நீண்ட இழுபறிக்கு பின் திமுகவுடன் தொகுதி பங்கீடு கையெழுத்து; 5 தொகுதிகளை ஏற்றது மார்க்சிஸ்ட்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: நீண்ட இழுபறிக்கு பிறகு திமுக அளித்த 5 தொகுதிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக் கொண்டது. இதற்கான ஒப்பந்தத்தில் முதல்வர் ஸ்டாலின், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் கையெழுத்திட்டனர்.தி.மு.க., கூட்டணியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நீண்ட இழுபறிக்கு பின், ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அதேபோல், மார்க்சிஸ்ட் கட்சிக்கும் ஐந்து தொகுதிகள் வழங்க தி.மு.க., முடிவு செய்தது. அதை ஏற்க மறுத்த மார்க்சிஸ்ட் கட்சி, சென்னையில் தேசிய பொதுச்செயலர் பேபி தலைமையில், மாநில நிர்வாகக் குழுவை கூட்டி ஆலோசித்தது.
திருப்தியில்லை
நிருபர்கள் சந்திப்பில் மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் கூறியதாவது: “தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினரிடம், கூடுதல் தொகுதிகள் கேட்டு தொடர்ந்து வலியுறுத்தினோம். எங்களுக்கு ஐந்து தொகுதிகள் கொடுத்ததில் திருப்தியில்லை,'' என்றார்.தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 23 )
இதற்கு பஞ்சு மூட்டை பேசாமல் குடோனிலேயே இருந்து இருக்கலாம் .
சிவப்புத் துண்டை எடுத்து விட்டு, ஒரு ஜரிகை துண்டு, வெத்தலைப்பெட்டி, லாந்தர் அல்லது டார்ச் வைத்துக் கொண்டால் சிறப்பாக இருக்கும்.
உங்க தகுதிக்கு இது ரொம்ப அதிகம் விலாசம் இல்லாத கட்சிக்கு திமுக எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது நினைத்து பெருமைப்பட்டு வாங்கிட்டு ஓரமா நீக்கவும்
ஒவ்வொரு முறையும் தீம்க்காவுக்கு அடிமை சாசனம் எழுதிக்கொடுத்து பெருமை அடைகிறார்கள் கம்யூனிஸ்ட்கள்.
கொடுக்கறது வாங்கிக்கற நிலைமைக்கு, எதுக்கு வெட்டி வீராப்பு எல்லாம் ? வாங்கற அஞ்சு பத்துக்கு இது தேவைதானா ?? நான் சீட்டை சொன்னேன்.
கேட்டதும் கிடைப்பதில்லை கண்ணா இது கீதையின் ராகசியமடா கண்ணா கொடுத்ததை வான்கிகொள்ளு கண்ணா இல்லையேல் அதும் போயிவிடும் கண்ணா
கொடுத்ததை வான்கிகொள்ளு.. இல்லையேல் அதும் போயிவிடும்
இந்த இத்துப்போன கூட்டத்துக்கு இதுவே அதிகம் தான்....
மக்களே இவர்களை சட்டைசபைக்கு அனுப்பவதும் .. கடலில் கல்லை தூக்கி போடுவதும் ஒன்றே .. சல்லி பைசாவுக்கு பிரயோஜனம் இல்ல.
ஊரை ஏமாற்ற இருவருமே போட்ட நாடகம். முடிவு முதலிலேயே எதிர்பார்த்ததுதான்.
தோல்வி பயத்தால் வன்முறையைக் கையில் எடுக்கும் திமுக: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
மார் 24, 2026 02:14 pm
ஒன்று, இரண்டு தொகுதிகளுக்காக வெற்றி வாய்ப்பை கெடுக்க விரும்பவில்லை; திருமா பேட்டி
மார் 24, 2026 01:35 pm