Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் கருத்துக் கணிப்பு முடிவுகள்

Advertisement


23 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அதிமுக

23 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அதிமுக
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: வரும் சட்டசபை தேர்தலுக்கான 23 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது. எடப்பாடி தொகுதியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் போட்டியிடுகிறார்.

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற இருக்கிறது. இதையொட்டி, அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நிறைவு பெற்று விட்டது. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களைத் தவிர்த்து, அதிமுக சுமார் 165 இடங்களில் போட்டியிட இருக்கிறது. தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்ட அதிமுக, இன்று 23 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

எடப்பாடி தொகுதியில் இபிஎஸூம், தொண்டாமுத்தூர் தொகுதியில் எஸ்.பி.வேலுமணியும், விராலிமலையில் சி.விஜயபாஸ்கரும் போட்டியிடுகின்றனர். கடந்த தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட தோல்வியைத் தழுவிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், இந்த முறை மைலம் தொகுதியில் போட்டியிடுகிறார். அதேபோல, ராஜபாளையத்தில் போட்டியிட்ட ராஜேந்திர பாலாஜி, தற்போது சிவகாசியில் களமிறங்குகிறார். மற்ற 21 வேட்பாளர்களும், கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட அதே தொகுதியில் களமிறங்கியுள்ளனர்.
வேட்பாளர்களின் முழு விபரம்
எடப்பாடி - இபிஎஸ்

வேப்பனஹள்ளி - கே.பி.முனுசாமி

திண்டுக்கல் - சீனிவாசன்

நத்தம் - விஸ்வநாதன்

தொண்டாமுத்தூர் - எஸ்.பி.வேலுமணி

குமாரபாளையம் - தங்கமணி

ராயபுரம் - ஜெயக்குமார்

மயிலம் - சி.வி.சண்முகம்

மதுரை மேற்கு -செல்லூர் ராஜூ

பாலக்கோடு - கே.பி.அன்பழகன்

நன்னிலம் - காமராஜ்

வேதாரண்யம் - ஓ.எஸ்.மணியன்

விராலிமலை - சி.விஜயபாஸ்கர்

கோவில்பட்டி - கடம்பூர் ராஜூ

திருமங்கலம் - ஆர்.பி.உதயகுமார்

சிவகாசி - ராஜேந்திரபாலாஜி

மதுரவாயல் - பென்ஜமின்

கலசபாக்கம் - அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி

திருப்பரங்குன்றம் - ராஜன் செல்லப்பா

பவானி - கருப்பணன்

ஜோலார்பேட்டை - கே.சி. வீரமணி

கரூர் - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

அரியலூர்- தாமரை எஸ்.ராஜேந்திரன்

Advertisement

மார் 25, 2026 12:46 pm

அனைவரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

Reply Rate this
மார் 25, 2026 12:19 pm

சரிங்க EPS. ஜெயிக்கிறவங்களுக்கு அப்படிதான் இழுபறியா இருக்கும்... நீங்க தோற்கத்தானே போறீங்க.. எப்படி இருந்தா என்ன?

Reply Rate this
HoneyBee - Chittoir
அடிமைகளுக்கு ₹200 குவார்ட்டர் பிரியாணி கூட்டத்துக்கு...
மார் 25, 2026 01:29 pm
Rate this
மார் 25, 2026 11:53 am

அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற கோவை மக்களின் சார்பாக எனது மனப்பூர்வ வாழ்த்துக்கள்

Reply Rate this
மார் 25, 2026 11:27 am

அட வெற்றிகரமாக அமித்ஷாவை ஏமாற்றி குறைந்த அளவே தொகுதிகளை கொடுத்ததற்கு வாழ்ந்த்துக்குள் திரு எடப்பாடி அவர்களே நீங்களும் தீமூக்காவும் உள்குத்து வெளிக்குத்து பார்ட்டிங்க என்பது நன்றாக புரிந்தது

Reply Rate this
மார் 25, 2026 11:26 am

தன்னுடைய அமைச்சரவை என்பதை சொல்லாமல் சொல்கின்றார் ....

Reply Rate this
மார் 25, 2026 11:17 am

அனைவரும் அமைச்சராக தகுதியானவர்கள். மற்ற வேட்பாளரிகளின் வெற்றி இவர்கள் கையில்தான் உள்ளது என்பதை எடப்பாடி அறிந்துள்ளார்

Reply Rate this
மார் 25, 2026 11:16 am

இரண்டு கட்சிகளுக்கும் குறுநில மன்னர்களுக்கும் இடையில் போட்டா போட்டி. ஒருவன் மலையை தின்று ஏப்பம் விடுவான். இன்னொருவன் மலைக்கும் கீழே சென்று பூமிக்கு அடியில் என்ன இருக்கு என்று தேடுவான். தமிழ்நாட்டின் தலைவிதி இது.

Reply Rate this
மார் 25, 2026 11:11 am

வாழ்த்துக்கள்

Reply Rate this
மார் 25, 2026 11:10 am

இப்ப இருக்கும் அரசியல் எல்லாமே சாக்கடை, இதுலே என்ன நல்ல சாக்கடை, கெட்ட சாக்கடை? யார் வந்தாலும் நல்லது நடக்கவே நடக்காது, இந்த நாட்டில் இலவசம் இருக்கும் வரை நாம் அழிந்து கொண்டு இருக்கிறோம் என்று பொருள். நாம் உழைத்தான்தான் நம் குடும்பத்தை காப்பாற்ற உடையும்.

Reply Rate this
மார் 25, 2026 10:54 am

அதிமுக கூட்டணியில் யாரை நிறுத்தினாலும் வெற்றிபெறச் செய்யும் அளவுக்கு மக்கள் திமுக கூட்டணி மீது கோபத்திலும், வெறுப்பிலும் உள்ளனர்....

Reply Rate this