Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு

Advertisement


 மருத்துவ படிப்புக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு யார் காரணம்?

 மருத்துவ படிப்புக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு யார் காரணம்?

'அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் வழங்கப்படும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை, நாங்கள் தான் செயல்பாட்டுக்கு கொண்டு வந்தோம்' என, சென்னையில் நேற்று நடந்த தனியார் மகளிர் கல் லுா ரி விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேச, அதற்கு மிக கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி. 'ஏழை, எளிய, நடுத்தர மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்றுவதற்காக, என் மனதில் உதித்த திட்டம்தான், 7.5 சதவீத இட ஒதுக்கீடு' எனக்கூறி கொந்தளித்திருக்கிறார்.

முதல்வர் ஸ்டாலினின் பேச்சும், அதற்கு பதிலடி கொடுத்து பழனிசாமி வெளியிட்ட அறிக்கையும்:

முதல்வர் ஸ்டாலின் பேச்சு:

'புதுமைப் பெண்' திட்டத்தால், உயர் கல்வி படிக்கும் பெண்களின் எண்ணிக்கை, 34 சதவீதம் அதிகரித்துள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக மாதம் 1,000 ரூபாய் கிடைப்பதால், படிப்பை கைவிட்ட பெண்கள் கூட, மீண்டும் கல்லுாரியில் சேர்ந்துள்ளனர் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
கடந்த ஆட்சியில், மருத்துவப் படிப்பில் மட்டும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வந்தனர். நாங்கள் தான் அதற்காக தொடர் போராட்டம் நடத்தி, அதை செயல்பாட்டுக்கு கொண்டு வந்தோம். தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், பொறியியல், வேளாண்மை, சட்டம், கால்நடை மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளிலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத இட ஒதுக்கீடு செயல்படுத்தப்பட்டது.
இந்த 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தேர்வாகும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் எல்லாவற்றையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் அறிவித்தோம். கடந்த ஐந்து ஆண்டுகளில், 40,613 மாணவர்களுக்கு, 911 கோடி ரூபாய் செலவிட்டுள்ளோம்.
இந்த இட ஒதுக்கீட்டால் பயனடைந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பார்வதி என்ற மாணவி, 'என் அப்பா டீக்கடையில் வேலை பார்க்கிறார். எனக்கு, இந்த இட ஒதுக்கீட்டால், எம்.ஐ.டி.,யில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. படிப்பை முடித்து, தற்போது நல்ல வேலையில் இருக்கிறேன்' என கூறியுள்ளார்.
இப்படி ஐந்தே ஆண்டுகளில், பல குடும்பங்களின் தலையெழுத்தையே நம் தி.மு.க., அரசின் திட்டங்கள் மாற்றியுள்ளன.

பழனிசாமி அறிக்கை:

அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய, நடுத்தர மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்றுவதற்காக, என் மனதில் உதித்த திட்டம்தான், 7.5 சதவீத இட ஒதுக்கீடு.
இந்த மசோதாவுக்கு கவர்னரின் ஒப்புதல் கிடைக்க காலதாமதமானது. அதனால், அரசியலமைப்புச் சட்ட உரிமையை பயன்படுத்தி, நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழகத்தில், 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை நிறைவேற்றி, அரசாணை வெளியிட்டேன்.

சத்துணவு திட்டம் என்றால் எம்.ஜி.ஆர்., தொட்டில் குழந்தை திட்டம் என்றால் ஜெயலலிதா, '7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு என்றால் பழனிசாமி என்று, அ.தி.மு.க., அரசின் சாதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

நான் முதல்வராக இருந்தபோது, சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தனியார் பங்களிப்புடன் அமல்படுத்தினோம். இந்தத் திட்டத்தையே உல்டாவாக்கி, முதல்வர் ஸ்டாலின், புதிதாகக் கொண்டு வந்ததுபோல் தம்பட்டம் அடித்து வருகிறார்.

கடந்த 2021 முதல் நான்கரை ஆண்டு காலமாக துாங்கி விட்டு, 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி, இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக, முதல்வர் ஸ்டாலின் மாற்றியுள்ளார்.

நிதி ஆதாரத்தை அதிகரிக்க, எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துவிட்டு, ஆட்சி முடியும் தருவாயில், கடந்த மூன்று மாதங்களாக நிதி ஒதுக்கீடு செய்யாமலேயே, பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது, ஒப்பந்தம் கோருவது என, மக்களின் வரிப்பணத்தில் விளம்பரம் தேடி பொய் பேசி வருகிறார் ஸ்டாலின்.

-நமது நிருபர்-

Advertisement

பிப் 11, 2026 09:40 am

பொய் சொல்லலாம்! அதுக்காக இப்படி ஏக்கர் கணக்கில எல்லாம் புளுகக்கூடாது! அடுத்தவன் பெத்த பிள்ளைக்கு தான் பெயர் வைக்க கொஞ்சம் கூட வெட்கம், கூச்சம் இல்லையா? தோல்வி பயம் இப்படி என்னென்னவெல்லாமோ பேச வக்கிது!

Reply Rate this
பிப் 11, 2026 05:54 am

ஸ்டிக்கர் என்றாலே ஸ்டாலின், ஸ்டாலின் என்றாலே ஸ்டிக்கர் மட்டும் தான்

Reply Rate this