புதுச்சேரியில் காங்- திமுக கூட்டணி உடன்பாடு கையெழுத்தானது
புதுச்சேரி: புதுச்சேரியில் நீண்ட இழுபறிக்கு பிறகு இண்டி கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதியானது. காங்கிரஸ் -16, திமுக-12, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா ஒரு இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ளது.
இண்டி கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நள்ளிரவு வரை நடந்தது. என்.ஆர்.காங்., பா.ஜ.. அ.தி.மு.க., ல.ஜ.க., உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்ட ணியில் கடந்த இரு வார மாக நீடித்து வந்த குழப்பம் முடிவுக்கு வந்து, அக்கட்சியின் வேட்பாளர்கள் மனு தாக்கலுக்கு தயாராகிவிட்டனர். தாக்கலுக்கு இன்று இறுதி நாளாக உள்ள நிலையில், கூட காங்., தி.மு.க., இ.கம்யூ.. உள்ளடக்கிய இண்டி கூட்டணியில் குழப்பம் தீராமல் இருந்தது.
கூட்டணியில் காங்.,-தி.மு.க., ஆகிய இரு கட்சிகளும் அதிக சீட் கேட்டு விடாபிடியாக இருந்ததால் இன்னும் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படவில்லை.
புதுச்சேரியில் 6 முறை ஆட்சி கட்டிவில் அமர்ந்த காங்., கட்சி கடந்த 2021ம் ஆண்டு நடந்த 15வது படுதோல்வியை சந்தித்து சட்டசபை தேர்தலில் ஆட்சியை பறி கொடுத்தது. அதுவும் 2 தொகுதியில் மட்டுமே காங்., கட்சி வெற்றிப்பெற்றது. அந்த கட்சியிலேயே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதேவேளையில் தி.மு.க., எம்.எல்.ஏ..க்களுடன் சட்டசபையில் பலமானது. இதில் இருந்தே கடந்த 5 ஆண்டுகளாக இரு கட்சிகள் இடையே உரசல் இருந்து வருகிறது. வரும் சட்டசபை தேர்தவில் புதுச்சேரியில், இண்டி கூட்டணிக்கு யார் தலைமை தாங்கு வது என்பதில் உரசல் நிலவி வரும் நிலையில், அது தொகுதி பங்கீட்டி லும் எதிரொலித்தது.
கடந்த முறை 14 இடங்களில் காங்., கட்சி போட்டியிட்டது. புதுச்சேரியில் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் களம் இறங்கியுள்ள காங்., கட்சி இம்முறை 17 தொகுதிகளில் போட்டியிட கேட்டது. ஆனால் தி.மு.க.,வும் 22 இடங்கள் வரை போட்டியிட விரும்பியது. கடைசியாக மொத்தமுள்ள 30 தொகுதிகளில் தலா 15 தொகுதிகளை சமமாக பிரித்து கொள்ள மறுத்துவிட்டது.
இந்நிலையில், காங்., கட்சியினர் நேற்று தனியார் ஓட்டலில் கூட் டணி இடங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். 5 மணி நேர ஆலோசனைக்கு பிறகு திமுக சார்பில் எம்எல்ஏக்கள் நாஜிம், சம்பத் ஆகியோர் காங்., கட்சியினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
தொடர்ந்து வெளியேறிய நாஜிம் எம்எல்ஏ தொகுதி பங்கீடு குறித்த காங்., கட்சியினர் தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர். இதனை எங்கள் கட்சி மேலிடத்துடன் கலந்து ஆலோசித்து மீண்டும் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிவித்துவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.நேற்று இரவு 9 மணிக்கு மேலும் எவ்வித முடிவும் எட்டாமல் இழுபறி நீடித்தது.
இந்நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்தை முடிந்து, காங்., கட்சி அலுவலகத்திற்கு வந்த காங்., மேலிட பொறுப்பாளர் கிரீஷ் சோடேங்கர் காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம், மூன்னாள் முதல்வர் நாராயணசாமி மற்றும் நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
பின், நள்ளிரவு 12:30 மணியளவில் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த காங்., கட்சியினர் கூட்டணி உறுதி செய்யப்பட்டுவிட்டது. காங்கிரஸ் -16, திமுக-12, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தலா ஒரு இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.
இதற்கான ஒப்பந்தம் இன்று (மார்ச் 23) மாலை 5.30 மணியளவில் கையெழுத்தானது.
Advertisement
சோடன்கர் கோவாகாரர் . இவருக்கு தமிழ்நாடு மற்றும் பாண்டி கட்சி பலமும் தெரியாது . அரசியலும் புரியாது . இதனால் தான் தமிழ் நாட்டிலும் இவரால் இழுபறி ஏற்பட்டது .
கட்சியின் தோல்வி என்பது இந்த இண்டி கூட்டணிக்கு தெரியும் என்றாலும் கூட வாக்குகள் எவ்வளவு பெற்று தோல்வியுற்றோம் என்கிற ஆவலில்தான் இவ்வளவு களேபரமும். சென்ற முறைக்கும் இந்த முறைக்கும் தோல்வியில் வாக்கு வித்யாசத்தை அறிந்துக்கொள்ள துடிக்கின்றார்கள்.
பழனி சாமி டெல்லியில் எவ்வளவு இடம் கொடுப்பார்கள் என்று மல்லுக்கட்டுவது உங்கள் கண்ணில் தெரியாதே ….:

பப்பு ராகுல் இருக்கும் வரை காங்கிரஸ் கரை சேராது . தன பலம் தெரியாத பிடிவாதக்காரர் .