Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


வி.சி.க., மார்க்சிஸ்ட் முடிவு என்ன; திக்... திக்... மனநிலையில் திமுக கூட்டணி!

வி.சி.க., மார்க்சிஸ்ட் முடிவு என்ன; திக்... திக்... மனநிலையில் திமுக கூட்டணி!
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: திமுகவுடன் தொகுதிகளை பெறுவதில் இழுபறி நீடிக்கும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழுக் கலந்தாய்வுக் கூட்டம் நாளை நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டும் நாளையே ஆலோசனை நடத்துகிறது.

எதிர்முகாமில் இருந்து எதிர்பாராத தருணத்தில் இணைந்த தேமுதிகவின் வரவு, காங்கிரசுக்கு கூடுதலாக 3 தொகுதிகள் ஒதுக்கீடு திமுக கூட்டணியில் புகைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. காரணம்... பல ஆண்டுகளாக கூட்டணியில் உடன் பயணித்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூ, கடந்த முறை கொடுத்த தொகுதிகளையும், விடுதலை சிறுத்தைகள் கட்சியானது கூடுதல் தொகுதிகள் தருமாறும் திமுகவை விடாமல் கேட்டு வருகின்றன.

புதிய கட்சிகள் வரவால் நாங்களும் தொகுதிகளை குறைத்திருக்கிறோம், நீங்கள் குறைத்துக் கொள்ளுங்கள் என்று திமுக தலைமை கூறி பலசுற்று பேச்சு நடத்தியது. ஆனாலும், மார்க்சிஸ்ட் கம்யூ, மற்றும் விடுதலை சிறுத்தைகள் இடையே தொகுதிகள் எத்தனை, உடன்பாடு கையெழுத்து போன்றவை இன்னமும் கைகூடாமல் உள்ளது. கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கும் இத்தகைய இழுபறி திமுகவுக்கு பெரும் பின்னடைவாகவும் பார்க்கப்படுகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டை சமாதானப்படுத்த முயன்ற வைகோவின் முயற்சியும் பலன் அளிக்க வில்லை. தொகுதி பங்கீடு குறித்து நாளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியானது, நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறது. அதே நாளில் விடுதலை சிறுத்தைகளும் கட்சியின் உயர்நிலைக்குழுக் கலந்தாய்வுக் கூட்டத்தை கூட்டுவதாக அறிவித்து இருக்கிறது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டு உள்ள அறிவிப்பில், தேர்தல் அறிக்கை வெளியிடுவது உள்ளிட்ட தேர்தல் பணிகள், விசிகவுக்கான வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளைத் தேர்வு செய்வது குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

திமுக கூட்டணியில் தற்போது வரை இடம்பெற்று வரும் இவ்விரு கட்சிகள் நாளை (மார்ச். 23) அறிவித்து உள்ள கூட்டம், அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே திமுக கூட்டணியில் இடம்பெற்ற வன்னியர் சமூக மக்களின் ஆதரவு பெற்ற, ஒரே கட்சியான தவாக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டது. அதே வட தமிழகத்தில் பட்டியலின மக்களின் ஆதரவை பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியுடனும் தற்போது வரை தொகுதிகள் எண்ணிக்கையும், உடன்பாடும் எட்டப்படவில்லை.

வட தமிழகத்தில் வன்னியர்+பட்டியலின சமூக மக்களின் குறிப்பிட்ட சதவீதம் ஓட்டுகளை கொண்ட இவ்விரு கட்சிகளின் ஆதரவு திமுகவுக்கு நிச்சயம் தேர்தலில் கை கொடுக்கும். ஏற்கனவே திமுக கூட்டணிக்கு தவாக டாட்டா காட்டிவிட்டதால், பட்டியலின மக்களின் ஆதரவு பெற்ற, விடுதலை சிறுத்தைகளின் ஆதரவு, திமுகவுக்கு அவசியமான ஒன்று.

எனவே, மார்க்சிஸ்ட் மற்றும் விசிக நாளை நடத்துவதாக இருக்கும் ஆலோசனை கூட்டங்கள், திமுக கூட்டணியை திக்...திக்...மனநிலையில் காத்திருக்கச் செய்திருக்கின்றன என்கின்றனர், அரசியல் கட்சியினர்.

Advertisement

மார் 23, 2026 04:39 pm

சும்மா buildup பண்ண வேண்டாம் குடுக்கிற சீட்டை வாங்கிக்கொண்டு ஓடி போய்டு உண்டியல்

Reply Rate this
மார் 23, 2026 04:26 am

தி.மு.க. கூட்டணியில் தமிழகத்தில் உள்ள எல்லா கட்சிகளையும் வளைத்து போட்டு மிக பலமான கூட்டணி என கூறி கொண்டிருந்த கட்சிகள் உண்மையில் ஓரணியில் செயல்படும் கட்சிகள் இல்லை என்பதையும் அனைத்துமே பதவி மோகம் பிடித்த பலகீனமான கட்சிகள் தான் என்பதை நிரூபித்து காட்ட விட்டன. ஆக தமிழகத்திற்கும் டெல்லிக்கும் தான் போட்டி என கூறி வந்த ஸ்டாலின் தற்போது அவரது கூட்டணிக்குள் இருக்கும் கட்சிகளுடன் தான் போட்டி என்ற நிலைக்கு கொண்டு வந்துள்ளார். திராவிட மாடல் என்பது இப்படி தான் இருக்கும் என்பதை மக்களும் இப்போது புரிந்து கொண்டிருப்பார்கள்.

Reply Rate this
மார் 23, 2026 12:19 am

காங்க்ரஸ் மாதிரி தினமும் ஒவ்வொரு பில்ட் அப் குடுத்து கடைசில குடுப்பதை பெற்று கொண்டு ஆர் எஸ் எஸ் உள்ளே வந்துவிடும் அப்டின்னு உருட்டு உறுதி. இன்னும் ஓரிரு நாளில் இதை எதிர்பார்க்கலாம்

Reply Rate this
மார் 22, 2026 10:40 pm

நி யாருன்னு எனக்கு தெரியும்... நா.. யாருன்னு உனக்கு தெரியும்... அப்புறம்... அடேய்ய் மக்களே.. நீங்க தான் உஷாரா இருந்து... யாருக்கு வோட்டு போடனும்னு முடிவு பண்ணனும்...

Reply Rate this
மார் 22, 2026 09:51 pm

மக்களை பத்தி எதுவும் நினைக்காமல், இவங்க கூட்டணி பத்தி, பேசி முடிக்காமல், இழுத்தடிக்கிறாங்க, பாருங்க மக்களே??? ஏதாவதும் ஒரு கூட்டணி இதுவரைக்கும், இறுதி செய்திருக்க பாருங்க மக்களே..???

Reply Rate this
மார் 22, 2026 09:40 pm

ஆளுக்கு ஓரு பெட்டி கூடுதலாக கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடும். சீட்டை விட பெட்டிகள் தான் முக்கியம்

Reply Rate this
மார் 22, 2026 08:34 pm

திருமாவளவனும் கம்யூனிஸ்ட் கட்சியும் தன்மானம் இல்லாதவர்கள் திமுகவின் காலில் விழுந்து விடுவார்கள். இவர்களுக்கு என்ன கமிஷன் கொடுக்க வேண்டும் என்று விடியல் திமுகவிற்கு நன்றாக தெரியும். நீங்கள் வரவில்லை என்றால் தமிழகத்தில் பாஜக வந்துவிடும் என சீன் போடுவார்கள்.

Reply Rate this
மார் 22, 2026 08:10 pm

"Beggers Cant Choose" - கொத்தடிமைகளுக்கு தனிப்பட்ட கருத்தோ உரிமையோ இருக்கக்கூடாது.. அதுவும் பரம்பரா கொத்தடிமைகள் கொட்டாவி விடக்கூட வாயத்தொறக்கப்புடாது கொடுப்பதை வாங்கிக்கொண்டு கூவ வேண்டும் பல்லாக்கு தூக்க வேண்டும்.. தட்ஸ் ஆல் யுவர் ஆனர்

Reply Rate this
மார் 22, 2026 08:06 pm

இந்த அரசு மாற்றம் நிகழும்.

Reply Rate this
மார் 22, 2026 07:53 pm

அட, இருங்க பெரிய உண்டியலை உருட்டி கிட்டு வரோம். அது ரொம்புற அளவுக்கு சில்லறையை போட்டா போதும்.

Reply Rate this