/ செய்திகள் /  ரூ.2,000த்தை வைத்து ஏசி வாங்க முடியுமா: அன்புமணி

 ரூ.2,000த்தை வைத்து ஏசி வாங்க முடியுமா: அன்புமணி

சென்னை: தி.மு.க., ஆட்சியில், 15 லட்சம் கோடி ரூபாய் கடனில் தமிழகம் தத்தளிப்பதாக, பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றஞ்சாட்டினார். சென்னையில் நேற்று நடந்த பா.ம.க., தொழிற்சங்க பேரவை பொதுக்குழு கூட்டத்தில், அவர் பேசியதாவது: நாடு சுதந்திரம் அடைந்த பின், 74 ஆண்டுகளில் தமிழகத்தின் நேரடி கடன் 4.54 லட்சம் கோடி ரூபாய். ஆனால், கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும், தி.மு.க., அரசு வாங்கிய கடன் 4.96 லட்சம் கோடி ரூபாய். இது தவிர, பொதுத்துறை நிறுவனங்கள் வாயிலாக, 5 லட்சம் கோடி ரூபாய் கடனை தி.மு.க., அரசு வாங்கியுள்ளது. இதையும் சேர்த்து, மொத்தம் 1௫ லட்சம் கோடி ரூபாய் கடனில் தமிழகம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. தேர்தலுக்காக இந்த ஆண்டு பொங்கலுக்கு 3,000 ரூபாய் கொடுத்தனர். இப்போது, மகளிர் உரிமைத் தொகை பெறுவோருக்கு 5,000 ரூபாய் கொடுத்துள்ளனர். அதில், கோடைக் காலத்திற்காக 2,000 ரூபாய் கொடுத்துள்ளனர். இதை வைத்து, 'ஏசி' வாங்க முடியுமா? இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

baala
பிப் 19, 2026 10:51

மக்களின் பணத்தை கொள்ளையடித்து வைத்து இருப்பவர்களுக்கு 1000, 2000 ஒரு பொருட்டாக தெரியாது. ஏழை மக்களுக்கு தான் தெரியும் அதன் அருமை.


baala
பிப் 19, 2026 10:49

முடியாது தான். அரசியல்வாதிகள் போல கொள்ளை அடித்தால் தீவையே வாங்கலாம்.


Arul Narayanan
பிப் 19, 2026 09:20

அன்புமணி போன்றவர்களுக்கு கோடையை சமாளிக்க ஏசி தேவைப் படலாம். ஏழைகளுக்கு எந்த அணி வென்றாலும் மாதம் 2000 கிடைக்கும் அல்லவா? அந்த உத்தரவாதத்தால் தவணையில் ஏசி கிடைக்கும். அது சரி. அன்புமணி இலவசத்தை எதிர்ப்பவர் ஆயிற்றே. இப்போது மேலும் கொடுக்க சொல்லி தூண்டி விடுகிறாரே.