/ செய்திகள் / இழுபறிக்கு முடிவு: திமுக - காங்., தொகுதி உடன்பாடு: 28 சட்டசபை தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு

இழுபறிக்கு முடிவு: திமுக - காங்., தொகுதி உடன்பாடு: 28 சட்டசபை தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கடும் இழுபறியில் இருந்து வந்த தொகுதிகள் ஒதுக்கீடு விவகாரத்தில் திமுக காங்கிரஸ் இடையே ஒப்பந்தம் இன்று மாலை கையெழுத்தானது. காங்கிரசுக்கு 28 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட்டை திமுக ஒதுக்கி உள்ளது.தமிழகத்தில், 20 ஆண்டு களுக்கும் மேலாக, தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது. இரு கட்சிகளின் தலைமையும், நட்புடன் இருந்ததால், தேர்தலை எவ்வித இடையூறுமின்றி சந்தித்து வந்தன. ஆனால், சமீபகாலமாக நடந்த பல்வேறு நிகழ்வுகள், இரு கட்சி களுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தியது.

நெருடல்

எனினும், வரும் சட்டசபை தேர்தலை, காங்கிரசுடன் இணைந்தே எதிர்கொள்ள தி.மு.க., தரப்பு முடிவெடுத்தது. ஆனால், நடிகர் விஜய், தன் கட்சியுடன் கூட்டணி சேருவோருக்கு ஆட்சியில் பங்கு தரப்படும் எனக் கூறியதும், களம் மாறத் துவங்கியது. காங்கிரசை நோக்கி, த.வெ.க., வலுவான துாண்டிலை வீச, தி.மு.க.,வுடன் இருந்த நெருடல்களை காங்கிரசார் பெரிதாக்கினர். த.வெ.க.,வுடன் கூட்டணி செல்லலாம் என வெளிப் படையாக பேசத் துவங்கினர்.இந்த சூழலில், தி.மு.க., தரப்பில் தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேசிய காங்கிரஸ் தரப்பு, '41 தொகுதிகள், ஆட்சியில் பங்கு, உள்ளாட்சி அதிகாரத்தில் 25 சதவீத பங்கு, இரண்டு ராஜ்யசபா சீட், துணை முதல்வர் பதவி' என, ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்தது.தி.மு.க., தரப்பில், 'காங்கிரசுக்கு 21 தொகுதிகள் மட்டுமே வழங்க முடியும்' என, 'கூலாக' தெரிவித்தனர். இது காங்கிரஸ் தலைமையை, தி.மு.க., மீது அதிருப்தி அடைய வைத்தது.

நிர்ப்பந்தம்

இதற்கிடையில், தமிழகத்தில் காலியாக இருக்கும் ராஜ்யசபா உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில், வேட்பு மனு தாக்கல் நாளை நிறைவடைய உள்ளதால், அதற்குள் கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய வேண்டிய நிர்ப்பந்தம், இரு தரப்புக்கும் ஏற்பட்டது. நேற்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சென்னையில் முதல்வர் ஸ்டாலனை சந்தித்து பேசினார். அப்போது தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் உடன்இருந்தார்.இதன் பிறகு அவர் டில்லி சென்று காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன் பேசினார்.இந்நிலையில், இன்று திமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலினை, காங்கிரசின் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழுவினர் சந்தித்து பேசினர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் காங்கிரசுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இத்துடன் ராஜ்யசபா சீட் ஒன்றை வழங்க திமுக முன்வந்ததை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டு அதற்கான ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டது. அதில், முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை சேர்ந்து கையெழுத்து போட்டனர்.காங்கிரசுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதால், அதற்கான வேட்பாளர் யார் என்பதை காங்கிரஸ் விரைவில் அறிவிக்க உள்ளது. மேலும், அறிவிக்கப்படும் வேட்பாளர் நாளையே வேட்புமனுவை தாக்கல் செய்வார் என்றும் தெரிகிறது

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

ப.சாமி
மார் 04, 2026 15:24

பலமுறை தேர்தல் நடந்துள்ளது ஆனால் புதிய கட்சி த.வெ.க வருகையால் தமிழக மக்களுக்கு பணமழை கொட்டுகிறது.எல்லா புகழும் த.வெ.க விற்கே


Saran
மார் 04, 2026 11:36

Bringing many robbers in one party to loot the entire TN for another 5 years. Poor TN people


Nathansamwi
மார் 04, 2026 10:27

நம்ம பாஜக கு அதிமுக எவ்ளோ குடுக்குறாங்க னும் கார்ட்டூன் போடுங்க ..


பேசும் தமிழன்
மார் 04, 2026 14:18

கண்டிப்பாக கான் கிராஸ் கட்சியை விட அ‌திகமாக தான் இருக்கும்


krishna
மார் 04, 2026 17:09

UNNAI PONDRA THUDAITHA MOOLAYODU THIRIUM KUMBALUKKU ELLATHILUM EVVALAVU PANAM VERU EDHUVUM THERIYAADHU.AZHUKKALAYAM ADAPPU EDUKKUM KOTHADIMAI UNAKKU 200 ROOVAA ENA THERIUM.


krishna
மார் 04, 2026 17:09

ADUTHA 200 ROOVAA COOLIKKU AZHUKKALAYAM ADAPPU EDUKKUM PESUM THAMIZHAN VANDHUTTARU.


vivek
மார் 04, 2026 20:25

நீ உன் கொத்தடிமை வேலையை மட்டும் பாரு நாதன்


VENKATASUBRAMANIAN
மார் 04, 2026 09:54

இனிமேலும் காங்கிரஸ் இறங்கி வந்தால் தற்கொலைக்கு சமம். மேலும் ஓட்டு கிடைக்காது. திமுகவினர் போட மாட்டார்கள்.


Santhakumar Srinivasalu
மார் 04, 2026 12:46

காங். சுக்கு கேக்குடன் வேறு இடம் எங்க இருக்குது?


ஆரூர் ரங்
மார் 04, 2026 09:13

திரிசங்கு. கூட்டணிக்கு சங்கு.


Barakat Ali
மார் 04, 2026 09:01

ஆரிய பாசக்காவின் சதி ...........


Marai Nayagan
மார் 04, 2026 13:28

ஹா..ஹா...


Balasubramanian
மார் 04, 2026 08:22

பேசாமல் தவெக விற்கு தாவுங்கள்! திமுக வை அழிக்க தவெக, அதனை அழிக்க நீங்கள்! தமிழகம் உருப்படும்!


Santhakumar Srinivasalu
மார் 04, 2026 12:44

காங்கிரஸ் தவெக வுக்கு போகலாம்! ஆனால் தேர்தல் செலவுக்கு கேக் கிடைக்குமா?


இந்து
மார் 04, 2026 08:19

காங்கிரஸின் இந்த நிலைக்கு அக்கட்சியே காரணம். ராஜாஜி, காமராஜர் போன்றவர்களை அவமானப்படுத்தியதின் பலன் இன்றும் அனுபவிக்கிறார்கள். அனுபவி ராஜா அனுபவி.


Ranganathan
மார் 04, 2026 08:07

தேன் கிண்ணத்தில் விழுந்த பூச்சி போன்ற நிலையில் காங்கிரஸ். 50 ஆண்டுகளாக இந்தியாவை ஆண்ட காங்கிரஸை வீழ்த்தியது இந்த திமுக செய்த 2ஜி ஊழலால் தான். பாஜகவை மிக பெரிய கட்சியாக வளர்த்து விட்டதும் திமுக செய்த 2ஜி ஊழலால் தான் என்பதை காங்கிரஸ் புரிந்து, திமுகவின் ஊழல் கறையிலிருந்து ஒதுங்கி தனியாக அல்லது விஜய் கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தால், எதிர்காலத்தில் இந்தியாவை ஆள வாய்ப்பு உள்ளது. திமுகவின் ஊழலை காங்கிரஸ் தூக்கி சுமந்ததால் தான் 12 ஆண்டுகளாக காங்கிரஸ் கடுமையான வீழ்ச்சியை சந்திக்கிறது. துணிவாக காங்கிரஸ் முடிவு எடுத்து, திமுக உறவை துண்டிக்க வேண்டும்


நாகா
மார் 04, 2026 07:30

மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் பங்கு பெற்ற போங்கு திராவிட மாடல் 1.75 லட்சம் கோடி புகழ் பெற்றது. மாநிலத்தில் சுயாட்சி கோஷத்தில் தன்னந்தனியாக 4.5 லட்சம் கோடி ரூபாய் புகழ் பெற்று இருக்கிறது. கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாக ஆட்டையை போடும் பங்கை விட்டு கொடுப்பார்களா ஓங்கோல் கொடுங்கோல்? இந்திராகாந்தி காலத்து கெத்து ஆங்காங்கே சிலர் வாயில் மட்டும் இருக்கிறது. இதை கதர் வீரியமாக்கி களம் காணுமா ? பொறுத்து இருந்து பார்ப்போம்