/ செய்திகள் / சட்டசபை தேர்தலில் கனிமொழி போட்டி?

சட்டசபை தேர்தலில் கனிமொழி போட்டி?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

-நமது சிறப்பு நிருபர் -துாத்துக்குடி எம்.பி.,யாக இருக்கும் தி.மு.க., துணை பொதுச் செயலர் கனிமொழி, மாநில அரசியலில் ஈடுபட வேண்டும் என, அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். எனவே, தி.மு.க.,வில் விருப்ப மனு பெற்றபோது, கனிமொழி பெயரில், தலா 25,000 ரூபாய் கட்டணம் செலுத்தி, 30 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். அதன்படி, திருச்செந்துார், பாளையங்கோட்டை, நாங்குநேரி, அம்பாசமுத்திரம், தென்காசி, மயிலாப்பூர், திருவொற்றியூர், ராயபுரம், திருவாரூர், தஞ்சாவூர் என 10க்கும் மேற்பட்ட சட்டசபை தொகுதிகளில், கனிமொழி போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது பற்றி கனிமொழியிடம் கேட்டபோது, 'எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை' என்றார். இந்நிலையில், தி.மு.க.,வில் விருப்ப மனு அளித்தவர்களிடம், இன்று முதல் 22ம் தேதி வரை நேர்காணல் நடப்பதால், நேர்காணலில் கனிமொழி பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு, அவரது ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Vasan
மார் 17, 2026 14:15

அப்பா, தயவு செய்து தூத்துக்குடி அத்தைக்கும், மதுரை பெரியப்பாவுக்கும் சான்ஸ் கொடுங்கள். வெற்றி நிச்சயம்.


vbs manian
மார் 17, 2026 11:44

சமீபதிய தூத்துக்குடி விசிட் பயம் காட்டி விட்டது. ஆகவே மாற்றமோ.


Sun
மார் 17, 2026 11:32

ஆமாம் மாநிலத்தில் அதிகாரத்தில் இருந்தால்தானே இளம் விதவைகள் உருவாவதை தடுக்க முடியும்? அதற்குத்தானே மேடம்?


rama adhavan
மார் 17, 2026 10:59

அதனால் என்ன. எது நடந்தாலும் கவலைப்படாமல் இக் கட்சிக்கு வாக்களிக்க பரம்பரை பரம்பரையாக பலர் உள்ளனர். அவர்களை மாற்றவே முடியாது. மேலும் குடும்ப தொலைக்காட்சிகள், பேப்பர் வேறு. மேலும் பலமான எதிர் கட்சி தலைவர்கள் எம்ஜியார், ஜெயலலிதா போல் இன்று இல்லை. அண்ணாமலையையும் ஒதுக்கி விட்டார்கள். எனவே ஜெயிப்பது குதிரை கொம்பு.


shyamnats
மார் 17, 2026 10:57

ஒருவருக்காக இன்னொருவர் எப்படி மனு அளிக்க முடியும், மனுதாரர் போகும்போது கூட வேண்டுமானால் போகலாம். இதில் என்ன சட்ட விதிமுறைகள் உள்ளன, தெரியவில்லையே ?


Ganesh Srinivasan
மார் 17, 2026 13:53

this is internal procedure of the political parties. only when the official candidate submits nomination the ECI rules will become applicable


R MANIVANNAN
மார் 17, 2026 14:22

கட்சியிடம் தானே மனு கொடுக்கிறார்கள்


ராமகிருஷ்ணன்
மார் 17, 2026 10:36

நடக்காது. புளுகு ராணியை ஸ்டேட் பாலிடிக்ஸில் விட மாட்டார்கள். மத்தியில் ஆட்சியில் பங்கு கிடைத்தால் சுருட்டுவதற்கு நம்பிக்கையான ஆள் வேணும். அதற்காக இப்படியே வைத்து விடுவார்கள்.


N Sasikumar Yadhav
மார் 17, 2026 10:24

தூத்துக்குடிக்கு மறுதேர்தல் நடந்தால் விஞ்ஞானரீதியாக ஆட்டய போட்டு வைத்திருக்கிற பணத்தில் செலவு செய்ய வேண்டும்


RAMAKRISHNAN NATESAN
மார் 17, 2026 10:24

தேர்தல் முடிந்த பிறகு மாநில ஊழல் பிரமுகர்களை உள்ளே வைக்க ஏற்பாடு செய்துவிட்டு, கட்சியை கனியிடம் கொடுக்கும் திட்டம் அமித் ஷாவிடம் இருக்கறதாமே ? மெய்யாலுமா ?


sankaranarayanan
மார் 17, 2026 09:47

கனிமொழி மாநில அரசியலுக்கு வருவதால் அவர்தான் அடுத்த முதல்வர் என்று திராவிட மாடல் அரசு எண்ணியுள்ளது புள்ளையாண்டான் சும்மா விடுவானா கனிமொழி தோர்த்து போகவே அவன் வழி செய்வான் இது ஒருகுடும்ப சன்டையில் சென்றடையும்


duruvasar
மார் 17, 2026 09:19

இனிமே வயசுக்கு வந்தால் என்ன வராட்டி என்ன ?