சோனியாவை அணுக முடியாமல் தவிக்கும் தி.மு.க., தலைமை
- நமது நிருபர் -
சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை தி.மு.க., இறுதி செய்து வருகிறது.
'41 தொகுதிகள், இரண்டு ராஜ்யசபா எம்.பி., பதவிகள், ஆட்சியில் பங்கு' என்ற காங்கிரசின் கோரிக்கையை, ஆரம்பத்தில் சாதாரணமாக எடுத்துக் கொண்டது. ஆனால், தனது கோரிக்கையில் விடாப்பிடியாக இருந்த காங்கிரஸ் கட்சி, த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க பேசிக் கொண்டிருப்பது தி.மு.க.,விற்கு கோபத்தை ஏற்படுத்தியது.
கடந்த தேர்தல்களில் தொகுதிப் பங்கீட்டில் பிரச்னை ஏற்பட்டபோது, தி.மு.க., தலைமை நேரடியாக சோனியாவை தொடர்புகொண்டு உடன்பாடு செய்தது. அதுபோல இந்த முறையும் சோனியாவை அணுகி பிரச்னையை முடித்து விடலாம் என, தி.மு.க., தலைமை நினைத்தது. இதனால், கடந்த ஜனவரி 28ம் தேதி டில்லி சென்ற தி.மு.க., துணைப் பொதுச்செயலர் கனிமொழி, ராகுலை சந்தித்துப் பேசினார். அப்போது, 41 தொகுதிகள், இரண்டு ராஜ்யசபா எம்.பி., பதவிகள், ஆட்சியில் பங்கு போன்ற கோரிக்கைகளை ராகுல் வலியுறுத்தியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தி.மு.க., தலைமை, சோனியாவை சந்தித்துப் பேசி, தொகுதிப் பங்கீட்டை முடிக்க, சிதம்பரம் உள்ளிட்டோர் வாயிலாக முயற்சித்துள்ளது. ஆனாலும் எதுவும் நடக்கவில்லை.
காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கூறியதாவது: கடந்த 2021 சட்டசபை தேர்தலில், 41 தொகுதிகள்; 2024 லோக்சபா தேர்தலில், 12 தொகுதிகள் பெற வேண்டும் என, ராகுல் உறுதியாக இருந்தார். ஆனால், கடைசியில் சோனியாவுடன் பேசி, குறைந்த தொகுதிகளை கொடுத்து தி.மு.க., உடன்பாடு செய்து விட்டது. இந்தத் தேர்தலில் அப்படி எதுவும் நடக்கக்கூடாது என்பதால், சோனியாவை தி.மு.க., சார்பில் யாரும் அணுக முடியாத நிலையை ராகுல் ஏற்படுத்தினார்.
கடந்த தேர்தல்களில் காங்கிரசுக்கு மாற்று வழிகள் இல்லாமல் இருந்தது. இப்போது த.வெ.க., இருப்பதால், அதிக தொகுதிகளைப் பெற்றே ஆக வேண்டும் என்பதில், ராகுல் உறுதியாக இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement
2021 இல் பாஜக, ஆதிமுகவிடம் கூட்டணி வைத்ததற்காக எப்படி தோற்கடிக்க பட்டார்களோ, அதே போல் காங்கிரஸ் கட்சியையும் அவ்வாறே நினைக்கிறார்கள். அவர்களை முதலில் கழற்றி விடுங்க ஸ்டாலின் ஐயா.
தன்மானம் தமிழர் பெருமை பற்றி கர்ஜிக்கும் கழகம் ஒரு வெளிநாட்டினரை பார்க்க ஏங்குவது ஏன்
சோனியா என்ன இஸ்ரேல் அல்லது ஈரானின் பதுங்கு குழியிலா உள்ளார்? தொடர்பு கொள்ள முடியாமல் போக?
இவரு ஒரு தேச மன்னர், அவுங்க மகா ராணி என நினைச்சிண்டிருக்காக்கோங்கோ இவுங்க.
காங்கிரஸ் இப்படியே காலம் தாழ்த்திக்கொண்டு வந்தால், அடுத்த 100 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டில் திமுகவின் தயவிலேயே இருக்க வேண்டும்.

ஏன் சோனியா இத்தாலிக்கு ஓடிவிட்டாரா ?