/ செய்திகள் /  சென்னையில் வி.சி.,க்கு தொகுதி தருகிறது தி.மு.க.,

 சென்னையில் வி.சி.,க்கு தொகுதி தருகிறது தி.மு.க.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

- நமது நிருபர் - விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, சென்னையில் ஒரு தொகுதியை ஒதுக்க தி.மு.க., முடி வெடுத்துள்ளது. இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பட்டியலின மக்கள் அடர்த்தியாக உள்ளனர். கடந்த 2021 தேர்தலில், இந்த இரு மாவட்டங்களில் உள்ள 26 தொகுதிகளில், 24 இடங்களில் தி.மு.க.,வும், இரண்டு தொகுதியில் காங்கிரசும் வெற்றி பெற்றன. இதற்கு, வி.சி.,யும் ஒருவகையில் காரணம். ஆனால், தி.மு.க., கூட்டணியில், வி.சி., கட்சிக்கு சென்னை மாவட்டத்தில் இதுவரை 'சீட்' ஒதுக்கியதே இல்லை. கடந்த 2021ல், திருவள்ளூரில் ஒரு தொகுதியை வி.சி., கேட்டது. ஆனால், தி.மு.க., ஒதுக்கவில்லை. தற்போது, பட்டியலின மக்கள் மத்தியில் த.வெ.க., வளர்ந்து வருவதாக, 'சர்வே' முடிவுகள் சொல்கின்றன. அதனால் தான், பெரம்பூர் அல்லது வில்லிவாக்கத்தில் த.வெ.க., தலைவர் விஜய் நிற்க ஏற்பாடு நடக்கிறது. இதனால், சென்னையில் உள்ள பட்டியலின ஓட்டுகள் சிதற வாய்ப்பு உள்ளது. எனவே, சென்னைக்குள் ஒரு தொகுதியை, முதல் முறையாக வி.சி., கட்சிக்கு ஒதுக்க, தி.மு.க., தலைமை முன்வந்துள்ளது. தனி தொகுதிகளான திரு.வி.க., நகர், எழும்பூரில் தி.மு.க., வலுவாக உள்ளதால், வேளச்சேரி, ஆர்.கே.நகர், ராயபுரம், பெரம்பூர் உள்ளிட்ட ஏதேனும் ஒரு பொதுத்தொகுதியை ஒதுக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ramesh Sargam
மார் 04, 2026 21:08

கண்ணம்மா பேட்டை விசிக்கு. கிரோம்பேட்டை திமுகவுக்கு.


கரீம் பாய், ஆம்பூர்
மார் 04, 2026 18:29

சாதி வெறி பிடித்த கட்சியின் தலைவர்...டெபாசிட் கூட வாங்க கூடாது


சூர்யா
மார் 04, 2026 16:18

சென்னையில் ஹைகோர்ட் எதிரில் டூவீலரில் வந்த வழக்கறிஞர் ஒருவர் திருமா முன்னிலையில் சிறுத்தைக் குட்டிகளால் தாக்கப் பட்டாரே அந்த சாலை உள்ள பகுதி சென்னையில் எந்தத் தொகுதியில் வரும்? அந்தத் தொகுதியை விடுதலை சிறுத்தைகளுக்கு ஒதுக்குங்கள். வெற்றி உறுதி!?


Vel
மார் 04, 2026 11:21

எங்கள் தொகுதி கோவிந்தா கோவிந்தா