/ செய்திகள் /  அ.தி.மு.க.,விடம் 4 தொகுதிகள் கேட்பு

 அ.தி.மு.க.,விடம் 4 தொகுதிகள் கேட்பு

அ.தி.மு.க., கூட்டணியில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிபேட்டை ஆகிய மாவட்டங்களில் ஆறு தனி தொகுதிகளை தேர்வு செய்து கொடுத்துள்ளோம்.அதில் நான்கு தொகுதிகள் கொடுக்க வேண்டும் என, அழுத்தம் கொடுத்துள்ளோம். நான்கு தொகுதிகளை கொடுப்பர் என எதிர்பார்க்கிறோம். நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே டீ குடித்துவிட்டு வெளியே வந்தவர்களை முகமூடி அணிந்து போதையில் வந்த கும்பல், சாலையில் சென்றோரை சரமாரியாக வெட்டி தப்பிச் சென்றுள்ளது. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என்பதற்கு, இந்நிகழ்வும் ஒரு உதாரணம். தி.மு.க.,வுக்கு ஆதாரவாக இருக்கும் அரசு ஊழியர்களே, தற்போது எதிர்த்து போராட்டம் நடத்துகின்றனர். 5,000 ரூபாய் மட்டுமல்ல பத்தாயிரம் ரூபாய் கொடுத்தாலும் தி.மு.க.,வுக்கு வெற்றி வாய்ப்பு இல்லை. ஜெகன் மூர்த்தி, தலைவர், புரட்சி பாரதம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Krishnamurthy Venkatesan
மார் 04, 2026 12:59

எதற்கும் 234 தொகுதிகளும் வேண்டும் என சொல்லி வையுங்கள்.


Santhakumar Srinivasalu
மார் 04, 2026 12:56

இவ்வளவு நாள் இந்த ஜகன் மூர்த்தி எங்க ஒழிந்து இருக்கிறார்?


Raghavan
மார் 04, 2026 11:00

கட்சியில் இருப்பதே 10 பேர்கள் தான் இதில் 6 பேருக்கு சீட் வேணுமாம். ஊர் குருவி பருந்தாக முடியுமா. ஏதோ கொடுத்த தொகுதியை வாங்கிகிட்டு பெட்டியும் வாங்கிகிட்டு போகிறதைவிட்டுவிட்டு 6 தொகுதி வேண்டும் 10 தொகுதிவேண்டும் என்பதெல்லாம் வீண் கனவு.


P. SRINIVASAN
மார் 04, 2026 10:56

இவனே ஒரு பிராடு... இவனுக்கு 4 இல்ல 1னே அதிகம்தான்.. இவன் ஒரு பக்கா திருடன்.. நானே இவன்கிட்டே பணம் ஏமாந்து இருக்கேன் ஒரு மெடிக்கல் சீட்டுக்கு.. திருடன்...


மேலும் செய்திகள்