/ கிசுகிசு / பறக்கும் படை ரெய்டு; தோட்டங்களில் கூட்டம்
பறக்கும் படை ரெய்டு; தோட்டங்களில் கூட்டம்
தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள், பறக்கும் படை திடீர் சோதனைகளால் கருத்தரங்க கூடங்கள், திருமண மண்டபங்களில் அரசியல் கட்சியினர் கூட்டங்கள் நடத்துவதில் நடைமுறை சிக்கல் உள்ளது. இதனால், தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் புதிய உத்தியில் இறங்கியுள்ளனர்.பிரதான சாலைகளில் உள்ள இடங்களை விட்டுவிட்டு, உள்ளடங்கிய கிராமங்களில் அமைந்துள்ள தோட்டங்களைத் தேர்வு செய்து வருகின்றனர். அங்கு தான், தொண்டர்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான பொருட்களை தந்து அனுப்ப வசதியாகவும், அவர்கள் எளிதாக பிரிந்து செல்லும் வகையிலும் இருக்கும் என்கின்றனர்.இந்த தோட்டங்களில் கூட, முந்தைய தேர்தல்களில் எந்தத் தோட்டத்தில் கூட்டம் போட்டு வெற்றி கிடைத்ததோ அந்த தோட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகின்றனர்.