Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு

Advertisement


 அ.தி.மு.க., மேடையில் ஏற அ.ம.மு.க.,வினர் மறுப்பு ஏன்?

 அ.தி.மு.க., மேடையில் ஏற அ.ம.மு.க.,வினர் மறுப்பு ஏன்?
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கூட்டணிக்குள் வந்தபோதும், அ.தி.மு.க.,வுக்காக ஓட்டு கேட்க, அ.ம.மு.க.,வினர் தயங்குவது, அ.தி.மு.க.,வினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இதுகுறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
'பழனிசாமியுடனான பகையை மறந்து, பங்காளி ஆகிவிட்டோம்' என தினகரன் சொல்லி, ஒரு மாதம் ஆகப்போகிறது. அதன்பின், பழனிசாமியும், தினகரனும் எந்த நிகழ்ச்சியிலும் ஒன்றாக கலந்து கொள்ளவில்லை. இரு கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இடையே இன்னும் பிணைப்பு ஏற்படவில்லை. சமீபத்தில் தஞ்சாவூர் சென்ற பழனிசாமி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
அதில் கலந்து கொள்ளுமாறு, அ.ம.மு.க., நிர்வாகிகளுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது. ஆனால், யாருமே கலந்து கொள்ளவில்லை.
இதுகுறித்து அவர்களிடம் கேட்டால், 'உங்கள் மேடையில் ஏற, தினகரன் இன்னும் அனுமதி கொடுக்கவில்லை' என்கின்றனர். இதிலிருந்து, தினகரன் உட்பட அ.ம.மு.க., நிர்வாகிகளுக்கு, பழனிசாமி மீதான கோபம் இன்னும் தணியவில்லை என்பது தெரிகிறது.
குறிப்பாக, அ.ம.மு.க.,வுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் மட்டும் வேலை செய்யவும், அ.தி.மு.க.,வுக்கு பிரசாரம் செய்யக்கூடாது எனவும் அக்கட்சியினர் முடிவு செய்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

Advertisement