காங்., - எம்.பி.,யை தேர்ந்தெடுத்த தி.மு.க.,?
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: காங்கிரசுக்கு ஒரு ராஜ்யசபா, 'சீட்' ஒதுக்கினாலும், அந்த சீட் யாருக்கு போக வேண்டும் என்பதை தி.மு.க., தான் முடிவு செய்தது என, காங்கிரசில் பேசப்படுகிறது.ராகுல் தனக்கு நெருக்கமானவர்களுக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்க விரும்பினார். காங்., செய்தித் தொடர்பாளராக உள்ள பவன் கெரா, ம.பி., - காங்., தலைவர் மீனாட்சி நடராஜன் ஆகியோர் ராகுல் பட்டியலில் இருந்தனர்.கடந்த முறையே பவன் கெராவுக்கு ராஜ்யசபா சீட் கிடைக்கவில்லை. 'என் தவம் சரியில்லையோ?' என, சமூக வலைதளத்தில் பதிவு செய்து வருத்தத்தை வெளிப்படுத்தி இருந்தார் அவர். எனவே, இந்த முறை நிச்சயம் கிடைத்து விடும் என எதிர்பார்த்தார். தமிழகத்திலிருந்து இவரை ராஜ்யசபா எம்.பி.,யாக்க ராகுல் விரும்பினார்.ஆனால், தி.மு.க., தரப்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாம். 'தமிழகத்திலிருந்து ஒரு வட மாநிலத்தவருக்கு சீட் கொடுத்தால், அதை தேர்தல் பிரசாரத்தில் அ.தி.மு.க., பயன்படுத்தும். மேலும், திராவிட கொள்கைக்கு இது எதிரானது. அதனால், பவன் கெராவுக்கு தமிழகத்திலிருந்து சீட் கொடுக்கக் கூடாது' என, தி.மு.க., தலைமை கறாராக சொல்லிவிட்டதாம்.'சரி, பவன் வேண்டாம். மீனாட்சி நடராஜன் தமிழர் தானே... அவருக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கிறோம்' என, ராகுல் தரப்பில் சொல்லப்பட்டதாம். அதற்கும் திராவிட மாடல் எதிர்ப்பு தெரிவித்ததாம். 'அவர் தமிழராக இருந்தாலும் வசிப்பது வட மாநிலத்தில். அதனால் வேறு ஒருவருக்கு கொடுங்கள்' என எதிர்ப்பு தெரிவித்து, மீனாட்சிக்கும் தடை போட்டதாம் தி.மு.க., தலைமை. இதனால், தி.மு.க., தலைமை மீது ராகுல் கடும் வெறுப்பில் உள்ளதாக சொல்லப்படுகிறது.இதனால் தான், கிறிஸ்டோபர் திலக்கிற்கு ராஜ்யசபா எம்.பி., வாய்ப்பு கிடைத்தது. இவரும் ராகுலுக்கு நெருக்கம். தவிர, இவர் வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், நாகாலாந்து, திரிபுரா, சிக்கிமுக்கு காங்., செயலராக பணியாற்றுகிறார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தயா மாதிரியே கிறிஸ்டபருக்கும் ஹிந்தி நன்கு தெரியும். முக்கிய தகுதி. ஹிந்தி வாழ்க.
மேலும் செய்திகள்
தேஜ கூட்டணி பிரபலம் அடைவதால் திமுகவுக்கு அதிர்ச்சி: பிரதமர் மோடி
மார் 10, 2026 04:50 pm
நோயை விட கொடுமையானது ஒரே நாடு; ஒரே தேர்தல் முறை முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்
மார் 10, 2026 02:12 am