எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் ஆட்சி மாற்றம் உறுதி: பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்
சென்னை: பா.ஜ., மேலாண்மை குழு ஆலோசனை கூட்டம், சென்னை அமைந்தகரையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், பிரதமர் மோடியின் தமிழக வருகை, சட்ட சபை தேர்தல் பிரசாரம், தேர்தல் அறிக்கை வெளியீடு உள் ளிட்டவை குறித்து தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் ஆலோசனை நடத்தினார்.
பின், அவர் அளித்த பேட்டி:
அ.தி.மு.க.,வுடன் தொகுதி பங்கீடு குறித்து, வெகு விரைவில் பேச்சை துவங்குவோம்.
சட்டசபை தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை; இன்னும் நாட்கள் உள்ளன. பிரதமர் மோடியின் வருகை, தமிழகத்தில் மிகப்பெரிய எழுச்சியை தந்துள்ளது.
தமி ழகத்தில், பெண்கள் நடமாட முடியாத அளவுக்கு, காட்டுத்தனமான, கஞ்சா ஆட்சி தான் நடக்கிறது. சொத்து வரி, மின் கட்டணம் உள்ளிட்டவை, ஆண்டுக்கு 300 மடங்கு அதிகரித்துள்ளன.
கிராமத் தில் உள்ள சாதாரண மக்களுக்கும், தி.மு.க., ஆட்சியின் அவலம் குறித்து தெரிந்துள்ளது.
எனவே, எத்தனை கட்சிகளுடன் கூட்டணி வைத்தாலும், தேர்தலுக்கு பின் ஆட்சி மாற்றம் உறுதி.
இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement
கட்சியை வளர்ப்பதை விட்டுவிட்டு என்னதான் வித்தை செய்தாலும் விளைந்து களம் சேர வாய்ப்பில்லை.
உம்மைப் போன்ற அறிகுறிகள் குஷ்பு போன்றவர்கள் உள்ளவரை பிஜேபி கரை தேடுவது மிக மிக கடினம்

21 சாதிக் கட்சிகள், மதவாத கட்சிகளை கூட்டணியிலே சேர்த்து இடங்களையும் கொடுத்து மதசார்பின்மை பேச திமுகவால் மட்டுமே முடியும்.