புதுச்சேரியில் காங்- திமுக கூட்டணி உடன்பாடு கையெழுத்தானது
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புதுச்சேரி: புதுச்சேரியில் நீண்ட இழுபறிக்கு பிறகு இண்டி கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதியானது. காங்கிரஸ் -16, திமுக-12, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா ஒரு இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ளது.இண்டி கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நள்ளிரவு வரை நடந்தது. என்.ஆர்.காங்., பா.ஜ.. அ.தி.மு.க., ல.ஜ.க., உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்ட ணியில் கடந்த இரு வார மாக நீடித்து வந்த குழப்பம் முடிவுக்கு வந்து, அக்கட்சியின் வேட்பாளர்கள் மனு தாக்கலுக்கு தயாராகிவிட்டனர். தாக்கலுக்கு இன்று இறுதி நாளாக உள்ள நிலையில், கூட காங்., தி.மு.க., இ.கம்யூ.. உள்ளடக்கிய இண்டி கூட்டணியில் குழப்பம் தீராமல் இருந்தது.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 6 )
பப்பு ராகுல் இருக்கும் வரை காங்கிரஸ் கரை சேராது . தன பலம் தெரியாத பிடிவாதக்காரர் .
சோடன்கர் கோவாகாரர் . இவருக்கு தமிழ்நாடு மற்றும் பாண்டி கட்சி பலமும் தெரியாது . அரசியலும் புரியாது . இதனால் தான் தமிழ் நாட்டிலும் இவரால் இழுபறி ஏற்பட்டது .
இல்லாட்டி ...
கட்சியின் தோல்வி என்பது இந்த இண்டி கூட்டணிக்கு தெரியும் என்றாலும் கூட வாக்குகள் எவ்வளவு பெற்று தோல்வியுற்றோம் என்கிற ஆவலில்தான் இவ்வளவு களேபரமும். சென்ற முறைக்கும் இந்த முறைக்கும் தோல்வியில் வாக்கு வித்யாசத்தை அறிந்துக்கொள்ள துடிக்கின்றார்கள்.
பழனி சாமி டெல்லியில் எவ்வளவு இடம் கொடுப்பார்கள் என்று மல்லுக்கட்டுவது உங்கள் கண்ணில் தெரியாதே ….:
முரசொலி படிக்கவும்