அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்
ரிஷிவந்தியம்: வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
தேர்தல் நடத்தும் அலுவலர் சுமதி தலைமை தாங்கினார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வெங்கடேசன், பசுபதி, உதவி செலவின பார்வையாளர் பாபு, எஸ்.ஐ., பிரபாகரன் முன்னிலை வகித்தனர். தேர்தல் துணை தாசில்தார் சதீஷ்குமார் வரவேற்றார்.
கூட்டத்தில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை அனைத்து கட்சியினரும் பின்பற்ற வேண்டும். தேர்தல் தொடர்பான புகார்களை 'சி விஜில்' செயலியில் பதிவு செய்யும் முறை, கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறும் பட்சத்தில் 48 மணி நேரத்திற்கு முன்னதாகவே சுவிதா செயலி மூலமாக விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். பொதுக்கூட்டத்திற்கு பயன்படுத்தும் வாகனங்கள், கொடி கம்பங்கள், எவ்வளவு இருக்கைகள் என்பதையும் குறிப்பிட வேண்டும், இவை அனைத்தும் வேட்பாளர்களுக்கான செலவு கணக்கில் சேர்க்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது. பல்வேறு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்