனி பூரி விக்கிறவன் ..வரும் போது ரெண்டு கிலோ கஞ்சா கொண்டு வருவான் ..தமிழ் நாடு நன்கு படித்து முன்னேறிய ராமசாமி விடியல் மாநிலம் .......இந்த வடக்கனோடு விடியலுக்கு என்ன தேர்தல் கூட்டணி ??......
இந்த வடக்கனோடு விடியலுக்கு என்ன பேச்சு ?.....படிக்காத வடக்கன் இங்கே வரும்போது ரெண்டு கிலோ கஞ்சா கொண்டு வருவதாக விடியல் மந்திரி பேச்சு ....தமிழ் நாடு படித்து முன்னேறிய மாநிலம் ....வெட்கம் மானம் உள்ளவன் இந்த வடக்கனோடு பேச்சு வார்த்தை நடத்த மாட்டான் ......
மேலும் செய்திகள்
உங்களுக்கு அரசு துணை; அரசுக்கு நீங்கள் துணை; சொல்கிறார் துணை முதல்வர் உதயநிதி
மார் 07, 2026 01:20 am