இப்போதுதான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்: சொல்கிறார் ஓபிஎஸ்
சின்னமனூர்: ''முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பத்தாண்டுகளாக எண்ணற்ற சோதனைகள் சூழ்ந்தன. பல இம்சைகளை சந்தித்தேன். தற்போது தான் மகிழ்ச்சியாக உள்ளேன்,'' என, தேனி மாவட்டம் சின்னமனூரில் நடந்த தி.மு.க., நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் ஓபிஎஸ் பேசினார்.
அவர் பேசியதாவது : டில்லியில் மத்தியமைச்சர் ஒருவரை சந்திக்க நேரம் கேட்டேன். அவர் வர கூறினார். யார் யாரை கூட்டி வருகிறீர்கள், கார் நம்பர் என்ன, எத்தனை பேர் வருகிறீர்கள் என கேட்டார்கள். நானும் தகவல் கூறினேன். டில்லியில் அவரது இல்லத்தில் 15 நிமிடங்கள் காக்க வைக்கப்பட்டு திடீரென அவரது உதவியாளர் வந்து, அமைச்சர் உங்களை பார்க்க விரும்பவில்லை என்றார்.
நான் முதல்வராக இருந்தவன். கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்தவன். எவ்வளவு பெரிய அவமானம். டில்லியில் நிருபர்களிடம் தப்பித்து சென்னை விமான நிலையத்தில் நிருபர்கள் கேட்டபோது, ''எதையும் தாங்கும் இதயம் வேண்டும்,'' எனக்கூறி சென்றேன். மறைந்த முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் மக்கள் ஓட்டு போட்டு முதல்வரானவர்கள்.
ஆனால் இபிஎஸ்ஐ சசிகலா முதல்வராக்கினார். இன்றைக்கு எந்த அளவிற்கு அவரிடம் நன்றி கெட்டவராக நடந்து கொண்டிருக்கிறார். நானும் ஜெயலலிதாவால் முதல்வராக்கப்பட்டேன். ஜெயலலிதா கேட்ட போது தங்க தாம்பாளத்தில் வைத்து பதவியை திருப்பி கொடுத்து விட்டு வந்தேன். தி.மு.க.,வில் எந்த எதிர்பார்ப்பு இன்றி சாதாரண தொண்டனாக இணைந்துள்ளேன். இவ்வாறு ஓபிஎஸ் பேசினார்.
Advertisement
ஒரு சாக்கடை இன்னொரு சாக்கடையில் கலப்பது மகிழ்ச்சி. பன்னீர் நீ பன்னீர் அல்ல எதற்க்கும் உதவாத சாக்கடை.
ஆமாம் ஆமாம் பண்ணிரு இனிமேல் நீங்கள் புகுந்த வீட்டைப்பற்றித்தான் புகழ வேண்டும் அம்மாவை மறந்துவிட வேண்டும் இனிமேல் அம்மா அம்மா என்று சொல்லாமல் அங்கே சென்றதனால் அப்பா வீட்டில்போய் அம்மா அம்மா என்றே கதறினால் யாருமே கண்டு கொள்ள மாட்டார்கள் அங்கே சென்று அப்பா அப்பா என்றும் கலைஞர் முதல்வர் அவரது புள்ளையாண்டான் அவர்களைப்பற்றித்தான் பேசி புகழ வேண்டும் பிறகு அம்மா தங்கத்தாம்பாளத்தில் உம்மை வைத்துதான் முதல்வராக்கினார் என்று சொல்வது எல்லாம் இப்போது திராவிட மாடல் அரசுக்கு ஓடிப்போய் சொல்லலாமா நீ அம்மா கொடுத்த தங்க தாம்பாளத்தை திருடிக்கொண்டுதான் ஓடிவிட்டாய் அம்மாவாக உன்னிடம் கொடுக்கவே இல்லை நன்றி நாணயம் விசுவாசம் விவேகம் என்ற சொற்களை கேட்டது உண்டா மூன்று முறை முதல்வர் பதவி வகித்த முதிர்ந்த அரசியல்வாதியே உமது அரசியல் பயணம் முற்றிலும் கோணல் .
வெட்கம், மானம், மரியாதை இவற்றை எல்லாம் இழந்தபிறகு மகிழ்ச்சியாம் இவருக்கு. என்ன ஜென்மமோ இவர்?

இவர் பேட்டி கொடுக்கிறது. காலத்தின் கொடுமை.