Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் கருத்துக் கணிப்பு முடிவுகள்

Advertisement


 ஓட்டுச்சாவடி பணிகள் அலுவலர்களுக்கு பயிற்சி 

 ஓட்டுச்சாவடி பணிகள் அலுவலர்களுக்கு பயிற்சி 

திருப்பூர்;சட்டசபை தேர்தலில் ஓட்டுச் சாவடியில் பணியாற்றும் முதன்மை அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளுக்கும் தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, தேர்தல் முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. நேற்று அனைத்து தொகுதிகளிலும், ஓட்டுச்சாவடிகளில் பணியாற்றும் முதன்மை ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான முதல் கட்டப் பயிற்சி வகுப்பு நடந்தது.

திருப்பூர் வடக்கு தொகுதிக்கான பயிற்சி வகுப்பு, மாநகராட்சி டவுன் ஹால் அரங்கில் நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அலுவலர் சிவப்பிரகாஷ் தலைமை தாங்கினார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கண்ணாமணி முன்னிலை வகித்தார். தெற்கு தொகுதிக்கான பயிற்சி வகுப்பு அதே அரங்கில் மற்றொரு தளத்தில் நடந்தது. தேர்தல் நடத்தும் அலுவலர் அமித் தலைமை வகித்தார். துணை கமிஷனர் சுந்தரராஜன் மற்றும் தேர்தல் பிரிவு அலுவலர்கள் முன்னிலை வகித்தனர்.

உரிய சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஓட்டுச் சாவடிகளில் பணியாற்றும் முதன்மை ஓட்டுச் சாவடி அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஓட்டுச் சாவடியில் ஓட்டுப்பதிவு மெஷின்களை கையாளும் முறை குறித்து மாதிரி இயந்திரம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. ஓட்டுப்பதிவு மெஷினை சரி பார்த்து பெறுவது; முறையாக இணைப்பு வழங்கி, ஓட்டுப்பதிவு மேற்கொள்வது; பழுது ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள்; ஓட்டுச் சாவடிக்கு வழங்கப்படும் பொருட்கள் பயன்பாடு உள்ளிட்டவை குறித்தும் தேர்தல் பிரிவினர் விளக்கினர்.

பயிற்சி முகாம் நேற்று மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் உரிய தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில் நடந்தது. இதில் தேர்தல் பணியாற்றும் அலுவலர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பல்வேறு சந்தேகங்களை கேட்டு விளக்கம் பெற்றனர்.

Advertisement