/ செய்திகள் / பஹல்காம் சம்பவத்தை கண்டித்து போராடாதது ஏன்? திமுக கூட்டணிக்கு அண்ணாமலை கேள்வி

பஹல்காம் சம்பவத்தை கண்டித்து போராடாதது ஏன்? திமுக கூட்டணிக்கு அண்ணாமலை கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஈரான் ஆட்சியாளர் கமேனி கொலையைக் கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்திய திமுக கூட்டணி கட்சியினர், பஹல்காமில் இந்தியர்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து போராடாதது ஏன் என்று பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.அணுஆயுத ஒப்பந்தத்திற்கு பிடி கொடுக்காத ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28ம் தேதி அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதில், ஈரானின் ஆட்சியாளர் கமேனி உள்பட 48 முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். கமேனி கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து பல்வேறு நாடுகளில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடந்தது. அந்த வகையில், சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை முஸ்லிம் அமைப்புகள் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தின. இதில் விசிக தலைவர் திருமாவளவன், மனிதநேய ஜனநாயகக் கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்று, அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.இது குறித்து பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளால், பஹல்காமில் நடத்தப்பட்ட கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதலில் அப்பாவி இந்தியர்கள் கொல்லப்பட்டபோது, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளோ கண்டனம் தெரிவித்து வீதியில் இறங்கி போராடவில்லை.ஆனால்,நேற்று சென்னையில் முழு போலீஸ் பாதுகாப்புடன் ஒரு போராட்டம் அரங்கேறியது. தங்களின் உரிமைகளுக்காக போராடும் ஆசிரியர்கள், நர்சுகள், அங்கன்வாடி பணியாளர்கள், அரசு ஊழியர்களின் போராட்டங்களுக்கு இதுபோன்ற பாதுகாப்பு சலுகை வழங்கப்படுவதில்லை. மாறாக, போராட்டக்குரல் எழுப்பினாலே கைது செய்யப்படுகிறார்கள்.தி.மு.கவைப் பொறுத்தவரையில் கூட்டணி கட்சியினரை எப்போதும் திருப்திபடுத்துதலே அவர்களின் முக்கிய நோக்கமாகும், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 44 )

அப்பாவி
மார் 03, 2026 00:29

மணிப்பூருக்குப் போய் அண்ணாமலை போராடினாரு. நிறைய பேருக்கு தெரியாது.


sivaram
மார் 02, 2026 23:56

நாய்கள் எப்பொழுதும் அதனுடைய எஜமானர் சொல்வதைதான் கேட்கும் இது உலகத்தில் எல்லா இடங்களிலும் நடக்கிறது


Nathansamwi
மார் 02, 2026 23:54

சிறப்பான கேள்வி ...


saravanan
மார் 02, 2026 22:24

அண்ணாமலையாரின் கேள்வி நியாமானதுதானே. தீவிரவாத தாக்குதல்களில் இறந்து போனாலும் அவர்களுக்கு வாக்கு வங்கி என்ற ஒன்று மட்டும் இல்லையென்றால் அங்கு மனிதம் மறைந்து கணிதம் தலைதூக்கிவிடுகிறது மதச்சார்பற்ற தூய அரசியல்வாதிகளாக கூறிக்கொள்ளும் தமிழகத்திலுள்ள சில அரசியல் கட்சியினர் வாக்கு வங்கி அரசியலுக்காகவும் சிறுபான்மையின பாதுகாவலர்களாக தங்களை காட்டிக் கொள்ளவும் இப்படிப்பட்ட நாடகங்களை அரங்கேற்றுகின்றனர்


பேசும் தமிழன்
மார் 02, 2026 20:07

பிஜெபி ஆட்சிக்கு வந்த பிறகு.... இது போல் யாராவது போராட்டம்.. அது இது என்றால்.... லத்தி சார்ஜ் மூலம்..... கையை காலை உடைக்க வேண்டும்.... இனிமேல் ஒரு பயலும் போராட்டம் என்ற பெயரையே உச்சரிக்க கூடாது.


பேசும் தமிழன்
மார் 02, 2026 20:03

எதற்க்காக போராட்டம்... பேசாமல் ஈரான் போய்.... ஈரான் சார்பாக சண்டையில் பங்கு பெறலாமே.... இவனுகளை யார் தடுத்தது..... தமிழக மக்கள் நிம்மதியாக இருப்பார்கள்....


பேசும் தமிழன்
மார் 02, 2026 20:00

அவர்கள் எப்படி போராட்டம் நடத்துவார்கள்.... அவர்கள் உள்ளுக்குள் மனசு குளிர்ந்து இருப்பார்கள்..... செய்ததது இவர்களின் மானசீக கூட்டாளிகள் தானே !!!


subash
மார் 02, 2026 19:45

அமைச்சர் ஏ வ வேலு சொல்லிவிட்டார். தமிழ்நாடு என்பது வேறு இந்தியா என்பது வேறு. எனவே டுமிலர்களுக்கு பாகிஸ்தான், ஈரான், ஈராக், பாலஸ்தீனம், துபாய், அரேபியா போன்ற நாடுகளின் மீதுதான் பற்றுதல் உண்டு. இந்தியா என்னவானாலும் டுமிலர்களுக்கு கவலை இல்லை.


பைரவன்
மார் 02, 2026 19:17

போராட்டக்காரர்களை ஈரானுக்கு அனுப்பி விடலாம். ஈரானுக்காக திராவிஷ கும்பல் சண்டை போடட்டும்.


ஒட்டு பிச்சை
மார் 02, 2026 18:48

பதவி, வாக்கு இவைகளுக்காக,சிறுபான்மை மக்களை ஏமாற்றும் ஹிந்து மக்களை அவமானப்படுத்தும் இந்த கேடு கெட்ட கொள்ளை கூட்டம் ஒழியும் நாளே த.நா வின் விடியல்.


மேலும் செய்திகள்