வெளிநாட்டு பங்குகள் விவகாரம்: தி.மு.க., - எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சிக்கல்
- டில்லி சிறப்பு நிருபர் -வெளிநாட்டு நிறுவன பங்குகளை வாங்கிய விவகாரத்தில், அமலாக்கத் துறை தாக்கல் செய்த கூடுதல் மனு மீது பதிலளிக்கும்படி, தி.மு.க., - எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரிசர்வ் வங்கியிடம் உரிய அனுமதி பெறாமல், வெளிநாட்டு நிறுவன பங்குகளை வாங்கியதாக, தி.மு.க., - எம்.பி., ஜெகத்ரட்சகன் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிந்து, 'சம்மன்' அனுப்பியது. இதை எதிர்த்து, ஜெகத்ரட்சகன் தொடர்ந்த வழக்கில், அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கு, நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வில், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'இடைக்கால தடையை நீக்கக் கோரி கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளோம். 'அதில், சில தொழில்நுட்ப திருத்தங்கள் செய்ய வேண்டியிருப்பதால், திருத்தங்களுடன் மீண்டும் தாக்கல் செய்ய ஏதுவாக, வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும்' என கோரிக்கை விடுத்தார். ஜெகத்ரட்சகன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'இந்த விவகாரத்தில், 17 லட்சம் பங்குகள் வாங்கப்பட்டன. விசாரணையில், ஒரு ரூபாய் கூட வெளிநாட்டிற்கு செல்லவில்லை என்பது தெரிய வந்துள்ளது. பணப்பரிமாற்றமே நடக்காத நிலையில், எதற்காக சம்மன் அனுப்பி தொந்தரவு செய்ய வேண்டும்' என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இடைக்கால தடையை நீக்கக் கோரி அமலாக்கத் துறை தாக்கல் செய்த கூடுதல் மனுவுக்கு பதிலளிக்கும்படி, ஜெகத்ரட்சகனுக்கு உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கில் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய இரு தரப்புக்கும் அறிவுறுத்தினர். வழக்கு இரு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 20 )
Very polluted criminal and enjoyed from all party ADMK...DMK...PMK and his money power beyond imagination. He invested in srilanka which has been lost ...making money from every angle. Surprised how BJP is leaving these guys
I AM OF THE OPINION THAT THEY ARE GETTING SOMETHING FROM THESE MENS. OTHERWISE THE CASES ARE NOT DRAGGING FOR YEARS TOGETHER. SOMEBODY PRESSURAISE THE JUDICIARY FOR POSTPONING THE CASES OTHERWISE THE CASES WILL BE HEARED WITHIN A SHORT PERIOD.
சிலந்தி வலை சிக்கல் மற்றும் இடியாப்ப சிக்கல் நிறுவனங்களை உருவாக்கவும், அதன் மூலம் பல ஆயிரம் கோடிகளை உலக அளவில் பரிமாற்றம் செய்யவும் ஆடிட்டர்கள் மற்றும் வெளிநாட்டு வங்கிகள் பல உள்ளது. அது தவிர திராவிட ஹவாலா உறவுகள் உள்ளது. இங்கே 1000 கோடி கொடுத்தால் அடுத்த ஒரு வாரத்தில் லண்டனில், துபையில், மான்டே கார்லோவில் 6-8 எண் நம்பரை சொன்னால் பணம் டெலிவரி செய்ய நபர்கள் உள்ளது. இது போன்ற சிலந்தி வலை சிக்கல் நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்களை கண்டுபிடிக்கவே பல ஆண்டுகள் ஆகும். அந்த நபரும் ஒரு போலி நபராக இருப்பர். இதனால் தான் ED, IT போன்ற நிறுவனங்களும் சட்டத்தின் ஓட்டையை பயன்படுத்தும் நபர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படியே கண்டுபிடிக்க முடிந்தாலும் இருக்கவே இருக்கான் பெரிய பெரிய லாயர்கள். அவர்கள் வாயிதா வாங்கி கேசை 100 வருடம் நடத்துவான். ஆளும் அரசும் மாறி விடும்.
USELESS பிஜேபி ACTION எடுக்க துப்பில்லை
இதுதான் ஒருவரையும் பின்தங்க விடமாட்டோம் என்பது.
ஒரு சிக்களும் கிடையாது. பணப்பெட்டி இருக்கும் வரை ஒன்றும் நடக்காது. இது வரை எந்த ED வழக்கில் தண்டனை கிடைத்துள்ளது. எல்லாம் புஸ்வானம், ஒன்றும் வெடிக்காது
இவுரு சமீபத்தில் கலீஞர் விருது வாங்கி தன்னை கவுரவித்துக் கொண்டார். எதுக்கு? தன்னிடம் ஒருத்தனும் நெருங்க முடியாதுன்னு காமிச்சுகுறதுக்குதான். அதுமட்டுமல்ல. ஒருத்தனும் கிட்ட வரக்கூடாது.
சிக்கல் எல்லாம் இதைப் படிப்பவர்களுக்குத்தான். செய்பவர்களுக்குக் கிடையாது!
இவர்மீது எத்தனை வருடங்கள் வழக்கு நடத்துவீர்கள். வாய்தா வாங்கி கொண்டு ஜாலியாக உள்ளனர். மக்கள்தான் ஏமாளிகள்.
அமலாக்கத்துறையும் ஏமாளிகள் தான்.
17 லக்சம் பங்குகள் வாங்கினார் ஆனால் ஒத்த ரூவா கூட பணம் பரிமாற்றம் இல்லை .இது தாண்டா திராவிட மாடல்
சிக்கல் தீர அவரிடம் மருந்து இருக்குமோ...
இருக்கவே இருக்கிறார்கள் சிக்கிவி கபில் இருவரும் பிய்த்து மேய்ந்துவிடுவார்கள்.
மேலும் செய்திகள்
தேர்தல் எதிரொலியால் போட்டா போட்டி; தி.மு.க., - அ.தி.மு.க., பரிசு பொருட்கள் வழங்கல்
மார் 10, 2026 06:04 am