தி.மு.க., எம்.எல்.ஏ.,வை புகழ்ந்த அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடந்த இப்தார் நோன்பு திறப்பில் பங்கேற்ற அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சீனிவாசன் தி.மு.க.,வை சேர்ந்த பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமாரை புகழ்ந்து பேசியது அ.தி.மு.க., வினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. திண்டுக்கல்லில் நடந்த சமய நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் மும்மதத்தை சேர்ந்தவர்கள், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சீனிவாசன், பழநி தி.மு.க., எம்.எல்.ஏ., செந்தில் குமார்,மேயர் இளமதி உள்பட கட்சி வேறுபாடின்றி அர சியல் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் சீனிவாசன் பேசுகையில், 'எம்.எல்.ஏ., செந்தில்குமார் என்றும் என் அன்புக்கும் பாசத்துக்கும் உரியவர். என்றென்றைக்கும் பழநியின் வெற்றியாளர். சட்டசபையில் சிறப்பாக பேசக்கூடியவர். அவரது தொகுதிக்கு மட்டுமல்லாது, திண்டுக்கல் சட்டசபை தொகுதிக்கும் சேர்த்தே குரல் கொடுப்பார். அவர் மென்மேலும் வளர்ந்து உயர வாழ்த்துகிறேன்' என பேசியவாறே எம்.எல்.ஏ.,வின் தலையில் கை வைத்து ஆசிர் வாதம் செய்தார். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் திண்டுக்கல்லில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சீனிவாசனுக்கு போட்டியாக தி.மு.க., சார்பில் எம்.எல்.ஏ., செந்தில்குமாரே நேரடியாக போட்டியிட வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் முன்னாள் அமைச்சரின் பேச்சு அரசியலில் ரசிக்கும்படியான 'மூவ்'வாக தெரிகிறது. ஆனால் தி.மு.க.,வை சேர்ந்தவரை புகழ்ந்து பேசியது ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் இல்லை என நிகழ்ச்சியில் பங்கேற்ற அ.தி.மு.க.,வினர் பேசிக் கொண்டனர்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
த.வெ.க., தலைவர் விஜயை தமிழக மக்கள் நிராகரிப்பர் கொங்கு இளைஞர் பேரவை தனியரசு கருத்து
மார் 09, 2026 05:33 am