Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கியது திமுக

 தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கியது திமுக
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் முதல்வர் ஸ்டாலின், பிரேமலதா கையெழுத்து போட்டனர்.
ஏப்.,23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் மார்ச் 30 ம் தேதி துவங்குகிறது. இதனால், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 28 சட்டசபை தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட், இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு தலா 5, மதிமுகவுக்கு 4, முஸ்லிம் லீக், கொமதேகவுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இன்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து இன்று மாலை, முதல்வர் ஸ்டாலினை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, சுதீஷ், விஜய பிரபாகரன் ஆகியோர் சந்தித்தனர். அப்போது இரு கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

ஏற்கனவே தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டது. அதில், சுதீஷ் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

27 ம் தேதி வேட்பாளர் பட்டியல்

பிறகு பிரேமலதா கூறியதாவது: தொகுதி பங்கீடு இன்று இறுதி செய்யப்பட்டது. தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டது. ஏற்கனவே 1 ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டது. திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வராக பதவியேற்பார்.இக்கூட்டணி நிச்சயம் பல்வேறு திட்டங்களை தேர்தல் அறிக்கை மூலம் அறிவிக்கப்படும். விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது குறித்து நாளையும், நாளை மறுநாளும் பேச்சுவார்த்தை நடக்கும். 27 ம் தேதி தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். ஏப்.,1ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வோம்.
போட்டியிடும் உத்தேச பட்டியலை திமுகவிடம் வழங்கி உள்ளோம். நாளையும், நாளை மறுநாளும் பேசி முடிவு செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது மதசார்பற்ற வெற்றி கூட்டணி. இது தொண்டர்கள் விரும்பிய கூட்டணி. தொண்டர்கள் வரவேற்கும் கூட்டணி. அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள்.

முதல்முறை வெற்றி பெற்றது விருத்தாசலம். எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்து வழங்கியது ரிஷிவந்தியம். அந்த தொகுதிகள் உத்தேச பட்டியலில் உள்ளது. ஏற்கனவே தேமுதிக வெற்றி பெற்ற தொகுதிகளும் உத்தேச பட்டியல் உள்ளது. விஜயபிரபாகரன் போட்டியிட்ட விருதுநகர் தொகுதியும் உள்ளது. குடியாத்தம், ஆம்பூர், விருகம்பாக்கம் தொகுதியும் உத்தேச பட்டியலில் உள்ளது. 25 தொகுதிகள் அடங்கிய பட்டியலை வழங்கி உள்ளோம். நாங்கள் லேட்டாக வந்தாலம் லேட்டஸ்ட் ஆக வந்துள்ளோம்.

இதைவிட அதிக தொகுதிகளை கேட்டோம். நாங்களும் விட்டு கொடுத்த பிறகு தான் 10 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டது. கூட்டணி தர்மத்துக்காக தொகுதிகளை விட்டுக் கொடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மார் 25, 2026 01:10 am

ஸ்டாலினுக்கு இவ்வளவுதான் அரசியல் ஞானம் . யார் யாருக்கு எவ்வளவு மக்கள் மத்தியல் ஆதரவு உள்ளது என்பதை கூட அறியாமல் ஒரு ராஜ்யசபா சீட்டும் 10 சட்டமன்ற தொகுதிகளும்.. கொடுமையாக இருக்கின்றதே என்றுதான் கட்சிக்காரர்கள் பேசிக்கொள்கின்றார்கள். தொகுதிக்கு வெறும் நூற்றுக்கணக்கில் உள்ள தீராத கட்சிக்கு வாரி வழங்கியதில் மர்மம் என்னவோ. இதில் கனமான பெட்டிவேரு கைமாறியிருக்கும். பெட்டிபிரேமா என்று மக்களின் விமர்சனம் திமுகவுக்கு பலத்த சேதத்தை இந்த தேர்தல் கொடுக்கும் என்பதை அறிவீராக.. தேர்தல் முடிந்தபின் புலம்புவதை கேட்பீர்கள் ஸ்டாலின்.

Reply Rate this
மார் 25, 2026 12:04 am

பத்தும் சுத்தம்.

Reply Rate this
மார் 24, 2026 11:16 pm

சைக்கோ திருமா கம்மிகள் உங்களுக்கு சூடு சொரணை மானம் வெட்கம் எதுவும் இருக்கா இல்லையா தயவுசெய்து தெரியப்படுத்தவும் எடப்பாடி அவர்கள் வெற்றி மேல் வெற்றி அடுத்த அதிமுக ஆட்சி உறுதி உறுதி உறுதி உறுதி

Reply Rate this
மார் 24, 2026 09:53 pm

பிரேமாலுக்கு அடிச்சுது யோகம்

Reply Rate this
மார் 24, 2026 09:43 pm

வெற்றிவாய்ப்பைப் பார்த்து கொடுத்திருப்பாங்களோ ?

Reply Rate this
மார் 24, 2026 09:36 pm

ஆமாம் கட்சில நான்கு பேர தான் இருக்காங்க பாக்கி ஆறு பேர வேட்பாளர்றுக்கு எங்கே போவாங்க சோக்கா எங்கே போறது

Reply Rate this
மார் 24, 2026 09:30 pm

திமுக ஆட்சிக்கு முட்டு கொடுத்துட்டு இருந்த உண்டிக்கட்சி, திருமா, வைகோ, இவர்களுக்கு எல்லாம் வெட்கம், மானம் சூடு சொரணை இருக்க என்று பார்ப்போம். 2.25 வோட்டு சதம் உள்ள திருமாவுக்கு 8 சீட் ஆனால் 0.17 சதம் உள்ள பிரேமலதாவுக்கு 10 சீட் + ஒரு ராஜ்ய சபா சீட் . என்ன ஒரு தெலுங்கு பாசம்.

Reply Rate this
மார் 24, 2026 09:22 pm

கட்டுமரம் சொன்ன பழம் நழுவி பாலில் விழும் என்ற சொல் ரொம்ப வருஷம் கழிச்ச்சு உண்மை ஆகிவிட்டது. பாலில் மட்டுமல்ல, தேனிலும் விழுந்தது.ஆனால் மக்கள் என்ன முடிவு எடுப்பார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்

Reply Rate this
மார் 24, 2026 09:20 pm

10 சீட்டுகள் ADMK கூட்டணிக்கு வெற்றி உறுதி

Reply Rate this
மார் 24, 2026 09:19 pm

தேமுதிக 10 தொகுதிகளிலும் வெற்றி பெருமா காத்திருந்துதான் பார்க்க வேண்டும்...

Reply Rate this