அ.தி.மு.க., - அ.ம.மு.க., ஒட்டாத உறவு?
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
தே.ஜ., கூட்டணியில் இணைந்து, 'அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியுடனான பகையை மறந்து பங்காளி ஆகி விட்டோம்' என அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் கூறி, ஒரு மாதம் ஆகி விட்டது. அதன் பின், இருவரும் இணைந்து எந்தவொரு அரசியல் நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை. இது இரு கட்சியினர் இடையே, சுமுக உறவு இல்லாத நிலையை காட்டுவதாக கூறப்படுகிறது.
அ.தி.மு.க.,வினர் கூறியதாவது:
தினகரன், சில நிர்பந்தங்களுக்கு ஆட்பட்டு, தே.ஜ., கூட்டணியில் இணைந்து விட்டார். ஆனால், கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமி என கூற மறுக்கிறார். அதோடு, தங்கள் கட்சிக்கு, கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ., சீட்களை ஒதுக்கும் என்ற ரீதியில் பேசுகிறார். அ.ம.மு.க.,வினர், அ.தி.மு.க.,வோடு உள்ள பழைய பகையை மறக்கவில்லை. அதனால் தான், பழனிசாமி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு அழைத்தும் அ.ம.மு.க.,வினர் புறக்கணிக்கின்றனர். இதனால், இரு கட்சியினரும் தேர்தல் பணியில் இணைந்து செயல்படுவரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, பீஹார் தேர்தலின்போது, தே.ஜ., கூட்டணி தலைவர்கள் இடையே ஒற்றுமை ஏற்படுத்த, கூட்டணி கட்சி தலைவர்களின் வீடுகளில் விருந்து நிகழ்ச்சி நடந்தது. அதேபோன்று, தமிழகத்திலும், பழனிசாமி - தினகரன் வீடுகளில் விருந்து நிகழ்ச்சிக்கு, பா.ஜ., தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதற்கு தினகரன் ஒப்புக்கொள்ளாததால், அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 12 )
TTV will be a sleeper cell in ADMK and KAS in TVK does the same too
ஓட்டும் உறவும் ஓட்டை நிர்ணயிக்காது
எவன் சொண்ணது ஒட்டவில்லை என்று...இரு கட்சி அடிமட்ட தொண்டர்களும் ஒன்றாகி விட்டோம்.மதுரை வரும் பிரதமர் நிகழ்வை பார்க்கத்தானே போகிறீர்கள்.
இன்றைக்கு கிடைத்த அவுல். இந்து குருமாவுக்கு ஓய்வு கொடுத்துவிடீர்கள்.
அதிமுக கூட்டணியில் எல்லாக் கட்சிகளும் ஒட்டாத உறவு தான், சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் கூட்டணி அம்பேல் ஆகிவிடும்!
என்னமோ தெரியவில்லை, அண்ணாமலையின் விசுவாசியாகிய நான் எட்டப்பனை ஏற்றுக் கொள்ள மனம் வருவதில்லை. ஒருவேளை அதைப் போன்றே டிடிவியும் நினைத்துக் கொண்டிருக்கிறாரோ. எது எப்படியோ பழனிச்சாமி மனம் திருந்தினால் நல்லது.
TTV will take over soon..
அ.தி.மு.க., - அ.ம.மு.க., ஒட்டாத உறவு? இந்த கூட்டணி ஆட்சிக்கு வந்துட்டா நல்லாவே ஒட்டும் ........
எப்படி ஓபிஎஸ் கூடாரம் சிதறி ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் சென்றதோ அதே போல் டிடிவியின் கூடாரமும் காலியாகப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை...
EPS, அதிமுகவுக்கு வந்த கேடு.
மற்ற கொள்ளையர்களை விட இவர் எவ்வளவோ மேல், இவர் தன்னுடைய ஆளுமையை கட்சியை காப்பாற்றுவதில் காட்டுகிறார், சசிகலா கும்பலால் அதிமுக கட்சிக்கு ஊழல் கட்சி என்று பெயர் வாங்கி கொடுத்தார்கள். பன்னீர் தன்னுடைய பதவிகளை காப்பாற்றுவதில் குறியாக இருந்தாரே ஒழிய கட்சிக்கு விசுவாசமாக செயல் படவில்லை. ஒபிஸ் தான் சசிகலா கும்பலை கட்சியை விட்டே விலக்க வேண்டியது ஏற்பட்டது. T.T.V. தினகரன் கட்சியை கைப்பற்ற முனைந்ததாலே ஓரங்கட்டப்பட்டார். ஆக மொத்தம் கட்சியை காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணம் இவர்களுக்கு இல்லை எம்ஜிஆர் ஆரம்பித்த அண்ணா திமுகவின் தலைவர்களான ஜெயலலிதாவையும், அண்ணாவை அண்ணாமலை விமர்சித்த போது இவர்கள் யாரும் ஒரு அறிக்கை கூட அண்ணாமலைக்கு எதிராக விடவில்லை. ஆனால் அந்த ஒரே காரணத்திற்காகவே கூட்டணியில் இருந்தே வெளியேறினார் எடப்பாடி
மேலும் செய்திகள்
டில்லிக்கு தமிழகம் என்றுமே அவுட் ஆப் கண்ட்ரோல் தான்; ஸ்டாலின்
மார் 04, 2026 09:16 pm
ஸ்கிரிப்டை மனப்பாடம் செய்து படிக்கும் விஜய்; அதிமுக மாஜி அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்
மார் 04, 2026 06:05 pm
சுயமரியாதையை சீண்டி பார்ப்பவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்
மார் 04, 2026 01:11 pm