தேர்தல் சமயத்தில் சொத்துக்கள் ஏலம்: வீட்டுவசதி சங்கங்களுக்கு அவசரம் ஏன்?
சென்னை: தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள், 17 இடங்களில் சொத்துக்களை ஏலம் விடும் பணிகளை துவக்கியுள்ளன.
தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி, 680 வீட்டுவசதி சங்கங்கள் செயல்பாட்டில் உள்ளன. இந்த சங்கங்களில் விற்காமல் கைவசம் உள்ள நிலம் உள்ளிட்ட அசையா சொத்துக்களை, பொது ஏலம் வாயிலாக விற்க, தமிழக அரசு கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது. இதன்படி, அத்தகைய சொத்துக்களுக்கு மதிப்பு நிர்ணயிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகியும், சொத்து விற்பனை பணிகளை, சங்க நிர்வாகிகள் மேற்கொள்ளாமல் இருந்தனர். தற்போது, ஒரே சமயத்தில், ஆறு மாவட்டங்களில், 17 இடங்களில் சொத்துக்களை ஏலம் விட, கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.
கூட்டுறவு வீட்டுவசதி சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: வீட்டுவசதி சங்கங்களில் இருப்பில் உள்ள சொத்துக்களை ஏலம் விட அரசு அனுமதித்தும், கடந்த ஓராண்டுக்கும் மேலாக அதிகாரிகள், இதற்கான பணிகளை துவக்கவில்லை. அடுத்த சில வாரங்களில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், ஏல அறிவிப்பை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
வேலுாரில், 6, சேலம், 4, தஞ்சாவூர், கோவை, விருதுநகர் மாவட்டங்களில் தலா, 2, திருச்சியில் ஒன்று என மொத்தம், 17 இடங்களில் சொத்துக்கள் ஏலம் விட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தால், இது தொடர்பான பணி முடங்க வாய்ப்புள்ளது. அந்தந்த பகுதியில் ஆளும் கட்சி பிரமுகர் களுக்கு ஆதரவாக செயல்படும் நோக்கில், சங்க சொத்துக்கள் ஏலம் விடப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இது குறித்து, துறையின் மேலதிகாரிகளுக்கு புகார்கள் சென்றுள்ளன. தேர்தல் சமயத்தில் அவசரகதியில் இந்நடவடிக்கை தேவையா என்பதை, அதிகாரிகள் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement
திரும்ப ஆட்சிக்கு வர வாய்ப்பு குறைவு என்று யாராவது காதில் ஊதியிருப்பார்கள்... முடிந்த வரை வந்ததை சுருட்டுவோம் என்று முடிவு செய்து இருக்கலாம். அவசர கதி ஊழல் ஆபத்தில் முடியும் என்பதை தீம்க்கா அறியாது...
நல்ல அரசுடா இது பணம், பாத்திரம், ஏலத்தில் வீடுகள், பிரியாணி சாப்பாடு, போக வர பஸ்ஸில் இலவசம் அனுமதி, வேட்டி, புடவை, எல்லாமே இலவசமாக கொடுத்தகு நாட்டையே கடனாளியாக ஆக்கிவிட்டு திரும்ப ஆட்சிக்கு வருவோம் என்று மட்டும் நினைக்க வேண்டாம் அடுத்த ஆட்சி வந்ததுமே முதலில் எல்லா அமைச்சர் களின் சொத்து விவரம், அதாவது அவரவர்கள் அமைச்சராக ஆட்சியில் காலடி எடுத்த்க்கு வைத்தது முதல் ஆட்சி போகும் வரையில் எவ்வளவு சொத்துபத்துக்கள் என்ற விவரம் கேட்கப்படும் பிறகு சிறை என்ற கைலாசம் போவார்கள் அதானைய்யா சிறைச்சாலைக்குத்தான் பிறகு சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தும் அவர்களிடமிருந்து பிடுங்கி அரசாங்கத்திற்கு சேர்ந்துவிடும்

தேர்தல் செலவுக்கு காசு வேணுமே. அடுத்தமுறை ஆட்சிக்கு வரவில்லை என்றால். எல்லாம் ஒரு முன்னேற்பாடு