Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


தி.மு.க., - அ.தி.மு.க., 'பக்கா டீலிங்': தஞ்சையில் போட்டு தாக்கிய விஜய்

தி.மு.க., - அ.தி.மு.க., 'பக்கா டீலிங்': தஞ்சையில் போட்டு தாக்கிய விஜய்

சென்னை: ''நான் இல்லன்னா நீ; நீ இல்லன்னா நான். நமக்குள்ள எவனும் வந்திடக் கூடாது. வெளியில் நாம அடிச்சுக்கிற மாதிரி அடிச்சுக்கிட்டாலும், நம்ம 'டீலிங்' பக்காவா இருக்கணும் என தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் செயல்படுகின்றன,'' என, த.வெ.க., தலைவர் விஜய் விமர்சித்தார்.


தஞ்சாவூரில் நேற்று நடந்த த.வெ.க., நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் பேசியதாவது:


டில்லி டில்லி என கூவுவது, அடிக்கும் கொள்ளையால் 'ரெய்டு' வந்ததும், டில்லிக்கு வெள்ளைக்கொடி பிடிக்கும் வேலையை ஸ்டாலின் சார் செய்கிறார். இதெல்லாம் இனி வேலைக்கு ஆகாது. சின்ன பசங்க கூட, 'ஓம் சக்தி, பராசக்தி, தி.மு.க., ஒரு தீயசக்தி' என சொல்கின்றனர். கிரிக்கெட்டில் கூட தமிழக அணியை, டில்லி அணி தொட முடியாது. கிரிக்கெட்டில் விசில் போடுவது சி.எஸ்.கே.,; வரும் தேர்தலில் விசில் போடுவது டி.வி.கே.,; டில்லி அணியை த.வெ.க., அடித்து நொறுக்கும்.
எனக்கும், மக்களுக்கும் ஏற்பட்டிருப்பது தேர்தலுக்கான உறவு இல்லை; இயற்கையான உறவு. மற்றவர்களுக்கு இது எலெக் ஷன். எனக்கும், என்னை நேசிக்கும் மக்களுக்கும் இது எமோஷன்.
கடவுளுக்கே படையல் போடும் உயர்ந்த மனிதர்கள் விவசாயிகள். அடுத்த ஜென்மத்தில் நான் ஒரு விவசாய குடும்பத்தில் பிறக்க ஆசைப்படுகிறேன். பிறரை போல், 'நானும் டெல்டாகாரன் தான்' என, காதில் டால்டா ஊத்த மாட்டேன். எனக்கு விவசாயம் குறித்து எதுவும் தெரியாது. ஆனால், விவசாயிகள் படும் கஷ்டம் தெரியும். த.வெ.க., ஆட்சி அமைந்ததும் விவசாயப் பிரச்னைகள் முதலில் தீர்க்கப்படும்.
நிலத்தடி நீரை பாதுகாக்காமல், மணலை, கனிமவளங்களை கொள்ளை அடித்தால், மலைகளை விழுங்கினால், தண்ணீர் திவாலாகும். மணல் மாபியா கும்பலுடன், தி.மு.க., டீலிங்கில் உள்ளது. தண்ணீர், மணல், கனிமவளம் திவாலாகப் போகிறது. மொத்தத்தில் தி.மு.க., ஆட்சியில், தமிழகமே திவாலாகப் போகிறது.
மக்கள் மீது அக்கறை இருந்தால், ஆட்சிக்கு வந்ததும், பெரிய திட்டங்களை துவக்க வேண்டும். உடனே, காவிரி, முல்லை பெரியாறு அணை பிரச்னையில் உன் கருத்து என்ன என கேட்பர். ஒருத்தன் அமைதியாக இருந்தால், அவனுக்கு எதுவும் தெரியாது என்று அர்த்தமில்லை. எனக்கும் எல்லாமும் தெரியும்.
மீனவர் பிரச்னைக்கு முதல்வர் கடிதம் எழுதிவிட்டு, துாங்க போய் விடுவார். ஆறுதல் சொல்வதெல்லாம் 'ஹம்பக்' வேலை. 'மானே, தேனே, பொன் மானே' என கடிதம் எழுதுவதெல்லாம் வேலைக்கு ஆகாது. மத்திய அரசுக்கு உண்மையாகவே அழுத்தம் கொடுக்க வேண்டும். த.வெ.க., ஆட்சிக்கு வந்ததும், மீனவர்கள் பாதுகாப்பாக இருப்பர்.
தி.மு.க., இரண்டாம் முறை ஆட்சிக்கு வந்ததாக சரித்திரமே கிடையாது. நான் இல்லேன்னா நீ; நீ இல்லேன்னா நான். நம் இருவருக்கும் மாற்றாக வேறு எவனும் வந்திடக் கூடாது. வெளியில் நாம் அடிச்சுக்கிற மாதிரி அடிச்சுக்கிட்டாலும், உள்ளுக்குள்ள, நம்ம டீலிங் பக்காவா இருக்கணும். இப்போது விஜய் வரவால், இருவர் திட்டங்களும் பலிக்காமல் போய்விடும் அச்சம் ஏற்பட்டுள்ளது. அதனால், 'நீ வழிகாட்டி நெறிமுறைகளை போட்டு தடு; நான் பழி மேல் பழி போடுறேன்' என இரு தரப்பும் களம் இறங்கி விட்டன.
கரூரில் ஆரம்பித்து, ஜனநாயகன் படம் ரிலீஸ் வரைக்கும் இது தான் நடக்கிறது. ஜனநாயகன் ரிலீஸ் பிரச்னையில், முதல்வர் பூசி மெழுகி, குரல் கொடுத்தார்; இருந்தாலும், அவருக்கு நன்றி.
தஞ்சாவூர் நகரில் கருணாநிதிக்கு சிலை வைக்க முயற்சித்தபோது, 'மக்கள் பணத்தில் யாருக்கு புகழ் பாட பார்க்கிறீர்கள்' என நீதிமன்றம் கேள்வி கேட்டது. மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்துக்கு ஏதாவது கேட்டால், நிதிச்சுமை என்பர். சிலை வைக்க மட்டும் எங்கிருந்து நிதி வருகிறது? மாநில அரசால் முடியாது என தெரிந்தும், 'நீட் தேர்வை ஒழிப்போம்' என்றனர். தி.மு.க., ஆட்சி, மோசமான மோசடி ஆட்சி. இவ்வாறு அவர் பேசினார்.

விஜய் கொடுத்த வாக்குறுதிகளில் சில...



* 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகள், கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர்க்கடன் ரத்து
* 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு, கடன் 50 சதவிகிதம் ரத்து
* இரண்டு ஏக்கர் வரை நிலம் உள்ள விவசாயிகள் மற்றும் நிலமற்றவர்களின் பிள்ளைகளின் கல்வி செலவை அரசே ஏற்கும்
* 500 ரேஷன் கார்டுகளுக்கு ஒரு ரேஷன் கடை அமைக்கப்படும். அனைத்து பொருட்களும் பாக்கெட் செய்து தரப்படும்




விபத்தில் சிக்கிய இளசுகள்



தஞ்சாவூரில் நேற்று நடந்த த.வெ.க., நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க அக்கட்சியின் தலைவர் விஜய், விமானம் மூலம் திருச்சி வந்தார்; கார் மூலம் திருச்சியில் இருந்து கூட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்தார்.

அப்போது, ஏராளமான இளைஞர் கள், பைக்கில் விஜய் சென்ற காரை பின்தொடர்ந்தனர். இதில் சிலர் பைக்கை இயக்கியபடியே, காரில் இருந்த விஜயுடன் செல்பி எடுக்க முயன்றனர். அப்போது, திருச்சி கல்கண்டார்கோட்டையைச் சேர்ந்த கல்லுாரி மாணவர் விக்னேஷ், 19, அவரது நண்பர் ஷாருண், 19, ஆகிய இருவரும், போலீஸ் வாகனத்தில் மோதி கீழே விழுந்தனர்.

இதில், விக்னேஷ் தலையில் பலத்த காயமடைந்தார், ஷாருண் கால் எலும்பு முறிந்தது. பலத்த காயமடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதேபோல, கூட்டம் முடிந்தபின், ஒரே பைக்கில் புறப்பட்டு சென்ற, கள்ளிமேடு பகுதியைச் சேர்ந்த கலைமணி, 30, முத்து, 27, துர்கா ஸ்ரீ, 24, ஆகிய மூவரும், எதிரே வந்த வாகனத்தில் மோதாமல் இருக்க சென்டர் மீடியனில் மோதியுள்ளனர். இந்த விபத்துக்கள் குறித்து, செங்கிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

மார் 05, 2026 07:59 pm

எவனோர் சினிமாக்காரன் வசனம் எழுதி கொடுக்க கைய காலை ஆட்டி நெற்று பண்ணி பண்ணி ஒப்பிக்குது. சினிமாக்காரன் நின்றாள் முன்பு MGR ஐ சிவப்பு தோல் பார்க்க கஜோதிடம் கூடியது. விஜய காந்தி8u கருப்பு MGR என்று பெயர் பெற்றார். அது போன தலை முறை நடிகர்கள் கொஞ்சம் கோல்காய் பிடிப்பு இருந்தது. இதுக்கு அரசைய்ய ஏமாற்றுதல் குட்டி சோக்கு மற்றும் கொள்ளை பிடிப்பு தான் இருக்கு.

Reply Rate this
மார் 05, 2026 05:44 pm

ஏண்டா... நீ என்னவோ உலகத்துக்கு தெரியாததை புதுசா சொல்ற மாதிரி சொல்ற.... இது உனக்கு புதுசுடா... ஏன்னா, நீ புதுசா அரசியலுக்கு வந்தவன்... இங்க இருக்குற எல்லாருக்குமே தெரியும். உனக்கு தெரியாததை ஊருக்கே தெரியாது..ன்னு நீ நினைச்சுட்டு பேசுற... ..

Reply Rate this
மார் 05, 2026 03:58 pm

இவர் ஒரு தற்குறி என்பதை ப்ரோவ் செய்து கொண்டு உள்ளார் காங் காலில் விழுந்து கிடக்கிறது அதை பற்றி பேச வக்கு இல்லை

Reply Rate this
மார் 05, 2026 02:21 pm

தேற மாட்டர்

Reply Rate this
மார் 05, 2026 12:13 pm

விஜய் கிறிஸ்தவர் என்பதால் DMK வை கிண்டல் அடிக்க ஓம்சக்தி பராசக்தி என்று இந்து கடவுளின் பெயரை கொண்டு கிண்டல் அடித்து இருக்கிறார். இந்து கடவுள் பெயரை இப்படி கிண்டல் அடிக்க பயன் படுத்தியது வன்மையாக கண்டிக்க தக்கது

Reply Rate this
மார் 05, 2026 09:28 am

சரி இப்பத்தான் காங்கிரஸ் கூட்டணி தவெகவில் இல்லை என்றாகிவிட்டது. இப்போது சீமானிடம் பேசி கூட்டணி வைக்க வேண்டியதுதானே. ஒரு நாற்பது ஐம்பது சீட் நீங்கள் பிடித்து விட்டால் பின்னர் யார் தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்யலாம்

Reply Rate this