கோயில் இடத்தில் கட்சி ஆபீஸ்: ஓட்டம் எடுத்த திமுக பெரும் புள்ளிகள் | DMK Temple Land | Party Office
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வடக்கு பகுதியில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான இடத்தில், தி.மு.க மதுக்கூர் வடக்கு கிளை அலுவலகம், கடந்த பிப்ரவரி 11ம் தேதி திறக்கப்பட்டது. மேலும், நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில், கட்சி தலைவர்களின் உருவச்சிலைகள் வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கோயில் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்சி அலுவலகத்தை அகற்ற வேண்டும் என இந்து முன்னனியினர் அறநிலையத்துறை அலுவலகத்திற்கு மனு அனுப்பியுள்ளார்.
Advertisement

தி மு க என்றாலே இந்து விரோத அரசு என்பதை கட்சி புள்ளிகள் அனைவரும் நன்றாக தெரிந்து வைத்திருப்பதால் அவர்களும் இயன்ற அளவு கொள்ளை அடிப்பதை நடைமுறை படுத்துகிறார்கள். இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்து அறநிலையத்துறையையும், அரசையும் நீக்க பாடு பட வேண்டும்.