/ செய்திகள் / உதயகுமார் இடத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை

உதயகுமார் இடத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை

திருமங்கலம்: அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமாருக்கு சொந்தமான இடத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.மதுரை மாவட்டம் டி.குன்னத்தூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் கட்டிய ' அம்மா' கோவில் உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், கட்சியினர் தினமும் பொதுமக்களை அழைத்து கூட்டம் நடத்துவதோடு உணவும் வழங்குவதாக கூறி திருமங்கலம் தேர்தல் அலுவலர் சிவஜோதியிடம் திமுக வழக்கறிஞர் அமைப்பாளர் சிவனேசன், ஐடி அணி அமைப்பாளர் ஜெயசந்சந்திரன் புகார் அளித்து இருந்தனர்.இந்நிலையில், தேர்தல் பறக்கும் படையினர் இங்கு சோதனை நடத்தினர். ஆனால், சோதனையில் எதுவும் கிடைக்காததால் வெறுங்கையுடன் அதிகாரிகள் திரும்பினர். இந்தசோதனை நடந்த போது, உதயகுமார் அங்கு இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !