Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் கருத்துக் கணிப்பு முடிவுகள்

Advertisement


நீண்ட இழுபறிக்கு பின் திமுகவுடன் தொகுதி பங்கீடு கையெழுத்து; 5 தொகுதிகளை ஏற்றது மார்க்சிஸ்ட்

நீண்ட இழுபறிக்கு பின் திமுகவுடன் தொகுதி பங்கீடு கையெழுத்து; 5 தொகுதிகளை ஏற்றது மார்க்சிஸ்ட்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: நீண்ட இழுபறிக்கு பிறகு திமுக அளித்த 5 தொகுதிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக் கொண்டது. இதற்கான ஒப்பந்தத்தில் முதல்வர் ஸ்டாலின், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் கையெழுத்திட்டனர்.
தி.மு.க., கூட்டணியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நீண்ட இழுபறிக்கு பின், ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அதேபோல், மார்க்சிஸ்ட் கட்சிக்கும் ஐந்து தொகுதிகள் வழங்க தி.மு.க., முடிவு செய்தது. அதை ஏற்க மறுத்த மார்க்சிஸ்ட் கட்சி, சென்னையில் தேசிய பொதுச்செயலர் பேபி தலைமையில், மாநில நிர்வாகக் குழுவை கூட்டி ஆலோசித்தது.

அதில், கடந்த முறை போலவே, ஆறு தொகுதிகளுக்கு குறையாமல் பெற முடிவு செய்தனர். நேற்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினர். அப்போது, 'சில சிறிய கட்சிகளுக்கு தலா ஒரு 'சீட்' ஒதுக்க வேண்டிய நிலை இருக்கிறது. கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இடம்பெற்றதால், தங்களுக்கு ஆறு தொகுதிகள் தர முடியவில்லை; ஐந்து தொகுதிகளை தருகிறோம். அதை ஏற்று கூட்டணிக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்' என முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். அதனை மார்க்சிஸ்ட் ஏற்கவில்லை. தொடர்ந்து அக்கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.

இதனைத் தொடர்ந்து இன்று இரவு சண்முகம் தலைமையில் மார்க்சிஸ்ட் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினர். அப்போது 5 தொகுதிகளை ஏற்றுக் கொண்ட மார்க்சிஸ்ட், அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டது.

திருப்தியில்லை

நிருபர்கள் சந்திப்பில் மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் கூறியதாவது: “தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினரிடம், கூடுதல் தொகுதிகள் கேட்டு தொடர்ந்து வலியுறுத்தினோம். எங்களுக்கு ஐந்து தொகுதிகள் கொடுத்ததில் திருப்தியில்லை,'' என்றார்.

Advertisement

மார் 24, 2026 09:20 am

இதற்கு பஞ்சு மூட்டை பேசாமல் குடோனிலேயே இருந்து இருக்கலாம் .

Reply Rate this
மார் 24, 2026 04:58 am

சிவப்புத் துண்டை எடுத்து விட்டு, ஒரு ஜரிகை துண்டு, வெத்தலைப்பெட்டி, லாந்தர் அல்லது டார்ச் வைத்துக் கொண்டால் சிறப்பாக இருக்கும்.

Reply Rate this
மார் 24, 2026 04:38 am

உங்க தகுதிக்கு இது ரொம்ப அதிகம் விலாசம் இல்லாத கட்சிக்கு திமுக எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது நினைத்து பெருமைப்பட்டு வாங்கிட்டு ஓரமா நீக்கவும்

Reply Rate this
மார் 24, 2026 03:53 am

ஒவ்வொரு முறையும் தீம்க்காவுக்கு அடிமை சாசனம் எழுதிக்கொடுத்து பெருமை அடைகிறார்கள் கம்யூனிஸ்ட்கள்.

Reply Rate this
மார் 24, 2026 02:39 am

கொடுக்கறது வாங்கிக்கற நிலைமைக்கு, எதுக்கு வெட்டி வீராப்பு எல்லாம் ? வாங்கற அஞ்சு பத்துக்கு இது தேவைதானா ?? நான் சீட்டை சொன்னேன்.

Reply Rate this
மார் 24, 2026 02:10 am

கேட்டதும் கிடைப்பதில்லை கண்ணா இது கீதையின் ராகசியமடா கண்ணா
கொடுத்ததை வான்கிகொள்ளு கண்ணா இல்லையேல் அதும் போயிவிடும் கண்ணா

Reply Rate this
மார் 24, 2026 02:10 am

கொடுத்ததை வான்கிகொள்ளு.. இல்லையேல் அதும் போயிவிடும்

Reply Rate this
மார் 24, 2026 12:17 am

இந்த இத்துப்போன கூட்டத்துக்கு இதுவே அதிகம் தான்....

Reply Rate this
மார் 23, 2026 11:37 pm

மக்களே இவர்களை சட்டைசபைக்கு அனுப்பவதும் .. கடலில் கல்லை தூக்கி போடுவதும் ஒன்றே .. சல்லி பைசாவுக்கு பிரயோஜனம் இல்ல.

Reply Rate this
மார் 23, 2026 11:02 pm

ஊரை ஏமாற்ற இருவருமே போட்ட நாடகம். முடிவு முதலிலேயே எதிர்பார்த்ததுதான்.

Reply Rate this