Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு

Advertisement


பா.ஜ., போட்டியிடும் தொகுதிகள்: இன்று தேர்வு செய்கிறார் அமித் ஷா

பா.ஜ., போட்டியிடும் தொகுதிகள்: இன்று தேர்வு செய்கிறார் அமித் ஷா
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கு, பா.ஜ., போட்டியிடும் தொகுதிகளை, இன்று, திருச்சி வரும், அமித் ஷா தேர்வு செய்ய உள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு, அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், பா.ஜ., - பா.ம.க., - அ.ம.மு.க., - த.மா.கா., புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி போன்றவை இடம் பெற்றுள்ளன. பா.ஜ.,வுக்கு, 30 தொகுதிகள் வழங்க, அ.தி.மு.க., தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, புதுச்சேரி காரைக்காலில் நடக்கும் பா.ஜ., நிகழ்ச்சியில் பங்கேற்க, இன்றிரவு திருச்சி வருகிறார். அவர், திருச்சியில், தமிழக சட்டசபை தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல், தமிழக பா.ஜ., மாநில மையக்குழு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
அப்போது, அ.தி.மு.க.,விடம் கேட்க வேண்டிய தொகுதிகளின் விபரங்களை, தமிழக நிர்வாகிகள், அமித் ஷாவிடம் தெரிவிக்க உள்ளனர். அதனுடன், ஏற்கனவே தமிழகத்தில் வெற்றி வாய்ப்பு உள்ளதாக, உளவுத் துறை அளித்துள்ள பட்டியலுடன், அமித் ஷா ஒப்பிட்டு பார்த்து, பா.ஜ.,வுக்கான தொகுதிகளை தேர்வு செய்ய உள்ளார். இந்த தொகுதிகளை, தொகுதி பங்கீடு பேச்சின் போது, அ.தி.மு.க.,விடம் கேட்க, பா.ஜ., முடிவு செய்துள்ளது.

Advertisement

பிப் 13, 2026 08:59 am

எடப்பாடி தலைமையில் நிச்சயம், தாமரை ஆட்சி, தமிழ் நாட்டில் மலரும்...

Reply Rate this
பிப் 13, 2026 07:47 am

திருட்டு திராவிடனுக்கு எரியுது பாருங்களேன்.. அவுங்களும் எத்தினி நாளைக்கு தான் குட்டார் கோழி பிரியாணிக்கு மாரடிப்பானுங்க ...

Reply Rate this
பிப் 13, 2026 07:39 am

எதிர்கட்சிகளின் பூத் ஏஜெண்ட்கள் விலை போகாமல், விழித்து வேலை பார்த்து, மக்களின் எண்ணங்களுக்கு சரியாக செயல்படவேண்டும்

Reply Rate this
பிப் 13, 2026 07:07 am

தேர்தல் இறுதி நாள்வரை இந்த கூட்டணியின் ஒட்டுதல் பற்றியெல்லாம் உறுதிபட சொல்லவே முடியாது. பழனிச்சாமி பற்றி அமீத்ஷாவுக்கு தெரியவில்லை. தன்னை எம் ஜி யார் என்று எண்ணிக்கொண்டு செயல்படுகின்றார் .


கேட்கும் தொகுதிகளில் முப்பது சதவிகிதம் அளவுக்கு கூட இறங்கிவர மாட்டார் இந்த பழனிச்சாமி. தொகுதி பங்கீட்டில் சுயரூபத்தை காட்டப்போகிறார் அவர். திமுகவின் வெற்றிக்கு அவரது செயல்பாடுகள் நிறைய நடந்துகொண்டே இருக்கிறது. தேர்தலில் வெற்றிபெற அவர் நினைத்ததே இல்லை.


பொறுத்திருந்து பாருங்களேன். அமீத்ஷா அவர்களின் தமிழக அரசியல் பார்வையில் அவர் ஏமாற்றப்பட்டார் அல்லது பாடம் கற்றுக்கொண்டார் என்று நிச்சயம் சொல்வார்.


பாஜக பல தொகுதிகளில் வெற்றி நிச்சயம் என்கிற தொகுதிகளில் நிறைய அதிமுகவினரால் தடுக்கப்படும் அல்லது நிராகரிக்கப்படும்

Reply Rate this
பிப் 13, 2026 05:24 am

தொகுதியை கேளுங்கள் தரப்படும் ஈடி,சிபிஐ விட்டு தட்டுங்கள் கல்லா திறக்கப்படும் வேட்பாளரை தேடுங்கள் கிடைக்கும் என்றார், அமீத்சா, தேடுங்கள் கிடைக்கும் என்றார்.

Reply Rate this
இருநூறு கொடுத்தால் கொத்தடிமைகள்.இலவசம்....benaras இல்.கூட.கிடைக்கும்
பிப் 13, 2026 05:59 am
Rate this
திருட்டு கூட்டத்திற்கு எங்கு எரிந்தாலும் பர்ன்னால் இலவச திட்டம் உள்ளது பப்பு மற்றும் பாலிடாயிடம் கேட்டு வாங்கி
பிப் 13, 2026 06:28 am
Rate this
Senthoora - Sydney
அப்போ நீங்க கோபாலபுரத்தில் போட்டிபோட ரெடியா?
பிப் 13, 2026 07:14 am
Rate this
பிப் 13, 2026 03:56 am

பங்காளிகள் வேண்டுமா அல்லது பாஜக வேண்டுமா என்றால் பங்காளிகள்தான் வேண்டும் என்று தீம்க்காவினர் சொல்கிறார்கள்.

Reply Rate this

நூறுதொகுதிகளில் பிஜேபி ஜெயிக்கும் வாய்ப்புள்ளது. குறைந்தது ஐம்பது தொகுதிகள் பெற்று இருக்கலாம். அதிக தொகுதிகளை வைத்துக்கொண்டு எடப்பாடி ஜெயிக்க முடியுமா?

Reply Rate this
sundar - xhennai
அபார கற்பனை.
பிப் 13, 2026 07:36 am
Rate this
யாரப்பா அங்கே, அந்த தாமரை ஐ கொஞ்சம் எழுப்புங்கள்..
பிப் 13, 2026 08:29 am
Rate this